இதுவரை வெறும் யூகங்களாக மட்டுமே பேசப்பட்டு வந்த தவெக தலைவர் நடிக் விஜய் குறித்த குடும்ப விவகாரம் இன்று வீதிக்கு வந்து விட்டது. உண்மையா பொய்யா என்றே தெரியாமல் பேசப்பட்டு வந்த பல விவகாரங்கள் விஜயின் மனைவி சங்கீதா வாயிலாக அவை அனைத்தும் 100 சதவீதம் உண்மைதான் என்று வெளியுலகத்துக்கு வெட்ட வெளிச்சமாகி விட்டது.
இனி விஜயுடன் வாழ விருப்பமில்லை என்று செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு மனுதாக்கல் செய்த சங்கீதா, விஜய் குறித்த பல அதிர்ச்சிக்கரமான குற்றச்சாட்டுகளை அடுக்கி தள்ளியிருக்கிறார்.அந்த மனுவில் சங்கீதா கூறுகையில், நடிகை ஒருவருடன் விஜய் திருமணத்தை மீறிய உறவில் இருந்தது 2021 ஏப்ரல் மாதம் எனக்கு தெரிய வந்தது.

நான் கண்டுபிடித்த பிறகும் அந்த நடிகையுடன் உறவை விஜய் தொடர்ந்து வந்தார். நான் கண்டுபிடித்த பிறகு நடிகையுடன் இருந்த உறவை முறித்துக் கொள்வதாக விஜய் உறுதியளித்தார். ஆனால் அந்த நடிகையுடன் உறவை விஜய் தொடர்ந்ததால் நான் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டேன். நடிகையுடன் அவரது உறவை கண்டுபிடித்த பிறகு விஜயால் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்தேன். பலமுறை வலியுறுத்தியும் இரக்கமே இல்லாமல் அந்த உறவை விஜய் தொடர்ந்தார். 2021ம் ஆண்டு ஏப்ரல் முதல் மனதளவிலும் உணர்வு பூர்வமாகவும் விஜய் என்னைப் பிரிந்து வாழ்ந்து வருகிறார்.
விஜயின் தவறான உறவால் 2021ம் ஆண்டு முதல் ஒரே வீட்டில் இருந்தாலும் தனித்தனியாக வாழ்ந்து வருகிறோம். எனது கணவர் தொடர்ந்து அந்த நடிகையுடன் வெளிநாடு செல்கிறார். பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். என் கணவருடன் வெளிநாடுகளுக்கு செல்லும் நடிகை இருவரும் சேர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
என் கணவருடன் இருக்கும் புகைப்படங்களை நடிகை வெளியிட்டு வருவது எனக்கு அவமானத்தை தருகிறது. இதனால் என் குழந்தைகளும் நண்பர்கள் உறவினர்கள் மத்தியில் அவமானத்தை சந்திக்கின்றனர். மேலும் என் கணவர் என்னுடன் தாம்பத்திய உறவை தவித்தார் என்று பலவிதமான குற்றச்சாட்டுகளை விஜய் மீது சங்கீதா கூறியிருக்கிறார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுஜாதா, வருகிற ஏப்ரல் 20ம் தேதி நடக்கும் விசாரணைக்கு வக்கீல் இல்லாமல் நடிகர் விஜய் நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளார். கடந்த 5 ஆண்டுகளாக மௌனம் காத்து வந்த சங்கீதா இப்போது இந்த குற்றச்சாட்டுகளை அடுக்கி விவாகரத்து கேட்பது ஏன் என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது. பரஸ்பர மதிப்பு மரியாதை குறைந்து விடும் என்பதற்காக இதுவரை பொறுமை காத்ததாக கூறும் சங்கீதா இப்போது புயலாக மாறி பிரச்னையை கிளப்பியது ஏன் என்று புரியாமல் இல்லை.
திமுக குடும்பத்தை சேர்ந்த முக்கிய உறுப்பினர் முரசொலி செல்வம் மறைந்த போது விஜயின் சங்கீதா துக்கம் விசாரிக்க அங்கு சென்று வந்தார். அப்போதே அந்த வீடியோ புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. விஜயின் அரசியல் எதிரி திமுக குடும்பத்தில் துக்க நிகழ்வுக்கு சங்கீதா தனியாக சென்றது ஏன் என்று அப்போதே பலரும் இதை விமர்சிக்க துவங்கினர்.
கரூர் சம்பவம் பனையூர் பண்ணையார் பாஜகவின் மறைமுக டீம் என பலவிதமான சேறுகளை விஜய் மீது அள்ளிய வீசிய போதும் அவரது செல்வாக்கு மக்கள் மத்தியில் குறையாத நிலையில் கடைசி அஸ்திரமாக அவரது மனைவி சங்கீதா மூலமாக கடைசி அம்புவை பாய விட்டுள்ளனர். அரசியல் சதுரங்க ஆட்டத்தில் எப்படியாவது விஜயை தேர்தல் களத்தில் இருந்து அவுட்டாக்கி விட வேண்டும் என்ற இந்த பிளான் ஒர்க் அவுட் ஆகுமா, புஸ்வாணமாக போகுமா என்பது தேர்தல் முடிவில் தெரிந்து விடும்.

