அதிமுக பாஜகவுடன் இணைந்து சட்டசபை தேர்தலை எதிர்கொள்கிறது. திமுகவின் மைனஸ் எல்லாம் தங்களுக்கு பிளஸ் ஆக மாறும் என்று அதிமுக வலிமையாக நம்புகிறது. எம்ஜிஆர் ஜெயலலிதாவின் மங்காத புகழ் எப்படியும் தங்களுக்கான வெற்றியை அதிக தொகுதிகளில் உறுதிப்படுத்தும் என்று எடப்பாடி பழனிசாமி கணக்கு போடுகிறார். அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் ரூ. 10 ஆயிரம் கருணை தொகை வழங்கப்படும் என அறிவித்து மக்களின் கவனத்தை தன்பக்கம் வேகமாக திருப்பியுள்ளார்.
இப்படி திமுக அதிமுக கட்சிகளுக்கு இடையில் தான் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை பிடிக்கப் போவது இந்த முறை நாங்க தான். 1966ல் அண்ணா முதல்வரானதும் 1977ம் ஆண்டில் எம்ஜிஆர் ஆட்சியை பிடித்த தேர்தல் புரட்சியை போல் 2026ம் ஆண்டிலும் தவெக புரட்சி நடக்கும். இதில் முதலமைச்சராக விஜய்தான் வெற்றி பெறுவார் என்றும் அறைகூவல் விடுத்து வருகிறது. ஆனால் ஆரம்பம் முதலே பல சர்ச்சைகளை விமர்சனங்களை தவெக சந்தித்து வருகிறது.

அதிலும் அந்த கட்சியின் தலைவர் விஜய் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் வலுவானதாக மட்டுமின்றி உண்மையானதாகவும் இருக்கின்றன. அதிலும் குறிப்பாக பனையூர் பண்ணையார், வீட்டை விட்டு வெளியே வர மாட்டார் என்பதுதான். கரூரில் நடந்த துயர சம்பவத்தின் போது ஓட்டம் பிடித்த விஜயின் மனப்போக்கு, பாதிக்கப்பட்டவர்களை அவர் நேரில் சந்திக்காமல் பனையூர் அலுவலகத்துக்கு நேரில் வரவழைத்து ஆறுதல் சொன்னது என பல புகார்கள் இருக்கின்றன.
இவற்றை எல்லாம் தூக்கி சாப்பிடும் விதமாக அவரது மனைவி சங்கீதாவே இப்போது ஒரு பெரிய அணுகுண்டை தவெக கூடாரத்தின் மீது போட்டிருக்கிறார். பிரபல நடிகையுடன் விஜய் திருமணத்தை மீறிய உறவு கொண்டிருக்கிறார். 5 ஆண்டுகளாக ஒரே வீட்டில் பிரிந்து வாழ்கிறோம். எனக்கு இனி அவருடன் வாழ விருப்பம் இல்லை என்று செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விவகாரத்து கேட்டு மனுதாக்கல் செய்திருக்கிறார்.
வருகிற ஏப்ரல் மாதம் 20ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு நேரில் விஜய் ஆஜராக வேண்டும். அதுவும் வக்கீல் இல்லாமல் அவர் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி சுஜாதா உத்தரவிட்டுள்ளார். இந்த சூழலில் அந்த நடிகை பெயரை இதுவரை சங்கீதா வெளியே சொல்லாத நிலையில், தயவு செய்து சொல்லிடாதீங்க என்று விஜய் தரப்பில் இருந்து சங்கீதாவுக்கு கோரிக்கை பறந்துள்ளது.
ஆனால் அந்த நடிகை யார் என்பது நாடறிந்த ரகசியம்தான். 10 வயது பையனை கேட்டால் கூட சொல்லும் அளவுக்கு விஜய்க்கும் அந்த நடிகைக்கும் இருக்கும் உறவு எப்போதோ வெளிச்சத்துக்கு வந்த விஷயம்தான். இப்போது இருக்கிற முக்கிய பிரச்னை என்னவென்றால், இத்தனை விவகாரங்களையும் தாண்டி தவெக கட்சி தேர்தலில் ஜெயிக்க வேண்டும். விஜய் முதலமைச்சராக வேண்டும். தூய சக்தி தூய சக்தி என்று மார் தட்டி ஈரோடு தவெக கூட்டத்தில் பேசிய விஜயை பார்த்து, உங்க குடும்ப வாழ்க்கையே தூய்மையா இல்லையே தளபதி என்றுதான் பலரும் விமர்சித்து வருகின்றனர்.
திமுகவின் கூட்டணி பலம், பண பலம், கட்சி படை, அதிமுக என்கிற பலமுறை ஆட்சி செய்த கட்சி எம்ஜிஆர் ஜெயலலிதா செல்வாக்கு என இரண்டு பெரிய ஆளுமைகள் சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளும் நிலையில், விசிலடிச்சான் குஞ்சுகளுடன் விசில் சின்னத்தில் போட்டியிடும் தளபதிக்கு, மக்களின் பேராதரவு எதிர்பார்த்தபடி கிடைக்குமா, கடைசியாக சங்கீதா போட்ட அணுகுண்டு தவெக கூடாரத்தையே கிடுகிடுக்க வைத்த நிலையில் விஜய் கட்டிய கோட்டை எல்லாம் நனவாகுமா, அல்லது எல்லாமே கனவாகி போய்விடுமா என்பதுதான் பெரிய கேள்வியாக உள்ளது.

