சங்கீதாவுக்கு அனுப்ப பட்ட தூது…. என்னுடைய பொது வழக்கையே நாசமாகி விடும்… கதறும் விஜய்…

0
Follow on Google News

ஆளுங்கட்சி திமுகவை அரசியல் எதிரி என்றும் மத்தியில் ஆளும் பாஜகவை கொள்கை எதிரி என்றும் மேடைகளில் பேசி தமிழக மக்களின் கவனத்தை ஈர்த்த தவெக தலைவர் நடிகர் விஜய், வருகிற தேர்தலில் தவெக திமுக என்ற 2 கட்சிகளுக்கு இடையே தான் போட்டியே என்று சவால் விட்டு வந்தார். ஆனால் இப்போது விஜய் மனைவி சங்கீதாவுக்கும், விஜயுடன் தொடர்பில் அந்த நடிகைக்கும் இடையே தான் போட்டியே என கலாய்க்கும் அளவுக்கு ஒரு பெரிய பிரளயமே நடந்து விட்டது.

அப்படி இருக்கும்போது சரியான நேரம் பார்த்து விஜயின் மனைவி சங்கீதா செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்ட மனு வெளியாகி தமிழக மக்களிடையே பூகம்பத்தை கிளப்பியுள்ளது. நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவில் இருக்கிறார். 5 ஆண்டுகளாக ஒரே வீட்டில் இருவரும் பிரிந்து வாழ்கிறோம். இந்த வீட்டில் மனைவிக்கான எந்த உரிமையும் எனக்கு இல்லை. உடல் அளவில் மனதளவில் இருவரும் பிரிந்து வாழ்கிறோம் என்று பல விஷங்களை சங்கீதா அதில் கூறியிருக்கிறார்.

திருமண வாழ்க்கையை பொருத்த வரை ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழும் போது குடும்பத்தில் பலவிதமான பிரச்னைகள் சண்டை சச்சரவுகள் கருத்து வேறுபாடுகள் ஏற்படுவது இயற்கையான ஒரு விஷயம்தான். எந்த குடும்பத்திலும் சண்டை சச்சரவுகள் இல்லாத ஒரு சூழல் எப்போதுமே இருந்தது இல்லை. சாதாரண மனிதனின் துவங்கி சரித்திரம் பேசும் மனிதன் வாழ்க்கை வரை குடும்ப விவகாரங்கள் என்பது இல்லாமல் இருந்தது இல்லை.

அதனால் விஜய் குடும்ப விவகாரத்தில் பலரும் பலவிதமான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இது தவறான ஒரு மனப்போக்கு தான். இதுகுறித்து ஒரு சிலர் தரப்பினர், இது அவரது தனிப்பட்ட வாழ்க்கை. அதுகுறித்து விமர்சித்து பேசக்கூடாது. அரசியல் ரீதியான எதிர்ப்புதான் சரியானது என்று கூறுகின்றனர். தனி மனித வாழ்க்கையில் அவர்களது அந்தரங்க விஷயங்களில் எல்லாம் விமர்சனம் செய்ய யாருக்கும் உரிமை இல்லை என்பதும் இதில் கவனிக்கத்தக்கது.

தமிழக அரசியல் களத்தில் மிகவும் கவனிக்கப்படும் ஒரு ஆளுமையாக உள்ள விஜயை குறி வைத்து அவர் பெயரை கெடுக்கும் நோக்கத்தில் இந்த விவாகரத்து மனு வெளியாகி உள்ளது. இதில் அவரது மனைவி சங்கீதா, திருமணத்திற்கு மீறிய உறவில் விஜய் ஒரு நடிகையுடன் இருப்பதாகவும் அது தொடர்வதால் தான் விவாகரத்து கேட்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேற்கொண்டு தனக்கு இந்த விவாகரத்து ரீதியாக விஜய் தரப்பில் இருந்து அழுத்தம் வந்தால் கட்டாயம் அவருடன் இருக்கும் நடிகை யார் என்பதையும் கூறுவேன் என்றும் மனுவில் சங்கீதா கூறியிருக்கிறார்.

சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் இந்த வழக்கு குறித்த மனு தவெக தலைவர் விஜய்க்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் வகையில் ஆளுங்கட்சி மறைமுகமாக இந்த வேலையை பார்த்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். குடும்ப ரீதியான தாக்குதல் விஜயின் சமநிலையை கண்டிப்பாக தடுமாற வைக்கும். மேலும் குடும்ப உறவுகளே விஜய்க்கு எதிராக திரும்பினால் அது மக்களின் மனதிலும் பெரிய தாக்கத்தை மாற்றத்தை உருவாக்கும் என்றும் ஆளுங்கட்சி இந்த அஸ்திரத்தை எடுத்திருப்பதாகவும் கூறுகின்றனர்.

இதை விவகாரத்தை சரிகட்ட விஜய் அடுத்த கட்ட நடவடிக்கையை இப்போது எடுத்து வருகிறார். இந்த வழக்கு தொடர்பாக வரும் ஏப்ரல் 20ம் தேதி கோர்ட்டில் நேரில் ஆஜராகுமாறு செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்ற நீதிபதி சுஜாதா உத்தரவிட்டுள்ளார். அதற்குள் சங்கீதா தரப்பிடம் சமாதான நிலையை அறிவித்து சமூகமாக கொண்டு செல்ல வேண்டும் என்று விஜய் தரப்பு அணியில் பேச்சுவார்த்தை நடத்த முயற்சித்து வருகிறார்கள். விவகாரத்தை மேலும் முற்ற விடாமல் சுமூகமான முறையில் விவாகரத்து இல்லாமல், வாழ்க்கை வாபஸ் பெற்று விட கோருகின்றனர். ஆனால் வழக்கை வாபஸ் பெற சங்கீதா சம்மதிப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.