கடந்த ஒரு வாரமாக விஜய் சங்கீதா விவாகரத்து குறித்த செய்திகள் தான் ஊடகங்களில் பரபரப்பாக வைரலாகி வருகின்றன. இதுகுறித்த மற்றொரு முக்கிய தகவலும் இப்போது வெளியாகி பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்து சில ஆண்டுகளாகவே விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையே கருத்து வேறுபாடு நிலவி வருவதாகவும், இருவரும் தனித்தனியே பிரிந்து வாழ்வதாகவும் ஒரு தகவல் கிசுகிசு வடிவில் உலா வந்தது.
இந்நிலையில் இப்போது அது எல்லாம் பொய்யல்ல… அதிகாரபூர்வமான உண்மை என்று முடிவாகி சட்டப் போராட்டமாகவும் உருவெடுத்து விட்டது. லண்டனை சேர்ந்த தொழிலதிபர் மகள் சங்கீதா நடிகர் விஜயை காதலித்து கடந்த 1999ம் ஆண்டு கரம் பிடித்தார். இவர்களுக்கு ஜேசன் சஞ்சய் என்ற மகனும் திவ்யா சாஷா என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக கணவன் மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.

இப்படிப்பட்ட ஒரு சூழலில்தான் செங்கல்பட்டு மாவட்ட குடும்ப நல நீதிமன்றத்தில் சங்கீதா தாக்கல் செய்த விவாகரத்து மனு, ஒட்டுமொத்த தமிழக மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த விவாகரத்து வழக்கின் பின்னணியில் பல்வேறு அதிர வைக்கும் காரணங்கள் முன் வைக்கப்படுகின்றன. குறிப்பாக தமிழ் சினிமாவில் உள்ள ஒரு பிரபல நடிகையுடன் விஜய்க்கு தொடர்பு இருப்பது சங்கீதாவை மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கி உள்ளது.
அந்த நடிகையுடன் விஜய் அடிக்கடி வெளிநாடுகளுக்கு செல்வது மற்றும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பது தொடர்பான புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் அடிக்கடி வெளியாகி வைரலானது. சங்கீதாவுக்கும் அவரது பிள்ளைகளுக்கும் இந்த புகைப்படங்கள் வெளியாகும் போது பெரும் அவமானத்தை தேடி தந்ததாக அந்த விவாகரத்து கோரிய மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அத்துடன் சமீபகாலமாக சங்கீதாவுக்கு பொருளாதார ரீதியான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதும் இந்த விவாகரத்து முடிவுக்கு ஒரு முக்கிய காரணம் என்றும் கூறப்படுகிறது.
சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் தங்களது திருமணத்தை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்த இந்த மனு வருகிற ஏப்ரல் 20ம் தேதி விசாரணைக்கு வருகிறது. தமிழக அரசியலில் தடம்பதித்துள்ள நடிகர் விஜய்க்கு இது தனிப்பட்ட வாழ்க்கையிலும் அரசியல் வாழ்க்கையிலும் பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. அவரது அரசியல் பிம்பத்தை சிதைக்கும் வகையில் இந்த விவகாரம் உருவெடுத்துள்ளதால் இந்த பிரச்னையை சுமூகமாக முடிவுக்கு கொண்டு வர விஜய் தரப்பு தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது.
இந்நிலையில் தனது மனைவி சங்கீதா மற்றும் தனது பிள்ளைகளுக்காக சுமார் 250 கோடி ரூபாய் ஜீவானாம்சமாக வழங்க விஜய் முன் வந்துள்ளார். அதாவது இந்த விவாகரத்து மனுவை சங்கீதா திரும்பப் பெற வேண்டும். குடும்பத்திற்குள் நிலவும் பிரச்சனைகளை தீர்த்து ஒரு சமூகமான உடன்பாட்டுக்கு வரவும் இந்த பிரம்மாண்ட தொகையை செட்டில்மென்ட் ஆக வழங்க விஜய் சம்மதித்துள்ளார். சங்கீதாவிடம் விவாகரத்து மனுவை திரும்ப பெறுமாறு கூறி விஜய் தரப்பிலிருந்து சமரச பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் தகவல் கசிந்துள்ளது.
எனினும் இந்த சமரச பேச்சுவார்த்தைக்கு சங்கீதா தரப்பு எந்தளவுக்கு உடன்படும் என்பது இன்னும் கேள்விக்குறியாக உள்ளது. விஜயின் அரசியல் எதிர்காலம் குடும்ப கவுரவம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த 250 கோடி ரூபாய் செட்டில்மென்ட் பிளான் செய்யப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் 20ம் தேதி நடக்க உள்ள செங்கல்பட்டு நீதிமன்ற விசாரணையின் போது விஜய் மற்றும் சங்கீதா இருவரும் நேரில் ஆஜராக உள்ளார்கள். அப்போதுதான் இந்த சமரச பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்ததா அல்லது சங்கீதாவின் சட்டப் போராட்டம் தொடருமா என்பது குறித்த தெளிவான உண்மை நிலவரம் தெரிய வரும்.

