கடந்த 2006 முதல் 2011 வரையிலான திமுக ஆட்சியில் மதுரையில் குறுநில மன்னர்போல் சர்வாதிகாரம் செய்து வந்த அப்போதைய முதல்வர் மு கருணாநிதி மகனான முக அழகிரியை, அதே திமுக ஆட்சியில் மதுரையில் அலற விட்டவர் தான் தற்போதைய திருப்பரங்குன்றம் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் வி வி ராஜன் செல்லப்பா, மதுரை அதிமுகவில் மிக மூத்த தலைவரான வி வி ராஜன் செல்லப்பா கடந்த 1992 முதல் 1998 வரை அதிமுகவின் மாநிலங்கவை உறுப்பினராக இருந்தவர்.
2006 முதல் 2011 வரையிலான திமுக ஆட்சியில், மதுரையில் அதிமுகவினர் அரசியல் செய்ய முடியாத ஒரு சூழல் இருந்து வந்தது, இதற்கு முக்கிய காரணம் அன்று மதுரையில் தன்னுடைய கட்டுக்குள் வைத்திருந்த முக அழகிரி மதுரையில் அடுத்த தேர்தலுக்குள் அதிமுக என்கிற கட்சியே இருக்காது என்று சவால் விடும் தோரணையில் ஆட்சியாளர்களையும், அதிகாரம் படைத்த அதிகாரிகளையும் கையில் வைத்து கொண்டு ஆட்டி படைத்து கொண்டிருந்த அழகிரியின் காலம் அது.

சில அதிமுக மதுரையின் முக்கிய புள்ளிகள் அரசியலில் தாக்கு பிடிக்க முடியாமல் அழகிரி முன்னிலையில் திமுகவில் இணைத்தனர், குறிப்பாக மதுரையில் எந்த ஒரு இடை தேர்தல் வந்தாலும், கூட அதிமுக வேட்பாளர் எதிர்கொள்ள முடியாதபடி திமுகவின் உச்சக்கட்ட அராஜகம் தலைவிரித்து ஆடிய காலம், திருமங்கலம் இடைதேர்தலில் தேர்தல் பணிகளை முடித்து விட்டு இரவு திரும்பிய முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சாமி அழகிரி தரப்பினரால் தாக்கப்பட்ட சம்பவம் கூட அரங்கேறியது.
இப்படி ஒரு சூழலில் பலரும் அழகிரியை எதிர்த்து அரசியல் செய்ய தயங்கி கொண்டிருந்த அப்படி ஒரு காலத்தில், முக அழகிரியை எதிர்த்து மதுரை அரசியல் களத்தில் களமாடி அப்போதைய எதிர்க்கட்சி தலைவர் ஜெயலலலிதா நன்மதிப்பை பெற்றார். அழகிரியை எதிர்த்து அரசியல் செய்த ராஜன் செல்லப்பாவின் துணிச்சலை பார்த்து, இவர் தான் ரியல் அஞ்சா நெஞ்சன் என்று கூட அப்போதைய மதுரை அதிமுகவினரால் அழைக்கப்பட்டது.
2011 சட்டசபை தேர்தலில் ஒட்டுமொத்தமாக மதுரை திமுகவின் ஆட்டத்தை அடக்கும் விதமாக, மதுரையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதியிலும் திமுக படு தோல்வியை சந்தித்தது , இதன் பின்பு 2011 நடந்து உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்று அதிமுக சார்பில் மதுரை மேயராக பணியாற்றிய வி வி ராஜன் செல்லப்பா, அடுத்து 2016ல் நடந்த சட்டசபை தேர்தலில் மதுரை வடக்கு தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினரானார்.
கடந்த 2021ல் நடந்த சட்டசபை தேர்தலில் திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிட்டு சுமார் 30 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் வி வி ராஜன் செல்லப்பா, குறிப்பாக மதுரையில் உள்ள பத்து தொகுதியில் அதிமுக சார்பில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தொகுதி வி வி ராஜன் செல்லப்பா போட்டியிட்ட திருப்பரங்குன்றம் தொகுதி என்பது குறிப்பிடதக்கது.
கடந்த 2021 சட்டசபை தேர்தலில் தமிழகம் முழுவதும் மிக பெரிய வெற்றியை பெற்று திமுக ஆட்சியை பிடித்தாலும் கூட திருப்பரங்குன்றம் தொகுதியில் வி வி ராஜன் செல்லப்பாவின் கள அரசியலில் திமுகவால் அந்த தொகுதியை கைப்பற்ற முடியவில்லை, மேலும் தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் மற்றும் பொது மக்களிடம் நேரடி தொடர்பில் இருக்கும் ராஜன் செல்லப்பா வரும் 2026 சட்டசபை தேர்தலில் வெற்றி வாய்ப்பு என்பது மிக பிரகாசமாக உள்ளது.
குறிப்பாக மதுரை திமுகவினர் கூட ராஜன் செல்லப்பா போட்டியிடும் தொகுதியில் எதிர்த்து போட்டியிட தயங்கும் ஒரு சூழலை தான் களத்தில் உருவாக்கி வைத்து இருக்கிறார் ராஜன் செல்லப்பா என்கிறது மதுரை அரசியல் வட்டாரங்கள்.

