தமிழக வெற்றி கழகம் என்கின்ற அரசியல் கட்சியை தொடங்கிய விஜய் ஆரம்ப கட்டத்தில் பாஜக – திமுக என இரண்டு கட்சிகளையும் மிகக் கடுமையாக எதிர்த்து பேசி வந்த நடிகர் விஜய், கரூர் சம்பவத்திற்கு பின்பு பாஜகவை விமர்சனம் செய்வதை குறைத்துக்கொண்டு, திமுகவை மிக கடுமையாக விமர்சனம் செய்து வந்தார் , குறிப்பாக கரூர் சம்பவத்தின் போது பாஜக தரப்பிலிருந்து விஜய்க்கு கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
அதாவது ஆந்திராவின் துணை முதலமைச்சர் பவன் கல்யாணம் மூலம் தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் விஜயை கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தை நடந்தது, அந்த கரூர் சம்பவ காலகட்டத்தில் மட்டும் இரண்டு முறை நடிகர் விஜயை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய பவன் கல்யாண் கூட்டணிக்குள் வாருங்கள், நான் எப்படி இங்கே ஆந்திராவில் துணை முதல்வராக இருக்கிறேனோ அதேபோன்று உங்களுக்கு ஒரு வாய்ப்பு 2026 சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று கூட்டணி ஆட்சி அமையும் பொழுது கிடைக்கும்.

அடுத்த ஐந்து வருடத்தில் உங்களுடைய கட்சியையும் நீங்கள் வலுப்படுத்தி அதற்கான வாய்ப்பாக இருக்கும் என்றெல்லாம் பேசினார், ஆனால் விஜய் சுற்றி இருந்த ஆதவ் அர்ஜுனா , ஜான் ஆரோக்கியசாமி போன்றோர் நம்மிடம் காங்கிரஸ் கூட்டணிக்கு வந்து விடுவார்கள், அவர்கள் வந்துவிட்டால் விடுதலை சிறுத்தை கம்யூனிஸ்ட் போன்ற ப கட்சி வந்துவிடுவார்கள் மேலும் டிடிவி தினகரன் மற்றும் ஓ பன்னீர்செல்வம் ஆகியோரிடமும் கூட்டணி குறித்து பேசிக்கொண்டிருக்கிறோம் இவர்கள் எல்லாம் வந்து விடுவார்கள் ஆகையால் அவசரப்பட்டு பாஜக பக்கம் சென்று விட வேண்டாம்,
உங்களை முதல்வராக முன்னிறுத்தி தேர்தலை சந்திப்போம் என்றெல்லாம் விஜய்யை உசுப்பேத்தி விட்டு பாஜக பக்கம் செல்ல விடாமல் தடுத்தனர், இதன் தொடர்ச்சியாக அவர் வருவார் இவர் வருவார் என்று காத்திருந்த விஜய்க்கு தொடர்ந்து ஏமாற்றம் தான் மிஞ்சியது. டிடிவி தினகரன் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தார், ஓ பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்தார்.
தொடர்ந்து காங்கிரஸ் ஆவது வருமா என்று இறுதிவரை நம்பிக் கொண்டிருந்த விஜய்க்கு, விஜயை பயன்படுத்தி திமுக கூட்டணியில் காங்கிரஸ் கடந்த முறை வாங்கிய 25 தொகுதிகளில் இருந்து மூன்று தொகுதி அதிகரித்து பெறுவதற்கே காங்கிரஸ் முயன்றிருக்கிறதே தவிர, விஜய் உடன் கூட்டணியை இறுதி செய்யாமல் ஏமாற்றி விட்டது.
இந்த நிலையில் தற்போது தன்னந்தனியாக தத்தளித்து கொண்டிருக்கும் விஜய், 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டால் தேர்தல் செலவுகள் இருக்கிறது. குறிப்பாக வலிமையான வேட்பாளர்கள் வேண்டும், பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று கதி கலங்கி போய் இருக்கிறார். இப்படி ஒரு சூழலில் மீண்டும் பவன் கல்யாண் மூலம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு விஜய் தூது விட்டு இருக்கிறதாக தகவல் வெளியாகிறது.
அதாவது கூட்டணிக்குள் வந்துவிடுகிறேன் இதற்கு முன்பு நீங்க சொன்ன டீலிங் படி தனக்கு துணை முதல்வர் பதவி மற்றும் 50 சீட் கொடுங்கள் என்று விஜய் கேட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது, அதே நேரத்தில் தற்பொழுது தேசிய ஜனநாயக கூட்டணியில் இறுதி வடிவம் ஏற்பட்டிருக்கிறது கரூர் விவகாரத்தின் போது இருந்த சூழல் தற்போது இல்லை மேலே ஆலோசித்தான் தெரிவிக்க வேண்டும் காத்திருங்கள் என்று பவன் கல்யாண் விஜய் இடம் தெரிவித்தவர், இந்த தகவலை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகிறது .
அந்த வகையில் தற்பொழுது தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவதற்கு விஜயின் விஜயின் விருப்பத்தை அமித்ஷா மற்றும் எடப்பாடி ஆகியோர் ஏற்பார்களா என்கின்ற பரபரப்பு தமிழக அரசியலில் ஏற்பட்டிருப்பது.

