விஜய் அரசியலை முடிவுக்கு கொண்டு வந்த ஆதவா அர்ஜுனா… திமுக ஸ்லீப்பர் செல் என்பது கண்டுபிடிப்பு… புலம்பி தவிக்கும் விஜய்…

0
Follow on Google News

கடந்த 2021 சட்டசபை தேர்தலில் திமுக வெற்றி பெறுவதற்காக பிரசாந்த் கிஷோர் உடன் இணைந்து வேலை செய்தவர் தான் ஆதவ் அர்ஜுன், இதனை தொடர்ந்து அவர் மனதில் அரசியல் ஆசை துளிர் விட, அடுத்து 2024 நாடளுமன்ற தேர்தலில் எம்பியாகி விட வேண்டும் என்கிற கனவில் விடுதலை சிறுத்தை கட்சியில் இணைந்தார்,

இதன் பின்பு திமுக கூட்டணியில் இருந்து கொண்டு ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தினார் ஆதவ். திமுக கொடுத்த நெருக்கடி விசிகாவில் இருந்து ஆதவ் அர்ஜுன் வெளியேற்றப்பட்டார், இதன் பின்பு தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார் ஆதவ் அர்ஜுன், ஆனால் ஆதவ் அர்ஜுன் நடிகர் விஜயை தவறாக வழிநடத்தி ஒரு சிலீப்பர் செல் போன்று விஜயை காலி செய்து வருகிறார் என்கிற குற்றசாட்டு எழுந்துள்ளது.

குறிப்பாக கரூர் விவாகரத்தில் போது, விஜய் உடன் கூட்டணிக்கு பாஜக நேரடியாக அழைப்பு விடுத்தது. ஆனால் ஆதவ் அர்ஜுனா போன்றார் விஜய்யை பாஜக பக்கம் செல்ல விடாமல் பார்த்து கொண்டனர், இதற்கு முக்கிய காரணம் காங்கிரஸ் கட்சியை கூட்டணிக்குள் கொண்டு வருகிறோம், அவசரப்படவேண்டாம், நீங்கள் தான் முதல்வர் வேட்பாளர் என விஜய்யை உசுப்பேத்தி விட்டு பாஜக உடன் கைகோர்ப்பதை தவிர்த்து இருக்கிறார் ஆதவா அர்ஜுன்.

ஆனால் தற்பொழுது விஜய்க்கு அல்வா கொடுத்துவிட்டு திமுகவுடன் கூட்டணியை உறுதி செய்து இருக்கிறது காங்கிரஸ், அந்த வகையில் திமுகவிடம் கூடுதலாக 3 தொகுதிகளை பெறுவதற்கே விஜய்யை காங்கிரஸ் பயன்படுத்தி கொண்டது என்பது தற்பொழுது அமபலமாகி இருக்கிறது. குறிப்பாக விஜயின் அரசியல் வருகை அவருடைய ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எழுச்சியை ஏற்படுத்தி இருந்தாலும், விஜயை தவிர்த்து அவருடைய தமிழக வெற்றி கழகத்தில் இரண்டாம் கட்ட தலைவர்கள் இல்லாமல் அந்த கட்சி மிக பெரிய கூட்டம் இருந்தாலும் கட்டு கோப்பு இல்லாமல் தத்தளித்து வருகிறது.

குறிப்பாக நடிகர் விஜய் கட்சி தொடங்கியதும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னாள் அமைச்சர்கள் என மாற்று கட்சியில் இருந்து அரசியல் அனுபவம் வாய்ந்த நபர்கள் இணைவார்கள் என்கிற எதிர்பார்ப்பு இருந்தது ஆனால் செங்கோட்டையன் தவிர்த்து சொல்லும்படியாக யாரும் வரவில்லை, செங்கோட்டையன் கூட ஏன்டா வந்தோம் என்கிற விரக்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

தமிழக அரசியல் குறித்த எந்த அனுபவம் இல்லாத புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுன், ஆரோக்கியசாமி போன்றோர்களால், விஜய் பின்னால் பெரும் கூட்டம் இருந்தும் அதை ஒருங்கிணைத்து வழிநடத்த தலைவர்கள் இல்லாமல், விஜய் ஒன் மேன் ஆர்மி போன்று கட்சியை வழிநடத்தி கொண்டிருக்கிறார்.

அப்படி இருக்கையில் பாஜக தரப்பில் இருந்து அதிமுக – பாஜக கூட்டணிக்கு வரும்படி விஜயிடம் கரூர் விவகாரத்தின் பேச்சுவார்த்தை நடைபெற்று இருக்கிறது. ஆனால் ஆதவ் அர்ஜுன் மற்றும் ஆரோக்கிய சாமி போன்றவர்கள் திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் , விசிக , கம்யூனிஸ்ட் கட்சிகள் நம்மிடம் கூட்டணிக்கு வருவார்கள், நீங்கள் தான் முதல்வர் வேட்பாளர், பாஜகவுடன் கூட்டணிக்கு சென்றால் காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் கூட்டணிக்கு வராது என தெரிவித்ததாக கூறப்படுகிறது.

அதாவது ஆதவ் அர்ஜுனா திட்டமே, அதிமுக – பாஜக கூட்டணியில் விஜய் இணைந்து விட கூடாது, கடைசி வரை காங்கிரஸ் போன்ற கட்சிகள் கூட்டணிக்கு வருகிறது என ஏமாற்றி காலம் கடத்தி , கடைசி நேரத்தில் திமுகவுக்கு எதிரான வாக்குகளை விஜய் மற்றும் அதிமுக இரண்டும் பிரித்து விட்டால், அது திமுகவுக்கு சாதகமாக அமைந்துவிடும் இது தான் ஆதவ் அர்ஜுனா திமுகவுக்கு ஆதரவாக ஸ்லீப்பர் செல் போன்று விஜய்யை காலி செய்து வருகிறார் என்கிற விமர்சனம் எழுந்து வருகிறது.