வாரிசை வயிற்றில் சுமந்த மனைவி வேண்டாம்… அந்த நடிகை தான் வேண்டும் … அடம் பிடிக்கும் விஜய்…

0
Follow on Google News

கத்திரிக்காய் முத்தினால் கடை வீதிக்கு வந்துதான் ஆக வேண்டும் என்பது போல பல ஆண்டுகளாக வீட்டுக்குள் நான்கு சுவர்களுக்குள் இந்த விஜயின் குடும்ப விவகாரம் இன்று வீதிக்கு வந்து விட்டது. நீலாங்கரை பங்களாவுக்குள் நடந்த அத்தனை விவகாரங்களையும் செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனுவாக கொடுத்து விஜயின் அந்தரங்க லீலைகளை சந்தி சிரிக்க வைத்து விட்டார் விஜயின் மனைவி சங்கீதா.

இதற்கிடையே நடிகர் விஜயின் புகழை ஓயாமல் பாடி வரும் அவரது ரசிகர்களும் டிவிகே தொண்டர்களும் இப்போதும் கூட சலிக்காமல் விஜய்க்கு முட்டுக் கொடுப்பதை பார்த்து ஆவேசமாக நெட்டிசன்கள் அவர்களை கண்டபடி வறுத்தெடுத்து வருகின்றனர். தற்குறி கூட்டம் என்று தெரியுமடா, ஆனால் கள்ளக் காதலுக்கு முட்டுக் கொடுக்கற அளவுக்கு போவீங்கன்னு எதிர்பார்க்கலடா என்று தலையில் அடித்துக்கொள்கின்றனர்.

விஜய் மீது புகார் சொல்வது அவர் தாலி கட்டிய மனைவி. 27 ஆண்டுகளாக அவரது மனைவி என்ற அடையாளத்துடன் சமூகத்தில் வலம் வருபவர்கள். ஒரு மகன் ஒரு மகள் என்று விஜயின் வாரிசுகளை வயிற்றில் சுமந்தவர். அப்படிப்பட்ட ஒரு பெண் தனது கணவரின் அந்தரங்க விஷயங்களை பொதுவெளியில் சொல்வது என்பது ஏனோ தானோ என்கிற மாதிரியான விஷயம் அல்ல.

நடிகையுடன் கணவர் தொடர்பில் இருப்பது தெரிந்த பிறகு பலமுறை அதுகுறித்து பேசியும் வாதம் செய்தும் சண்டையிட்டும் கூட கணவன் திருந்தவில்லை. மாறவில்லை. இதற்கு பிள்ளைகளும் எதிர்ப்பு தெரிவித்தும் அவர்களையும் விஜய் பொருட்படுத்தவில்லை.

கடந்த 2021 ஏப்ரல் மாதத்திலேயே இந்த விவகாரம் விஜய் வீட்டுக்குள் விஸ்வரூபம் எடுத்த நிலையில் தான் அவர் அந்த நடிகையுடன் லியோ படத்தில் ஜோடியாக நடித்தார். லிப் டூ லிப் உதட்டு முத்தக்காட்சியில் நடித்தார். தி கோட் படத்தில் மட்ட பாடலுக்கு அந்த நடிகையுடன் தான் குத்தாட்டமும் போட்டார். கோவாவில் நடந்த நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணத்துக்கு தனி விமானத்தில் அந்த நடிகையுடன் தான் சென்று வந்தார். இது எல்லாம் நாடறிந்த உண்மை.

இந்த சூழலில்தான் கணவரின் அடாவடியும் அட்ராசிடியும் பொறுக்க முடியாமல் அவரது மனைவி சங்கீதா இப்போது இந்த விவாகரத்து மனுதாக்கலை செய்திருக்கலாம். தன்னை தன்னுடைய குடும்ப வாழ்க்கையை தனது பிள்ளைகளின் எதிர்காலத்தை பழிவாங்கிய விஜயை பழிவாங்க வேண்டும் என்ற எண்ணம் அவரது மனைவி சங்கீதாவுக்கும் வந்திருக்கலாம். இது இயல்புதான். மனதில் ஏற்பட்ட வெறுப்பின் உச்சக்கட்டத்தில் இந்த மனோபாவம் வந்திருக்கலாம்.

இதற்கு யாரும் சொல்லித் தரவோ தூண்டி விடவோ அவசியம் இல்லை. என்னை என் பிள்ளைகளை நிம்மதியாக வாழ விடாமல் செய்த உன்னை பழிவாங்குவேன் என்ற உச்சக்கட்ட கோபத்தில் இந்த மனுவை தேர்தல் நெருங்கும் நேரத்தில் சங்கீதா செய்திருக்க அதிக வாய்ப்புள்ளது. இதனால் அவரது அரசியல் சடுகுடு ஆட்டத்துக்கு நடுக்கம் ஏற்படுத்த அவர் திட்டமிட்டு இருக்கலாம்.

இதை எல்லாம் கவனத்தில் கொள்ளாமல் யோசிக்காமல் எங்க அண்ணன் தளபதி அந்த நடிகையுடன் தொடர்பில் இருந்தால் என்ன தவறு, யாரும் செய்யாததா, எந்த அரசியல் தலைவர் யோக்கியம்? அவரது பர்சனல் வாழ்க்கையை விமர்சிக்க யாருக்கும் தகுதியில்லை என்று தவெக தொண்டர்கள் தளபதி ரசிகர்கள் என பலர் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். கள்ளக் காதலுக்கு முட்டுக் கொடுக்கற ஒரு தற்குறி கூட்டத்தை இப்போதான் நேரில் பார்க்கிறோம். என்று நெட்டிசன்கள் கடுமையாக திட்டி விமர்சித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here