நடிகர் விஜய் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கி அவரது மனைவி சங்கீதா செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருப்பது தமிழக அரசியல் வட்டாரத்திலும் தவெக கட்சியினர் மத்தியிலும் பலத்த பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதிலும் திருமண உறவை மீறிய ஒரு நடிகையுடன் தனது கணவர் விஜய் உறவில் இருந்தார். கடந்த 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதமே எனக்கு இது தெரிய வந்த நிலையில் அந்த உறவை நான் பலமுறை வற்புறுத்தியும் அவர் தொடர்ந்தார். அதனால் மன உளைச்சல் ஏற்பட்டது. என் குழந்தைகளும் அவமானப்பட்ட நிலையில் தான் இந்த விவாகரத்து கேட்கிறேன் என்று அந்த மனுவில் சங்கீதா கூறியிருக்கிறார்.
நடிகர் விஜய் எந்த நடிகையுடன் உறவில் இருக்கிறார் என்ற பெயரை சங்கீதா சொல்ல விரும்பவில்லை என்று கூறினாலும் அது நாடறிந்த ஒரு ரகசியம்தான். விஜயுடன் 6 படங்களில் நடித்த அவர் கடைசியாக ஒரு படத்தில் விஜயுடன் ஐட்டம் பாடலுக்கு குத்தாட்டமும் போட்டிருந்தார். 40 வயதுகளை கடந்தும் இன்னும் முரட்டு சிங்கிளாக வலம் வரும் அந்த நடிகை, நயன்தாராவை போல அதிக சம்பளம் வாங்கும் தமிழ் நடிகையாகவும் உள்ளார்.

நடிகர் விஜய்க்கு ஆரம்பம் முதலே மக்கள் மத்தியில் கிடைத்த அமோக வரவேற்பும் ஆதரவும் ஆளுங்கட்சி திமுக உள்ளிட்ட அதிமுக காங்கிரஸ் பாஜக நாம் தமிழர் கட்சி என பிற கட்சியினருக்கும் ஒருவித எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக ஆளுங்கட்சி திமுகவை அகற்றிவிட்டு தவெக கட்சி ஆட்சிக்கு வரும். வருகிற தேர்தலில் 2 கட்சிகளுக்கு இடையே தான் போட்டி. ஒன்று தவெக மற்றொன்று திமுக என்று மேடை தோறும் பேசி பேசி சவால் விட்டு அக்கட்சியினரை பெரிய டென்சனை விஜய் தந்து வருகிறார்.
இந்த நிலையில் மாவட்டம் வாரிய விஜய் மக்கள் சந்திப்பு பயணங்களை நடத்தினர். இதில் கரூரில் நடந்த பிரசார கூட்டத்தில் 41 பேர் நெரிசலில் சிக்கி உயிரிழந்தது பெரிய அளவில் அந்த கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. எனினும் இது அரசியல் சதி என்றும் ஆளுங்கட்சி தான் இதற்கு காரணம் என்றும் தவெக கட்சியினர் கூறினர். இந்த சம்பவம் அப்போது பரபரப்பை ஏற்படுத்தினாலும் விஜய்க்கான ஆதரவு குறையவில்லை.
இதற்கிடையே தற்போது விவாகரத்து கேட்டு விஜய் மனைவி சங்கீதா செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்த நிலையில் பல்வேறு குற்றச்சாட்டுகளையும் அடுக்கி இருக்கிறார். இது வெறுமனே மெல்லுகிற வாய்க்கு அவல் கிடைத்ததை போல, விஜய் குறித்து விமர்சனங்களை வைக்க திமுக பாஜக உள்ளிட்ட கட்சிகளுக்கு ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்து விட்டது.
ஆனால் என்ன அடி அடித்தாலும் தாங்குவோம், பின்வாங்க மாட்டோம் என்று ரமணா படத்தில் விஜயகாந்துக்காக அடி வாங்கும் அவரது விசுவாசிகளை போல விஜய் குறித்து எந்த விமர்சனம் வந்தாலும் அதை எல்லாம் பொருட்படுத்தவே மாட்டோம். எல்லாமே திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகளின் சதிதான் என்று தவெக கட்சியினர் குறிப்பாக தவெக பெண் தொண்டர்கள் சமூக வலைதளங்களில் பேசி வருகின்றனர்.
41 பேர் பலியான கரூர் சம்பவத்தையே பார்த்து விட்டோம். இதெல்லாம் ஒரு விஷயமா, ஜூஜூபி மேட்டர்… யார் என்ன சொன்னாலும் புழுதியை தூற்றினாலும் எங்க ஓட்டு உங்களுக்கு தான் விஜய் ணா என்று பலரும் அதில் பேசி வருகின்றனர். குடும்பத்திடமே ஒற்றுமையாக வாழாத ஒரு கட்சி தலைவர், ஒழுக்கம் இல்லாதவர் என கட்டிய மனைவியே சுட்டிக்காட்டி விமர்சிக்கும் ஒருவர் இந்த சமுதாயத்துக்கு வழிகாட்டியாக வரலாமா? தற்குறிகளே இது நியாயமா என்றும் ஒரு சிலர் வசைபாடி கமெண்ட் செய்தும் வருகின்றனர்.

