அமெரிக்காவுக்கு விழுந்த ஆப்பு… சத்தமே இல்லாமல் சம்பவம் செய்த மோடி… கதறும் அதிபர் ட்ரம்ப்…

0
Follow on Google News

இந்தியாவிற்கு ஏற்கனவே 25 சதவீத வரியை விதித்து, அதை நிறுத்தி வைத்திருந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், கெடு முடிந்து கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் வரிகள் அமலுக்கு வருவதாக அறிவித்தார். அது மட்டுமல்லாமல், இந்தியாவிற்கு கூடுதலாக 25 சதவீத வரியையும் விதித்ததால், இந்தியாவிற்கான மொத்த வரி 50 சதவீதமாக உயர்ந்தது.

அதோடு விடாமல், ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதால், இந்தியாவிற்கு அபராதம் விதிப்பதாகவும் ட்ரம்ப் கூறினார். மேலும், ரஷ்யா உடனான வர்த்தகத்தை நிறுத்துமாறும் இந்தியாவிற்கு மிரட்டல் விடுத்தார். ஆனால், இந்திய அரசு அதற்கு செவிசாய்க்கவில்லை. இதனால் ட்ரம்ப் மேலும் கோபமடைந்தார். இந்த சூழலில் தான், ரஷ்ய அதிபர் புதினுடன் ட்ரம்ப் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் எந்த முடிவும் எட்டப்படாவிட்டாலும், பேச்சுவார்த்தை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் க்கு எதிராக அமைந்தது.

இந்நிலையில் இந்தியா மீதான அமெரிக்காவின் இந்த வரிவிதிப்பு, உலக பொருளாதார நாடுகளிடையே பெரும் விவாத பொருளாக மாறிய நிலையில், இந்தியா வாங்கும் கச்சா எண்ணெய் மீது 5 சதவிகிதம் தள்ளுபடி செய்வதாக ரஷியா அறிவித்துள்ளது. இதுகுறித்து, ரஷியா தெரிவிக்கையில், இந்தியாவுக்கு இது ஒரு சவாலான நிலை என்றபோதிலும், நமது உறவில் நம்பிக்கை உள்ளது.

இந்தியாவின் எண்ணெய் இறக்குமதி கிட்டத்தட்ட அதேஅளவில்தான் இருக்கிறது. தள்ளுபடியைப் பொறுத்தவரை, இது ஒரு வணிக ரகசியம் என தெரிவித்த ரசியா, மேலும் இந்திய பொருள்களை அமெரிக்க சந்தைக்குக் கொண்டுசெல்வதில் சிக்கல் ஏதேனும் இருந்தால், இந்திய பொருள்களுக்காக ரஷியாவின் சந்தை எப்போதும் திறந்திருக்கும் என ரசியா தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இந்தியா மீது அடுக்கடுக்கான வரிகளை அமெரிக்க அரசு விதித்து கொண்டிருக்கும் நிலையில், அமெரிக்காவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் தனது ஐபோன் உற்பத்தியை அதிகரித்துள்ளது. ஐபோன் 17 சிரியஸ் அனைத்து நான்கு மாடல்களின் தயாரிப்பையும் இந்தியாவில் உள்ள ஐந்து உள்நாட்டு தொழிற்சாலைகளுக்கு மாற்றியுள்ளது.

இதன்மூலம், புதிய ஐபோன் மாடல்கள் அனைத்தும் முதல் முறையாக இந்தியாவில் இருந்து உற்பத்தி செய்யப்பட உள்ளன. அமெரிக்காவில் உற்பத்தி செய்யாததற்காக ஆப்பிள் போன்ற நிறுவனங்களை டிரம்ப் பகிரங்கமாக விமர்சித்துள்ளார். இருப்பினும் ஆப்பிள் நிறுவனர் டிம் குக் அமெரிக்க அதிபரின் விமர்சனத்தையும் மீறி இந்தியாவில் உற்பத்தியை அதிகரிக்க திட்டமிட்டுள்ளார்.

இதில் இருந்து அமெரிக்க அரசு இந்தியாவுக்கு எதிராக இருந்தாலும், அமெரிக்காவின் முன்னணி நிறுவனங்கள் இந்தியாவை பகைத்து கொள்ள விரும்பவில்லை என்பதும், இந்தியாவுக்கு தரும் ஆதரவை தொடர்ந்து கொண்டு வருகிறது என்பதும் தெரிய வருகிறது. இதற்கிடையே இந்தியா உடனான இடையேயான மோதல் அமெரிக்காவுக்கு நல்லதல்ல என்று ஐநாவின் மாஜி அமெரிக்கத் தூதரும் டிரம்ப்பின் குடியரசுக் கட்சியின் முக்கிய தலைவருமான நிக்கி ஹேலி எச்சரித்துள்ளார்.

ஆசியாவில் சீன ஆதிக்கத்திற்கு எதிராக ஒரு தடுப்பு சக்தியாகச் செயல்படக்கூடிய ஒரே நாடாக இந்தியா இருக்கிறது. எனவே, கடந்த 25 ஆண்டுகளாக நாம் வளர்த்தெடுத்த உறவைச் சிதைப்பது பேரழிவாக இருக்கும் என ஐநாவின் மாஜி அமெரிக்கத் தூதரும் டிரம்ப்பின் குடியரசுக் கட்சியின் முக்கிய தலைவருமான நிக்கி ஹேலி எச்சரித்துள்ளது குறிப்பிடதக்கது..