வாழ தகுதியற்ற நாடக மாறும் அமெரிக்கா… வெளியேறும் வெளிநாட்டினர்… பின்னணியில் மோடியின் ராஜதந்திரம்…

0
Follow on Google News

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியாவிற்கு வரி விதிப்புகளை விதித்த அதே நேரத்தில், பாகிஸ்தான், டிரம்ப் குடும்பத்திற்கு சொந்தமான நிறுவனங்களுடன் கிரிப்டோகரன்சி மற்றும் கனிம வளங்கள் தொடர்பாக ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது. பாகிஸ்தானை சீனாவிடமிருந்து விலக்கி, அமெரிக்காவின் பக்கம் கொண்டு வர டிரம்ப் முயற்சிக்கிறார்.

அமெரிக்காவின் இந்த திடீர் நிலைப்பாடு, இந்தியாவை சீனாவை நோக்கி தள்ளியுள்ளது. தற்பொழுது இந்தியா-சீனா உறவு நாளுக்கு நாள் நெருக்கமாகி வருகிறது. இரண்டு நாடுகளும் கசப்புகளை மறந்து இணக்கமாகி வருகிறது. இதன் ஒரு கட்டமாக சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி, பிரதமர் நரேந்திர மோடியை நேற்று சந்தித்துப் பேசினார்.

உலகளாவிய வர்த்தகத்தில் அமெரிக்க டாலரின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தும் வகையில், BRICS நாடுகளுடனான வர்த்தகத்தை 100% இந்திய ரூபாயில் மேற்கொள்ள இந்தியா ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கையை எடுத்துள்ளது. இந்த நடவடிக்கை உலகச் சந்தைகளில் டாலரின் மேலாதிக்கத்தின் வீழ்ச்சியை விரைவுபடுத்தக்கூடும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

அமெரிக்காவிற்கு மேலும் நெருக்கடி கொடுக்கும் விதமாக டாலரின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தும் விதமாக இந்தியாவின் நடவடிக்கை உள்ளது. இந்நிலையில் 7 ஆண்டுகளுக்குப் பிறகு சீனாவுக்குப் பயணம் மேற்கொள்ள இருக்கும் பிரதமர் மோடி , இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீத வரி விதித்துள்ள சூழலில், மோடியின் இந்த சீனப் பயணம் பொருளாதார மற்றும் அரசியல் ரீதியாகவும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

மொத்தத்தில் பாகிஸ்தானை தனது புதிய கூட்டாளியாக அமெரிக்கா சேர்த்து கொண்டதால் அமெரிக்காவுக்கும், அமெரிக்க மக்களுக்கும் எந்தவித நன்மையும் கிடைக்கப் போவதில்லை என்றும், தனிப்பட்ட முறையில் சில தொழில் லாபங்கள் மற்றும் நோபல் பரிசுக்கான பரிந்துரை ஆகியவை மட்டுமே ட்ரம்புக்கு கிடைத்தாலும், ஒரு தீவிரவாத நாடு மற்றும் கடனில் தத்தளித்த நாடுக்காக வல்லரசை நோக்கி சென்று கொண்டிருக்கும் இந்தியாவை ட்ரம்ப் பகைத்தது தவறான முடிவு என்றும் இந்த முடிவுக்கு டிரம்ப் மிகப்பெரிய விலை கொடுக்க வேண்டும் என்றும் அமெரிக்கா பொருளாதார மற்றும் அரசியல் வல்லுநர்கள் கருத்துக்கு தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் எந்த கருத்தையும் தற்போது ஏற்கும் நிலையில் டிரம்ப் இல்லை என்பதால் அமெரிக்க மக்களின் நிலை பரிதாபத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் அமெரிக்காவின் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஏற்பட்ட பணிநீக்கங்கள் காரணமாக, நகரின் மையப்பகுதியில் உள்ள அலுவலகங்களில் 35% காலியாக உள்ளன

அமெரிக்காவில் பல நகரங்கள் பணவீக்கம் மற்றும் வேலையின்மை போன்ற கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருவதால் எதிர்காலத்தில் அமெரிக்கா வாழ தகுதியில்லாத ஒரு நாடாக மாறிவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. குறிப்பக இந்தியர்கள் உள்பட வெளிநாட்டினர் தங்கள் தாய்நாட்டுக்கு திரும்ப திட்டுமிட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

ஒரு காலத்தில் அமெரிக்கா என்பது பலரின் கனவாக இருந்த நிலையில் தற்போது கானல் நீராக பரிதாபமாக மாறி வருவதற்கு , அமெரிக்க அதிபர் டிரம்பின் தவறாக வர்த்தக, வெளிநாட்டு கொள்கை தான் என கூறப்படுகிறது.