கடந்த 2012 ஆம் ஆண்டு அமைச்சர் கே என் நேருவின் சகோதரர் ராமஜெயம் அதிகாலை வாக்கிங் சென்றபோது, கை கால்கள் கட்டப்பட்டு வாயில் துணியால் அமுக்கி மிக கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நடந்து சுமார் 13 வருடங்கள் கடந்த நிலையில், இதுவரை இந்த கொடூரமான சம்பவத்தில் ஈடுபட்டது யார் என்பதை கண்டுபிடிக்க முடியாமல் திணறியது போலீசார்.
இந்த வழக்கில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லாததால் சிபிசிஐடிக்கு வழக்கு மாற்றப்பட்டது, சுமார் 13 ரவுடிகளை உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது, சுமார் 20 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் இந்த வழக்கில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர், இருந்தும் எந்த ஒரு துப்பும் சிபிசிஐடிக்கு கிடைக்கவில்லை. இந்த நிலையில் இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றம் செய்யப்பட்டது.

அப்போதும் எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனை தொடர்ந்து திருச்சி எஸ்பியாக இருந்த வருண்குமார் மற்றும் தஞ்சாவூர் எஸ் பி ஆன ராமானுஜம் ஆகியவரிடம் இந்த வழக்க ஒப்படைக்கப்பட்டது. 2026 தேர்தலுக்கு முன்பே ராமஜெயம் கொலை வழக்கு குற்றவாளிகளை கண்டு பிடித்தாக வேண்டும் என்று தீவிரமாக களத்தில் இறங்கினார் திருச்சி எஸ் பியாக இருந்த வருண்குமார்
அதன் அடிப்படையில் செல் போன் சிக்னல் மூலம் துப்பு கிடைக்கிறதா என்று முயற்சியில் இறங்கியபோது ராமஜெயம் கொலை செய்வதற்கு முதல் நாள் வரை முக்கிய சரித்திர பதிவு குற்றவாளிகள் ஐவரின் தொலைபேசி செயல்பாட்டில் இருந்து இருக்கிறது. அதன் பின்பு செயல்பாட்டில் இல்லை. இதன் அடிப்படையில் பாளையங்கோட்டை சிறையில் உள்ள ரவுடி சுடலை மூத்தவை நேரடியாக பாளையங்கோட்டை சிறைக்கே சென்று சந்தித்த டி ஐ ஜி வருண் குமார்.
சுமார் 3 மணி நேரம் விசாரணையை அவரிடம் மேற்கொண்டு இருக்கிறார், சுடலை முத்துவை விசாரணையைத் தொடர்ந்து அதற்கு அடுத்த நாள் சென்னை புழல் சிறையில் இருக்கும் மணச்சநல்லூர் குணாவை நேரடி சந்தித்து சுமார் 2:30 மணி நேரம் டி ஐ ஜி அருண்குமார் நடத்தி விசாரணையில் சில தகவல்களை சேகரித்ததாக கூறப்படுகிறது.
அதாவது 2006 ஆம் ஆண்டு திருச்சியில் குணாவின் நெருங்கிய நண்பரான முட்டை ரவி என்கவுண்டர் செய்யப்படுகிறார். இந்த என்கவுண்டர் பின்னணியில் ராமஜெயம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து தன்னுடைய நண்பன் முட்டை ரவி என்கவுண்டருக்கு காரணமான ராமஜெயத்தை தீர்த்து கட்டுவேன் என்று குணா சபதம் எடுத்ததாகவும், இதனால் ராமஜெயம் கொலை வழக்கில் குணாவிற்கு தொடர்பு இருக்கும் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
மேலும் குணா தொலைபேசியில் ராமஜெயம் கொலை தொடர்பாக பேசிய ஆதாரமும் போலீசாரிடம் சிக்கியதாக கூறப்படுகிறது. ராமஜெயம் எப்போதும் தன்னுடைய பாதுகாப்புக்காக துப்பாக்கி வைத்திருப்பார், ஆனால் சம்பவம் நடந்த அன்று துப்பாக்கியை ராமஜெயம் எடுத்துச் செல்லாமல் சென்றதை நோட்டமிட்ட கும்பல் அன்று ராமஜெயத்தை மிக கொடூரமாக கொலை செய்திருக்கிறது.
இந்த நிலையில் சுமார் 13 வருடம் எந்த ஒரு துப்பும் இல்லாமல் இருந்த ராமஜெயம் வழக்கு தற்போது கிடைத்த துப்பின் மூலம் குற்றவாளிகளை சுற்றி வளைத்து கொண்டிருக்கிறார் டி ஐ ஜி வருண்குமார், வரும் 2026 சட்டபை தேர்தலுக்கு முன்பே ராமஜெயம் வழக்கின் உண்மை குற்றவாளிகள் தட்டி தூக்க படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

