கடந்த வெள்ளிக்கிழமை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்ட திருநெல்வேலியில் நடந்த பாஜக பூத் கமிட்டி மாநாட்டை மிக சிறப்பாக ஏற்பாடு செய்து இருந்தார் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன். இந்த நிகழ்வில் கலந்து கொண்ட முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை பேசிய ஒரு குறிப்பிட்ட வார்த்தை தமிழக அரசியலை திருப்பி போட்டு விட்டது என்று சொல்லும் அளவுக்கு அமைந்து இருந்தது.
வரும் 2026 சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் அண்ணன் எடப்பாடி பழனிசாமியை முதல்வராக அமர்த்துவோம் என அண்ணாமலை பேசிய பேச்சு, அதிமுக – பாஜக தொண்டர்களுக்கு இடையில் ஒரு பிணைப்பு ஏற்படும் வகையில் அமைந்து இருந்தது அண்ணாமலையின் இந்த தெளிவான பேச்சு. குறிப்பாக இதற்கு முன்பு அதிமுக – பாஜக கூட்டணி பொருந்தா கூட்டணி என எதிர்க்கட்சிகள் செய்து வந்த விமர்சனம் அண்ணாமலையின் இந்த பேச்சுக்கு பின் தவிடு பொடியானது.

இதனை தொடர்ந்து பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழ் கலாச்சாரத்தை பிரதமர் மோடி எப்படி கொண்டடி வருகிறார் என சமீபத்தில் பிரதமர் மோடி கங்கை கொண்ட சோழபுரம் பயணம் குறித்து எடுத்துரைத்தார். மேலும் இரு தமிழரான சி பி ராதகிருஷ்ணனை துணை ஜனாதிபதியாக பரிந்துரை செய்த பிரதமர் மோடி மற்றும் பாஜக தேசிய தலைவர் ஜே பி நாட்டா ஆகியோரை பாராட்டிய அமித்ஷா.
இதற்கு முன்பு தமிழரான ஏ.பி.ஜே. அப்துல் கலாமை ஜனாதிபதியாக அமர்த்தி பாஜக அழகு பார்த்ததையும் நினைவு படுத்தினார் அமித்ஷா, மேலும் பாஜக அரசு நடத்திய காசி தமிழ் சங்கம், திருக்குறள் 13 க்கு மேற்ட்பட்ட மொழிகளில் பாஜக அரசு மொழிபெயர்க்கப்பட்டதை பெருமையுடன் அமித்ஷா பேசியது, இதுவரை பாஜக தமிழர்களுக்கு என்ன செய்தது என திமுக மற்றும் சமிபதியில் விஜய் போன்றோர் பேச்சுகளுக்கு பதிலடியாக இருந்தது.
தொடர்ந்து பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா , திமுக அமைச்சர்கள் பொன்முடி மற்றும் செந்தில் பாலாஜி ஆகியோர் கடுமையாக விமர்சனம் செய்து, சிறையில் அடைக்கப்பட்ட அமைச்சர்கள் ஏன் இன்னும் ஆட்சியில் உள்ளனர் என சராமரியாக கேள்வி எழுப்பி இருந்தார், இந்தியாவில் ஊழல் நிறைந்த கட்சி என்றால் அது திமுக தான் டாஸ்மாக் ஊழல், மணல் சுரங்க ஊழல், இலவச வேட்டி ஊழல் என திமுகவின் ஊழல்களை பட்டியலிட்ட அமித்ஷா.
முதல்வர் முக ஸ்டாலினின் ஒரே குறிக்கோள் அவருடைய மகன் உதயநிதியை முதலமைச்சராக அமர்த்துவது தான் என வாரிசு அரசியலை மிகக்கடுமையாக சாடிய அமித்ஷா, முக ஸ்டாலினுக்கு அவருடைய மகன் உதயநிதியை முதல்வராக கொண்டு வரவேண்டும், சோனியா காந்திக்கு அவருடைய மகன் ராகுல்காந்தியை பிரதமராக்க வேண்டும் , ஆனால் இதையெல்லாம் ஒரு போதும் பாஜக அனுமதிக்காது என்றும், தமிழ்நாட்டில் பாஜகவை ஆட்சிக்குக் கொண்டுவர நம்மால் முடிந்த அனைத்தையும் செய்வோம் என பேசிய அமித்ஷா.
அதிமுக பாஜக கூட்டணி என்பது தேர்தலுக்கான கூட்டணி இல்லை, தமிழ்நாட்டை வளர்ச்சிக்கு கொண்டு செல்ல கூடிய கூட்டணி என்றும், பிரதமர் மோடியின் ஒவ்வொரு திட்டத்தையும் தெரு தெருவாக , வீடுவீடாக பாஜக தொண்டர்கள் எடுத்து செல்ல வேண்டும் என தொண்டர்கள் மத்தியில் அமித்சா பேசிய பேச்சு பாஜக தொண்டர்களுக்கு புதிய உத்வேகத்தை கொடுத்துள்ளது.
மிக குறுகிய காலத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பிரதமர் மோடி ஆகியோரின் தமிழகத்தின் அடுத்தடுத்த பயணம் ஏற்கனவே கதி கலங்கி இருக்கும் திமுகவை மேலும் கலக்கம் அடைய செய்துள்ளது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

