பிரதமராகும் யோகி ஆதித்யநாத்…RSS போட்ட கணக்கு… அடுத்தடுத்து அரங்கேற இருக்கும் மாற்றம்…

0
Follow on Google News

பாஜக தேசிய தலைவராக இருந்த ஜெ பி நட்டா பதவி காலம் முடிவடைடைந்ததை தொடர்ந்து பாஜகவின் அடுத்த தேசிய தலைவர் யார் என்கிற இழுபறி தொடர்ந்து நீடித்து வருகிறது. கடந்த மார்ச் மதமே பாஜக தேசிய தலைவர் யார் என்கிற அறிவிப்பு வெளியாக இருந்த நிலையில், பகல்காம் தாக்குதல், அதனை தொடர்ந்து ஏர் இந்தியா விமான விபத்து இதனால் பாஜக தேசிய தலைவரை இறுதி செய்வதில் கால தாமதம் ஏற்பட்டது.

மேலும் பாஜக தலைவராக தேர்வு செய்வதில் RSS மற்றும் பிரதமர் மோடி இருவருக்கும் இடையிலான பேச்சு வார்த்தை முடிவு எட்டப்படாமலே இருந்து வந்தது. இறுதியில் RSS மற்றும் பிரதமர் மோடி இவர்கள் இருவருக்கும் நெருக்கமாக இருக்க கூடிய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பெயர் பரிசீலனையில் இருந்தது, மேலும் சிவராஜ் சிங் சவ்கான், போன்ற பல பெயர்கள் பரிசீலனையில் இருந்தது, இருந்தும் தேசிய தலைவருக்கான அறிவிப்பு வெளியில் வராமலே இருந்தது.

இதற்கு இடையில் துணை ஜனாதிபதி ஜெகதீப் தங்கர் ராஜினாமா செய்ததை தொடர்ந்து, புதிய துணை ஜனாதிபதி தேர்வு காரணமாக பாஜக தேசியல் தலைவர் தேர்வு தள்ளி சென்றது. இந்நிலையில் உத்திரபிரதேசம் மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தை பாஜகவின் தேசிய தலைவராக நியமிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து இரண்டு முறை உத்திரபிரதேச முதல்வராக இருந்து வரும் யோகி அதிதயநாத்தை தேசிய அரசியலுக்கு கொண்டு வருவதற்கு பாஜக மற்றும் ஆர் எஸ் எஸ் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்பொழுது பிரதமராக மோடி மூன்று முறை தொடர்ந்து பதவியில் இருந்து வரும் நிலையில், மோடிக்கு அடுத்து யார் பிரதமர் வேட்பளராக முன்னிறுத்துவது என்கிற ஆர் எஸ் எஸ் மற்றும் பாஜக இடையே நடந்த பேச்சுவார்த்தையில், யோகி ஆதித்யநாத்தை அடுத்த பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்த பாஜக மற்றும் ஆர் எஸ் எஸ் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

வரும் 2029 தேர்தலில் யோகி ஆதித்யநாத் பிரதமர் வேட்பாளராக களம் இறங்குவாரா என டெல்லி வட்டாரத்தில் விசாரித்ததில், அதற்கு வாய்ப்பில்லை என டெல்லி வட்டாரங்கள் உறுதி படுத்து கிறது. ஆனால் பாஜகவின் தேசிய தலைவராக நியமிக்கப்பட்ட இருக்கும் யோகி அதிதயநாத், வரும் 2029 தேர்தல் பிரச்சாரத்தில் முக்கிய பங்காற்றுவார் என்றும், அதே நேரத்தில் வரும் 2029 நாடாளுமன்ற தேர்தலிலும் மோடி தான் பாஜகவின் பிரதமர் வேட்பாளர் என தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால் யோகி ஆதித்யநாத் வரும் 2029 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவார் என கூறப்படுகிறது. வரும் 2031ம் ஆண்டு வரை பிரதமராக மோடி தொடர்வார் என்றும், அதன் பின்பு பிரதமர் பதவியில் இருந்து மோடி விலகியதும், யோகி ஆதித்யநாத் பிரதமராக பொறுப்பேற்பார் என தகவல் வெளியாகியுள்ளது. அதற்காக தான் தேசிய அளவில் யோகி ஆதித்யனத்தை தேசிய அளவில் முன்னிலை படுத்தும் வேலையாக அவருக்கு பாஜகவின் தேசிய தலைவர் பொறுப்பு வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் துணை ஜனாதிபதியாக சிபி ராதாகிருஷ்னன் பதவி ஏற்ற பின்பு, பாஜக தேசிய தலைவர் நியமனம் மற்றும் காலியாக உள்ள ஆளுநர் பதவி நிரப்ப படும் என்றும், அதில் தமிழகத்தை சேர்ந்த பாஜக மூத்த தலைவர் ஹெச் ராஜா மத்திய பிரதேச ஆளுநராக பொறுப்பேற்க வாய்ப்புள்ளது என்கிறது டெல்லி வட்டாரங்கள். அந்த வகையில் சிபி ராதாகிருஷணன் துணை ஜனதிபதியாக பொறுப்பேற்ற பின்பு இந்திய அரசியலில் பல அதிரடி மாற்றங்கள் நிகழ இருப்பது குறிப்பிடதக்கது.