தொகுதி பங்கீட்டை நிறுத்தி வைங்க…. NDA உள்ளே விஜய் வருகிறார்… அமித்ஷாவிடம் இருந்த வந்த அதிரடி உத்தரவு…

0
Follow on Google News

2026 சட்டசபை தேர்தலுக்கான தேர்தல் தேதி எந்த நேரத்தில் வெளிவரும் என்கின்ற பரபரப்பு மத்தியில். சமீபத்தில் பிரதமர் மோடி மதுரை வந்த பின்பு தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் அனைவரும் தனியார் ஹோட்டல் ஒன்றில் தொகுதி பங்கீடு குறித்து முதல் கட்ட பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதே நேரத்தில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வருமா வராதா என்கின்ற கடும் இழுபறிக்கு மத்தியில் காங்கிரஸ் திமுக கூட்டணியை உறுதி செய்தது.

தற்போது திமுக கூட்டணியும் கூட்டணி கட்சியிலுக்கான தொகுதி பங்கீடு கிட்டத்தட்ட முடித்து விட்டது. இந்த பரபரப்பான ஒரு சூழலில் விஜய் சிவப்பு கம்பளம் விரித்து காங்கிரஸ் உட்பட பல கட்சிகளை வரவேற்று காத்திருக்க, ஆனால் எந்த கட்சியுமே விஜயுடன் கூட்டணிக்கு வரவில்லை, இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பே மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் மூலம் தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் தமிழக வெற்றி கழகத்தை கொண்டு வருவதற்காக விஜய் இடம் நேரடி பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்கள்.

ஆனால் அப்போது விஜய் கூட இருந்தவர்கள் காங்கிரஸ் நம்முடன் உறுதியாக வந்து விடுவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்து பாஜக இருக்கும் கூட்டணி பக்கம் செல்ல விடாமல் தடுத்து விட்டார்கள். இப்படி ஒரு சூழலில் தற்பொழுது விஜய் மிக பெரிய அளவில் எதிர்பார்த்துக் கொண்டிருந்த காங்கிரஸ் கட்சி திமுகவுடன் கூட்டணியை உறுதி செய்துள்ள நிலையில், தற்போது விஜய் தனியாக தத்தளித்து கொண்டிருக்கிறார்.

இப்படி ஒரு சூழலில் மீண்டும் அமித்ஷா வலியுறுத்தலின் பேரில் பவன் கல்யாண் சமீபத்தில் நடிகர் விஜயை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கூட்டணி குறித்து பேசி இருக்கிறார். ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பவன் கல்யாண் விஜய்யிடம் பேசியபோது விஜய் இடம் இருந்தா வந்த பதிலுக்கும் தற்பொழுது விஜய் கொடுக்கும் பதிலுக்கும் பல மாற்றங்கள் விஜயிடம் நிகழ்ந்திருப்பதை பவன் கல்யாண் உணர்ந்து இருக்கிறார்.

அந்த வகையில் விஜய் தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் வருவதற்கு ஒரு வகையில் பாசிடிவ் சிக்னல் கொடுத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில் பவன் கல்யாண் விஜய் தன்னிடம் பேசியது குறித்து அமித்ஷாவுடன் தெரிவித்து இருக்கிறார் . உடனே அமித்ஷா அதிமுக தலைமைக்கும் தமிழக பாஜக தலைமைக்கும் ஒரு அதிரடி உத்தரவை தெரிவித்திருக்கிறார்.

அதாவது தற்சமயம் கூட்டணி கட்சிகளிடம் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தையை தற்காலிகமாக நிறுத்தி வையுங்கள் விஜய் நம்முடைய கூட்டணிக்குள் வருவதற்கு அதிகளவு வாய்ப்பு இருக்கிறது என அமித்ஷா அதிமுக தலைமைக்கும் பாஜக தலைமைக்கும் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து பவன் கல்யாண் மற்றும் விஜய் இருவரும் அடுத்தடுத்த பேச்சுவார்த்தையை தொலைபேசியில் தொடர்ந்து பேசி வருவதாகவும்,

விஜய் கூட்டணிக்குள் வந்தால் 40 தொகுதி பிளஸ் துணை முதல்வர் என்கின்ற நிலையில் தற்போது பேச்சுவார்த்தையில் நிலவரம் உள்ளது என்றும் இருந்தாலும் பவன் கல்யாண் 30 தொகுதி பிளஸ் துணை முதல்வர் என்கின்ற வகையில் இறங்கி வாங்க என்று கேட்டுக் கொண்டதாகவும், அந்த வகையில் விஜய் 40 தொகுதிகளும் பாஜக தரப்பு முப்பது தொகுதி வரை பேச்சுவார்த்தை ஓடிக்கொண்டிருக்கையில் இறுதியில் 35 தொகுதியில் பிளஸ் ஒரு துணை முதல்வரின் முதல்வர், இரண்டு அமைச்சர்கள் என்கின்ற வகையில் இந்த கூட்டணி உறுதி செய்து விஜய் தேசிய ஜனநாயக கூட்டணிகள் உள்ள வருவதற்கு வாய்ப்புகள் மிகப் பிரகாசமாக இருக்கிறது என்கிற தகவல் வெளியாகியுள்ளது.