விஜய் நடித்த மாண்புமிகு மாணவன் என்ற படத்தில் அம்மாவுக்கு துரோகம் செய்யும் அப்பாவின் சட்டையை பிடித்து மகன் விஜய் கேள்வி கேட்பது போல் காட்சி இருக்கும். இது படத்தில் வந்த காட்சி. ஆனால் நிஜத்தில் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய், விஜயின் மேனேஜர் ஜெகதீஷ் சட்டையை பிடித்து விட்டார். இது குறித்து சினிமா துறையை சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவர் அளித்த பேட்டியில்,
மாமா வேலை பார்த்தவர்தான் விஜய் மானேஜராக இருக்க கூடிய ஜெகதீஷ். அப்போதுதான் என் குடும்பத்தையே கெடுத்து விட்டாயா என்று ஜேசன், ஜெகதீஷ் சட்டையை பிடித்து கேள்வி கேட்டிருக்கிறார், விஜய் சினிமாவில் செய்ததை தான் மகன் ஜேசன் நிஜத்தில் செய்தார். ஆனால் விஜய் 2 நடிகைகளுக்காக தனது மகனையே வீட்டை விட்டு அனுப்பிவிட்டார் என தெரிவித்த அந்த பத்திரிகையாளர்,

அன்று வீட்டை விட்டு வெளியே போன செய்த ஜேசன் இன்று வரை வீடு திரும்பவில்லை. நியாயமாக விஜயின் தந்தை இதை செய்திருக்க வேண்டும். ஆனால் விஜயின் மகன் செய்துவிட்டார். அதாவது வீட்டை விட்டு விஜயை மொத்த குடும்பமும் வெளியேற்றி இருக்க வேண்டும், ஆனால் விஜய் மட்டும் வீட்டில் இருக்கு மொத்த குடும்பமும் வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறது.
இந்நிலையில் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கி வரும் ‘சிக்மா’ என்ற திரைப்படம் தொடர்பாக ஒரு விஷயம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த படத்தின் போஸ்டரில் இயக்குநர் பெயராக “Jason Sanjay S” என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.இதில் உள்ள “S” என்பது அவரது தாயார் சங்கீதாவை குறிக்கிறது என்று சிலர் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அதாவது தந்தையான விஜய்யின் பெயரின் முதல் எழுத்தை பயன்படுத்தாமல் தாயின் பெயரின் முதல் எழுத்தை பயன்படுத்தியிருக்கலாம் என்ற ஊகங்களும் பரவி வருகின்றன.இந்த தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக எந்த விளக்கமும் வெளியாகவில்லை
இந்நிலையில், விஜய்யின் மனைவி சங்கீதா தனக்கும் குழந்தைகளுக்கும் சேர வேண்டிய சொத்துகளை விஜய் நியாயமான முறையில் வழங்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். “வீடின்றித் தவிக்கும் எனக்கு விவாகரத்து வழக்கு முடியும் வரை சகல வசதிகளுடன் நீலாங்கரை வீட்டில் தங்க அனுமதி வழங்க வேண்டும்.
“என்னை வீட்டுக்குள் அனுமதிக்க விஜய் மறுத்து வருகிறார். எனவே, நீதிமன்றம் உரிய உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும்,” என்று சங்கீதா தனது மனுவில் மேலும் தெரிவித்துள்ளார். இதற்கிடையில், அந்த வீட்டில் தங்குவதற்கான அனுமதி கோரியபோது விஜய் தரப்பிலிருந்து மிரட்டல்கள் வருவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் மீண்டும் இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் விஜய் வீடின்றி தவிக்கும் அவனுடைய மனைவி , குழந்தைகளுக்கு தங்க வீடு வசதி செய்து கொடுக்க வேண்டும், முதலில் குடும்பத்திற்கு பொறுப்பான குடும்ப தலைவராக விஜய் இருக்க வேண்டும், அதன் பின்பு சமூகத்திற்கு தலைவனாக இருக்கலாம் என பலரும் கருத்து தெரிவித்து வருவது குறிப்பிடதக்கது.

