உலக வல்லரசு என அமெரிக்கா தன்னைத்தானே கூறிக் கொண்டாலும் துருக்கி பாகிஸ்தான் போன்ற சில நாடுகளை தவிர்த்து வேறு எந்த ஒரு நாடும் அதை உண்மையான நட்பு நாடாக ஏற்றுக் கொண்டதில்லை. இந்த நிலையில் இந்தியா மீது அமெரிக்கா விதித்துள்ள அதிரடி வரிவிதிப்பு உலக நாடுகளிடையே கடும் கண்டனத்தை எழுப்பியுள்ளது.அமெரிக்கா இதுவரை வல்லரசு நாடாக இருப்பதற்கு மிக முக்கியமான காரணம் டாலரின் உலகளாவிய வர்த்தக ஆதிக்கமே ஆகும்.
உலகம் முழுவதும் வர்த்தகம் டாலரில் நடப்பதால் அமெரிக்க பொருளாதாரம் வலுவாக இருந்து வருகிறது. ஆனால் சமீப காலமாக பிரிக்ஸ் கூட்டமைப்பில் உள்ள நாடுகள் தங்கள் சொந்த கரன்சிகளில் வர்த்தகம் செய்ய தொடங்கியுள்ளன. குறிப்பாக இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கும் போது இந்திய ரூபாயில் வர்த்தகம் செய்கிறது. இது டாலரின் ஆதிக்கத்தை படிப்படியாக குறைத்து வருகிறது.

இதனால் அமெரிக்க பொருளாதாரம் கீழ்நோக்கி செல்ல ஆரம்பித்துள்ளது. இந்த ஆத்திரத்தில் தான் பிரிக்ஸ் நாடுகள் மீது அமெரிக்கா தனது கோபத்தை வெளிப்படுத்தி உள்ளது. இந்தியா மற்றும் பிரேசில் உள்ளிட்ட நாடுகளுக்கு அமெரிக்கா விதித்த 50 சதவீதம் வரி விதிப்பு உலகம் முழுவதும் எதிர்ப்புகளை சந்தித்து வருகிறது.பிரிக்ஸ் நாடுகளில் மொத்த மக்கள் தொகை, உலகின் மக்கள் தொகையில் சுமார் 40 சதவீதம் ஆகும்.
இந்த நாடுகள் தொடர்ந்து தங்கள் சொந்த கரன்சிகளில் வர்த்தகம் செய்தால் டாலரின் மதிப்பு குறைந்து அமெரிக்கா பொருளாதாரம் மிக மோசமாக சரிவடையும். பிரிக்ஸ் நாடுகளில் மொத்த உள்நாட்டு உற்பத்தி உலகின் மொத்த ஜிடிபி யின் 40 சதவீதம் என்பதும் குறிப்பிடத்தக்கது.இந்த சூழ்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இந்த மாத இறுதியில் சீனாவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.
இந்த பயணத்தின் போது அவர் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார். இந்த மாநாட்டில் ரஷ்ய அதிபர் புதின் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோரும் கலந்து கொள்ள உள்ளனர். அமெரிக்காவின் கடுமையான வரி விதிப்பு குறித்து இந்த மாநாட்டில் மூன்று முக்கிய தலைவர்களும் ஒரே மேடையில் சந்திப்பது அமெரிக்காவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் ஆலோசனையின் படி பிரிக்ஸ் நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து அமெரிக்காவை சர்வதேச வர்த்தகத்திலிருந்து தனிமைப்படுத்த முயற்சிகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த முயற்சி வெற்றி பெற்றால் அமெரிக்கா மற்ற நாடுகளிடம் சரணடைய வேண்டிய நிலை ஏற்படும் என்று அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
கடந்த காலங்களில் நரேந்திர மோடியை பகைத்துக் கொண்ட எந்த உலகத் தலைவரும் இறுதியில் அவரிடம் பணிந்து சரணடைந்துள்ளனர் என்பதற்கு பல உதாரணங்கள் உள்ளன. அதேபோல் விரைவில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியாவிற்காக பணிந்து மன்னிப்பு கேட்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அரசியல் சாணக்கிய தனத்தில் பிரதமர் நரேந்திர மோடி அசகாய சூரர் என்பது உலக அரசியலை படித்த அனைவருக்குமே தெரிந்த விஷயம்தான். உலக வர்த்தக சந்தையில் அதிக வரிகளை விதித்து இந்தியாவை மிரட்ட நினைக்கும் அமெரிக்க அதிபர் டிரம்புக்கு ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் ரஷ்யா மற்றும் சீனா அதிபர்களுடன் இணைந்து கலந்து பேசி அதிபர் டிரம்புக்கு எதிரான கணைகளை ஏவ பிரதமர் மோடி தயாராகி விட்டார்.

