வரும் 2026 சட்டசபை தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வு நேரடியாக அமித்ஷா பார்வையின் கீழ் தான் தேர்வு செய்யப்படுகிறது. இதற்காக தனியார் நிறுவனம் ஒன்று பாஜக போட்டியிடும் தொகுதியில் யார் வேட்ப்பாளராக போட்டியிட்டால் சரியாக இருக்கும் என்கிற சர்வே ரிப்போர்ட் சமீபத்தில் அமித்சா பார்வைக்கு சென்று இருக்கிறது. அதில் அதிமுக கூட்டணியில் பாஜக 40 தொகுதிகள் வரை போட்டியிட சீட் கேட்டுள்ளதாகவும், தற்பொழுது பாஜக 20 தொகுதிகளை தேர்வு செய்து அதற்கான வேட்பாளர்களையும் இறுதி செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் சென்னை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ள சட்டமன்ற தொகுதியிலும் எந்த சமூகம் அந்த தொகுதியில் பெரும்பான்மையாக இருக்கிறதோ அந்த சமூகத்தை சேர்ந்தவருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என அமித்சா முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது, அந்த வகையில் பாஜக போட்டியிடும் 20 தொகுதிகளில், கொங்கு மண்டலத்தில், கோவை தெற்கு தொகுதியில் வானதி ஸ்ரீநிவாசன் போட்டியிட இருக்கிறார்,

கிணத்துக்கடவு தொகுதியில் வசந்த ராஜன் போட்டியிட இருக்கிறார், திருப்பூர் தெற்கு தொகுதியில் ஏபி முருகனந்தம் போட்டியிட இருக்கிறார்,அரவாகுறிஞ்சி தொகுதியில் செந்தில்நாதன், ஈரோடு கிழக்கு அல்லது மொடக்குறிச்சி தொகுதியில் ஜி கே நாகராஜன் போட்டியிட இருப்பதாக பாஜக உத்தேச பட்டியல் உறுதி படுத்துகிறது. சென்னையில் தி நகர் தொகுதியில் வினோஜ் பி செல்வம், அண்ணாநகர் தொகுதியில் பாஜக துணை தலைவர் சக்கரவர்த்தி, வேளச்சேரி தொகுதியில் எஸ் ஜி சூர்யா ஆகியோர் போட்டியிட இருக்கிறார்கள்.
தென்மாவட்டத்தின் தலைநகரான மதுரையில் இரண்டு தொகுதியில் பாஜக போட்டியிடுகிறது, அதில் மதுரை தெற்கு தொகுதியில் பெரும்பான்மையாக இருக்கும் முக்குலத்தோர் சமூகத்தை சேர்ந்த ஒருவருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் அல்லது அந்த தொகுதியில் முக்குலத்தோர் சமூகத்திற்கு அடுத்தபடியாக இருக்க கூடிய சௌராஷ்டிரா சமூகத்தை சேர்ந்த முன்னாள் பாஜக மாவட்ட தலைவர் கே கே சீனிவாசனுக்கு மதுரை தெற்கு தொகுதியில் போட்டியிட அதிக வாய்ப்பு உள்ளது என உறுதி படுத்திக்கிறது பாஜக உத்தேச பட்டியல்.
மதுரை வடக்கு தொகுதியில் பெரும்பான்மையாக இருக்கும் முக்குலத்தோர் சமூகத்தை சேர்ந்த பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் திருமாறன் ஜி போட்டியிட இருக்கிறார் என உறுதி படுத்துகிறது உத்தேச பட்டியல், திருநெல்வேலி தொகுதியில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், நாங்குநேரி தொகுதியில் பெரும்பான்மையாக இருக்க கூடிய நாடார் சமூகத்தை சேர்ந்த தமிழிசை சௌந்தர் ராஜன், விளவங்கோடு தொகுதியில் விஜயதாரணி,
நாகர்கோவில் தொகுதியில் அங்கே பெரும்பான்மையாக இருக்க கூடிய நாடார் சமூகத்தை சேர்ந்த எம் ஆர் காந்தி போட்டியிட இருக்கிறார், நடிகர் சரத்குமார் திருசெந்தூர் அல்லது தென்காசி ஆகிய இரண்டு தொகுதிகளில் ஒரு தொகுதியில் போட்டியிட இருக்கிறார். பேராவூரணி தொகுதியில் கருப்பு முருகானந்தம் போட்டியிட இருக்கிறார், பரமக்குடி தொகுதியில் தேவேந்திர குல சமூகத்தை சேர்ந்த பொன் பலகணபதி ஆகியோர் போட்டியிட இருப்பதாக உறுதி செய்கிறது பாஜக உத்தேச பட்டியல்.
வடமாவட்டத்தில் நெய்வேலி தொகுதியில் வன்னியர் சமூகத்தை சேர்ந்த அஸ்வத்தாமன் , வேலூர் தொகுதியில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் AC சண்முகம் போட்டியிட இருக்கிறார்கள். KV குப்பம் தொகுதியில் பட்டியல் சமூகத்தை சேர்ந்த கார்த்தியானி, ராசிபுரம் தொகுதியில் பட்டியல் சமூகத்தை சேர்ந்த வி பி துரைசாமி ஆகியோர் போட்டியிட இருக்கிறார்கள் என உறுதி படுத்துகிறது உத்தேச பட்டியல்.
பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தமிழகத்தில் எந்த தொகுதியில் போட்டியிட விரும்புகிறாரோ அந்த தொகுதியில் அவருக்கு சீட் கொடுக்க பாஜக தலைமை முடிவு செய்துள்ளது, ஆனால் வரும் சட்டசபை தேர்தலில் அண்ணாமலை போட்டியிட விருப்பம் இல்லை என்ன பாஜக தலைமையிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

