வகுப்பறை ஆக்கிரமிப்பு… மரத்தடியில் அரசு பள்ளி மாணவர்கள்… திராவிட மாடல் ஆட்சியின் எல்லை மீறிய அட்டூழியம்…

0
Follow on Google News

தமிழகம் முழுவதும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகம் கடந்த ஜூலை 15ம் தேதி தொடங்கப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலப்பட்டியில் உள்ள அரசு பள்ளியில் உங்களுடன் ஸ்டாலின் முகம் நடைபெற்றது. இதில் பள்ளி மாணவர்கள் பாடம் படிக்கும் வகுப்பறைகள் ஆக்கிரமிக்கப்ட்டு உங்களுடன் ஸ்டாலின் முகம் நடந்து கொண்டிருக்க, வகுப்பறையில் அமர்ந்து படிக்க வேண்டிய மாணவர்கள், மரத்தடி நிழலிலும், வெளியிலும் அமர்ந்து பாடம் படித்த அவல நிலை ஏற்பட்டது.

உடனே இதை அறிந்த அங்கிருந்த பொதுமக்கள், மாணவர்களை மரத்தடியில் அமரவைத்து பாடம் படிக்க வைப்பதும், வெளியிலில், மணல் தரையில் அமரவைத்து பாடம் படிக்கவைத்து விட்டு, வகுப்பறையில் முகாம் நடத்தினால் என்ன அர்த்தம் என பள்ளி நிர்வாகத்திடம் கேள்வி எழுப்பியுள்ளனர், மேலும் விடுமுறை நாட்களில் முகாம் நடத்தினால் மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது என தங்கள் கோபத்தை பொதுமக்கள் வெளிப்படுத்தியதை பார்க்க முடிந்தது.

மாணவர்கள் படிக்கும் பள்ளி கற்றலுக்கு வழி வகுக்க வேண்டுமே தவிர அதில் அரசியல் இருக்க கூடாது, பள்ளி நாட்களில் தான் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடத்த வேண்டும் என்றால், அந்தந்த ஊரில் உள்ள சமுதாய கூடத்தில் நடத்தலாம், அல்லது ஊராட்சி அலுவலகம், அல்லது நகராட்சி அலுவலகம் போன்ற இடங்களில் நடத்தலாம், இப்படி எந்த ஒரு திட்டமிடலும் இல்லாமல், மாணவர்கள் படிக்கும் வகுப்பறையை ஆக்கிரமித்து கொண்டு ஒரு முகாம் நடத்துவது, அது மக்கள் குறை தீர்க்கும் முகம் இல்லை, மாணவர்களுக்கு ஏற்படுத்தும் இடையூறு என்பதை ஆளும் திமுக அரசு உணரவேண்டும் என்கிறார்கள் பொதுமக்கள்.

கடந்த 2022ம் ஆண்டில் மட்டும் சுமார் 47 ஆயிரம் மாணவர்கள் தமிழ் மொழி தேர்வில் தோல்வியை தழுவி உள்ளார்கள். இப்படியான மாணவர்கள் கல்வியின் எதிர்காலம் மிக பெரிய கேள்விக்குறியாக இருக்கும் நிலையில், மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்துவதில் அக்கறை காட்டுவதில் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டிய அரசாங்கமே, விளம்பர நோக்கத்திற்காக மாணவர்கள் படிப்புக்கு முட்டுக்கட்டையாக வகுப்பறையை ஆக்கிரமித்து உங்களுடன் ஸ்டாலின் நிகழ்ச்சியை நடத்தலாமா என மக்கள் மத்தியில் திமுக அரசுக்கு எதிராக எதிர்ப்பு கிளம்பி வருகிறது.

இந்நிலையில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் இது போன்ற நிகழ்வுகளுக்கு எதிர்காலத்தில் வழி வகுக்காமல், குறிப்பாக அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் எந்த விதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தாத வகையில், திராவிட மாடலின் கடந்த 4 ஆண்டு விடியல் ஆட்சியின் சாதனை என்ன என்பதை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும் என நடுநிலையாளர்கள் முதல்வருக்கு கோரிக்கை தெரிவித்து வருவதையும் பார்க்க முடிகிறது.

மேலும் உசிலப்பட்டி அரசு பள்ளி மாணவர்கள் வகுப்பறையை ஆக்கிரமித்து கொண்டு, திராவிட மாடல் அரசு செய்துள்ள இந்த செயல் எல்லை மீறிய செயல் என்றும், இன்னும் தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில் , மீண்டும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்கிற விளம்பர நோக்கில் திமுக அரசு செய்யும் ஒவ்வொரு நடவடிக்கைகளும் அது திமுக அரசுக்கு எதிராகவே அமைந்து வருகிறது.

அந்த வகையில் ஏற்கனவே மக்கள் மத்தியில் கடும் அதிருப்திக்கு உள்ளாகி உள்ள திமுக அரசு, அதை சரி செய்ய எடுக்கும் நடவடிக்கைள், எந்த ஒரு திட்டமிட்டல் இல்லாத காரணத்தினால், மேலும் திமுகவுக்கு சரிவை தான் ஏற்படுத்தி வருகிறது என்பது குறிப்பதக்கது.