முக்குடைபட்ட டொனால்ட் ட்ரம்ப்… தரமான சம்பவம் செய்த மோடி… உலக அரங்கில் தலைநிமிர்ந்த இந்தியா…

0
Follow on Google News

இந்தியா ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதோடு மட்டுமல்லாமல் அதை பிற நாடுகளுக்கு அதிக லாபத்துக்கு விற்பனை செய்துவருவதால் இந்தியா மீது அதிக வரி விதிக்கப்படும் என அதிபர் டிரம்ப் சமீபத்தில் அறிவித்திருந்தார். இதன்படி, இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு 25% வரி விதிக்கப்படும் என தற்பொழுது அதிபர் டிரம்ப் அறிவித்தார்.

ரஷியாவில் இருந்து அதிக அளவு இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதால், அந்தப் பணம் உக்ரைனுக்கு எதிரான போரில் பயன்படுத்தப்படுவதாகவும், இதைப்பற்றி இந்தியா கவலைகொள்ளவில்லை எனவும் டிரம்ப் சுட்டிக்காட்டியிருந்தார். இந்நிலையில் உக்ரைன் – ரஷ்யா போர் மூன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் நிலையில், இது இந்தியாவின் ராஜதந்திர நகர்வாகக் கருதப்படுகிறது.

ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் மற்றும் எரிவாயு இறக்குமதியை முழுமையாக நிறுத்திவிட்டதால், ரஷ்யா கச்சா எண்ணெயை குறைந்த விலையில் விற்பனை செய்ய தொடங்கியது. இந்த சூழலை பயன்படுத்திக் கொண்ட இந்தியா, தனது எரிசக்தி தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெயை தொடர்ந்து இறக்குமதி செய்து வருகிறது.

இந்திய அரசு ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெயை தொடர்ந்து இறக்குமதி செய்தால் அபராதம் விதிக்கப்படும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. ஆனால், இந்த எச்சரிக்கையையும் மீறி, இந்தியா தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்து வருகிறது. கடந்த மார்ச் மாதம், அமெரிக்காவுக்குள் இறக்குமதி செய்யப்படும் வாகன உதிரி பாகங்கள் மீது 25% கூடுதல் வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார்.

இது உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்கில் எடுக்கப்பட்ட நிரந்தரமான நடவடிக்கை என்றும் அவர் தெரிவித்தார். அமெரிக்காவின் இந்த வரி விதிப்பு, இந்தியாவில் உள்ள வாகன நிறுவனங்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதை எதிர்கொள்ளும் விதமாக, இந்தியா தற்போது அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் வாகன உதிரி பாகங்களுக்குப் வரி விதிக்க உள்ளது.

மேலும் அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில், அந்நாட்டிற்கு அளிக்கப்பட்ட சில சலுகைகளை இந்தியா தற்காலிகமாக நிறுத்தி உள்ளது. மேலும் அமெரிக்க பொருட்கள் மற்றும் அதன் மீதான வரி விகிதத்தை தீர்மானிக்க இந்தியாவுக்கு முழு உரிமை உண்டு என்று இந்தியா தெரிவித்துள்ளது. சர்வதேச அளவில் நிலவும் அழுத்தங்களை மீறி, தனது நாட்டின் நலன்களுக்காக எரிசக்தி பாதுகாப்பை இந்தியா உறுதிசெய்ததுடன்,

அமெரிக்காவின் வரி விதிப்புக்கு சரியான பதிலடியாக தற்போது அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் வாகன உதிரி பாகங்களுக்குப் வரி அதிக வரியை இந்தியா விதித்துள்ளது, சர்வதேச அரங்கில் இந்தியாவின் ராஜதந்திர அணுகுமுறையை எடுத்துக்காட்டுகிறது என உலக நாடுகள் பிரதமர் மோடிக்கு பாராட்டுகளை தெரிவித்து வருவது குறிப்பிடதக்கது.

உக்ரைன் போருக்குப் பிறகு, ரஷிய எண்ணெய் இறக்குமதியை இந்தியா பெருமளவு அதிகரித்தது. 2021-ல் வெறும் 3% மட்டுமே ரஷியாவிடமிருந்து இறக்குமதி செய்யப்பட்ட நிலையில், இப்போது 35-40% வரை உயர்ந்துள்ளது. இது, உலக எண்ணெய் விலையை கட்டுப்படுத்த உதவியதாக இந்தியா தெரிவித்துள்ளது குறிப்பிடதக்கது.