சமீபத்தில் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவை சந்தித்தது பின்னணி என்கிற தகவல் வெளியாகியுள்ளது. வரும் ஆகஸ்ட் 17ம் தேதி துணை ஜனாதிபதி தேர்வு செய்யப்பட இருக்கிறது. குஜராத் ஆளுநர் துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது, அதனை தொடர்ந்து அமைச்சரவையில் அதிரடி மாற்றங்கள் நிகழ இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதில் குறிப்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் துறைகளில் மாற்றம் நிகழ இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அமிட்ஷா உள்துறை அமைச்சர் துறையில் இருந்து பாதுகாப்பு துறைக்கு மறுவதாகவும், அதே போன்று பாதுகாப்பு துறை, நிதி துறையிலும் மாற்றம் நிகழ இருக்கிறது என்கிறது டெல்லி வட்டாரங்கள்.

குறிப்பாக வயதானவர்களுக்கு வழிவிட்டு, இளம் வயதுடையவர்களுக்கு வாய்ப்பு வழங்க பிரதமர் மோடி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அமைச்சரவை மாற்றத்திற்காக இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவை பிரதமர் சந்திக்கவில்லை என்றும், காரணம் அமைச்சரவை மாற்றம் என்பது குறித்து பாஜகவினர் உள்ளே எடுக்க கூடிய முடிவு, அந்த வகையில் பிறகு எதற்காக இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவை பிரதமர் சந்தித்தார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.
வரும் நாடாளுமன்ற கூட்ட தொடரில் அடுத்தடுத்து முக்கிய சட்டம் நிறைவேற்றப்பட இருக்கிறது என்றும் அதற்கான ஒப்புதலை பெறுவதற்காக தான் இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவை பிரதமர் மோடி சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பாஜக நாடளுமன்ற உறுப்பினர்களுடன் பிரதமர் சந்திக்கும் நிகழ்வு நடைபெற இருப்பதால், அணைத்து பாஜக எம்பிகளும் டெல்லியில் இருக்கும்படி வலியுறுத்தப்படுத்துள்ளார்கள்.
இந்நிலையில் நாடாளுமன்றத்தில் மிக பெரிய அறிவிப்பு உறுதியாகியுள்ளது, அது வேறு ஒன்றும் இல்லை நீண்ட நாடகளாகவே விவாத பொருளாக இருந்துவரும் பொது சிவில் சட்டம் இந்தியாவில் அமல்படுத்தப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அனைவருக்கும் ஒரே சட்டம் என்கிற அடிப்படையில் பொது சிவில் சட்டம் அமல்படுத்துவது குறித்து தான் இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவை பிரதமர் மோடி சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது.
மேலும் பொது சிவில் சட்டம் அமல் படுத்தும் பொது, எதிர்க்கட்சிகள் மத்தியில் எழும் எதிர்ப்புக்களை எப்படி நாடளுமன்றத்தில் எதிர்கொள்வது போன்ற ஆலோசனைக்காக தான் பாஜக எம்பிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த இருப்பதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து மற்றொரு சம்பவமும் அரங்கேற இருக்கிறது, அது தான் இலங்கை அரசிடம் இருந்து கச்ச தீவை மீட்பது.
இது தொடர்பாக இலங்கை அரசாங்கத்திடம் இந்திய அரசாங்கம் பேசி வரும் நிலையில், கச்சதீவை இந்தியாவுக்கு சுமார் 40 முதல் 50 ஆண்டுகளுக்கு இலங்கை அரசு லீசுக்கு விட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது, இதற்கான பேச்சுவார்த்தை மிக சுமுகமாக இரண்டு அரசாங்கத்திற்கு இடையில் நடந்து முடிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்த வகையில் கச்சதீவை இந்தியாவுக்கு இலங்கை அரசு லீசுக்கு விட்டுவிட்டால், இந்திய மீனவர்கள் கச்சத்தீவை பயன்படுத்த எந்த தடையும் இல்லை. இந்நிலையில் விரைவில் நாடளுமன்றத்தில் பொது சிவில் சட்டம் இயற்றப்பட்ட இருக்கிறது, மேலும் கட்ச தீவு மீட்கப்பட இருக்கிறது, இது தொடர்பாக தான், இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவை பிரதமர் மோடி சந்தித்து பேசியதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

