அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியுடனான மோதலுக்கு பிறகு ஓ.பன்னீர்செல்வம் அரசியல் பாஜக-வையே நம்பியிருந்தது. இந்நிலையில் தமிழகம் வந்த பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டு ஓ.பன்னீர் செல்வத்துக்கு வாய்ப்பு கொடுக்காத நிலையில், பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறுகிறேன் என அறிவித்தார் ஓபிஎஸ், இந்நிலையில் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறிய ஓபிஎஸ், விஜய்யுடன் கூட்டணி வைப்பார் என்று தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வந்த நிலையில்,
மு.க.ஸ்டாலினை ஒரே நாளில் இரண்டு முறை சந்தித்து தமிழக அரசியலில் மிக பெரிய பரபரப்பை ஏற்படுத்தினார். ஓ.பன்னீர்செல்வத்தின் இந்த நடவடிக்கைகள் தமிழக அரசியலில் யாருமே எதிர்பார்க்காத ட்விஸ்ட்டாக இருந்தது.ஓபிஎஸ் க்கு பெரிய செல்வாக்கு அதிமுக-வினர் மத்தியில் இல்லாவிட்டாலும், அவருக்கான தனி செல்வாக்கு தென்மாவட்டத்தில் இருந்து வருகிறது.

குறிப்பாக முக்குலத்தோர் சமுதாயத்தைச் சார்ந்த ஓ.பன்னீர்செல்வத்திற்கு தென்மாவட்டங்களில் உள்ள முக்குலத்தோரிடம் செல்வாக்கு இன்னும் நீடித்து வருகிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பலாப்பழம் சின்னத்தில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டு அதிமுகவை பின்னுக்கு தள்ளியவர் ஓபிஎஸ். எந்த வகையில் எடப்பாடி பழனிசாமி வசம் முழுவதுமாக அதிமுக வந்துவிட்டாலும் தென்மாவட்டங்களில் அவரது செல்வாக்கு கொங்கு மண்டலத்தில் உள்ளது போன்று இல்லை.
எடப்பாடி பழனிசாமிக்கு எதிர்ப்புகளே தென் தமிழகத்தில் பல இடங்களில் பார்க்க முடிகிறது. இதற்கு காரணம் ஒரே சமூகத்தை சேர்ந்த சசிகலா, தினகரன் மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு எதிரான எடப்பாடி பழனிச்சாமியின் அரசியல் தான் என கூறப்படுகிறது. இந்நிலையில் தேர்தல் நேரத்தில் ஓ.பன்னீர்செல்வம் வெளிப்படையாக எதிர்தரப்பிற்குச் சென்றுவிட்டால் முக்குலத்தோர் வாக்குகள் கணிசமாக எதிர்தரப்புக்கு செல்ல நேரிடும்.
இந்நிலையில் தற்பொழுது ஓபிஎஸை சமாதானப்படுத்தி கூட்டணிக்குள் கொண்டு வர வேண்டும் என தினகரன் உள்ளிட்ட தலைவர்கள் விருப்பம் காண்பித்து வரும் நிலையில், ஓபிஎஸ் கூட்டணியை விட்டு வெளியேறியது டெல்லி தலைமைக்கு கடும் அப்செட்டை ஆக்கியுள்ளது, இந்நிலையில் மீண்டும் ஓபிஎஸை கூட்டணிக்குள் கொண்டுவருவதற்கான வேளைகளில் டெல்லி பாஜக தலைமை முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் 2026 சட்டசபை தேர்தலுக்கு ஒரு வருடத்திற்கு முன்பே அதிமுக – பாஜக கூட்டணியை அமித்ஷா உறுதி செய்தார், இதற்கு முக்கிய காரணம், அதிமுக – பாஜக கூட்டணியை வலுப்படுத்த வேண்டும், மேலும் திமுகவுக்கு எதிராக உள்ள மற்ற கட்சிகளும் இந்த கூட்டணியில் ஒன்றிணைய வேண்டும் என்பது தான் அமித்ஸாவின் திட்டமும் கூட , இதில் விஜய், சீமான் போன்ற கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.
இந்நிலையில் கூட்டணிக்கு புதிய கட்சிகள் வரும் என ஒரு பக்கம் எதிர்பார்த்த நிலையில், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக உடன் கூட்டணியில் இருந்த தேமுதிக தற்பொழுது திமுக பக்கம் சாய தொடங்கியுள்ளது. மேலும் ஓபிஎஸ் திமுக தலைவரை சந்தித்துள்ளார். இந்நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியை வலுப்படுத்தும் வகையில், உடனே TTV தினகரனை எடப்பாடி பழனிச்சாமி சந்திக்க வேண்டும் என அமித்ஷாவிடம் இருந்து அதிரடி உத்தரவு வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து விரைவில் TTV தினகரன் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் சந்திப்பு நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தேமுதிக, மற்றும் ஓபிஎஸ் இருவரையும் மீண்டும் கூட்டணிக்குள் கொண்டுவருவதற்கான முயற்சியிலும் பாஜக ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

