திமுக – காங்கிரஸ் இடையிலான மோதல் உச்சகட்டத்தை எட்டி இருக்கும் நிலையில், தொடர்ந்து இரண்டு தரப்பினருக்கும் இடையிலான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது, இதில் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர், திமுக தரப்பில் இருந்து யாராவது காங்கிரஸ் கட்சிக்கு எதிராக வாய் திறக்க மாட்டார்களா.? அதை வைத்து திமுகவை வெச்சு செஞ்சு விடனும் என்கிற நோக்கில் தொடர்ந்து திமுகவை சீண்டி வருகிறார் மாணிக்கம் தாகூர்.
அப்படி ஒரு சூழலில் திமுக எம் எல் ஏ, கோ தளபதி , தொடர்ந்து திமுகவை சீண்டி வந்த மாணிக்கம் தாகூருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தொகுதிக்கு 3000 ஒட்டு கூட காங்கிரஸ் கட்சிக்கு கிடையாது, பூத் கமிட்டி கிடையாது என பதில் கொடுக்கு, ஆகா நம்ம எதிர் பார்த்தது இது தான், திமுக எம்பி காங்கிரஸ் கட்சியை விமர்சனம் செய்து விட்டார், இனி அடித்து ஆட வேண்டியது தான் என மாணிக்கம் தாகூர் சமீபத்தில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் மிக கடுமையாக திமுகவை விமர்சனம் செய்து இருக்கிறார்.

கூட்டத்தில் உணர்ச்சிவசப்பட்டுப் பேசிய மாணிக்கம் தாகூர்,’தமிழகத்தில் 2016 முதல் திமுகவுடன் கூட்டணி தொடர்கிறது. ஆனால், தொகுதிப் பங்கீடு குறித்துப் பேச குழு அமைக்கக்கூட 70 நாட்களாகக் காத்திருக்கிறோம். ‘வந்தால் வரட்டும், போனால் போகட்டும்’ என அமைச்சர்கள் பேசுவது பெரும் வலியைத் தருகிறது. நீங்கள் செய்த தவறுகளுக்காகப் பலியைச் சுமந்தவர்கள் நாங்கள் என்பதை மறந்துவிடாதீர்கள் என தெரிவித்த மாணிக்கம் தாகூர்.
மேலும் எங்களுக்குப் பணம் கம்மியாக இருக்கலாம், ஆட்கள் கம்மியாக இருக்கலாம்; ஆனால் எங்கள் ஆதரவு இல்லாமல் நீங்கள் அரியணை ஏறி இருக்க முடியாது.’ காங்கிரஸ் கட்சியை இழிவாகப் பேசிய திமுக மாவட்டச் செயலாளர் தளபதி மற்றும் அமைச்சர்கள் மீது முதல்வர் ஸ்டாலின் இதுவரை நடவடிக்கை எடுக்காதது வருத்தமளிப்பதாகக் குறிப்பிட்ட மாணிக்கம் தாகூர், எங்களுக்கு மரியாதை கொடுக்கவில்லை என்றால் நாங்களும் திருப்பிப் பேசுவோம், திருப்பி அடிப்போம்’ என திமுகவை கடுமையாக எச்சரித்து இருந்தார் மாணிக்கம் தாகூர்.
இப்படி தொடர்ந்து திமுகவை கிழி கிழி என மாணிக்கம் தாகூர் கிழித்து வந்து கொண்டிருக்கையில், மறுப்பக்கம் மாணிக்கம் தாகூர் மீது நடவடிக்கை எடுக்க வில்லை என்றால் கூட்டணியை விட்டு வெளியே போங்க என காங்கிரஸ் கட்சியை பொடனியில் தட்டி வெளியே தள்ளி விட வேண்டிய திமுக தலைமையோ, நம்மை எவ்வளவு விமர்சனம் செய்தாலும் பரவாயில்லை, காங்கிரஸ் நம்ம கூட்டணியை விட்டு சென்று விட கூடாது என்பதில் திமுக கூட்டணி மௌனமாக இருப்பதை பார்க்க முடிகிறது.
இதில் உச்சகட்டமாக மாணிக்கம் தாகூர் பின்னனியில் இருந்து பேச வைப்பதே ராகுல் காந்தி தான் என்பதை தெரிந்து கொண்டு அடக்கி வசிக்கும் திமுக தலைமை, காங்கிரஸ் முக்கிய தலைவரான பா.சிதம்பரம், திருநாவுக்கரசு, பீட்டர் அல்போன்ஸ், மற்றும் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி ஆகியோர் மூலம் சோனியா காந்தியை அணுகி கூட்டணியில் எந்த பிளவு வந்து விடக்கூடாது என சமாதான முயற்சியில் திமுக தலைமை முயற்சி செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் முடுச்சா எங்களை கூட்டணியை விட்டு வெளியேற்று என சவால் விடும் தோரணையில் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் பேசி வந்து கொண்டிருக்கையில், மறுப்பக்கம் திமுக தலைமை சமரசம் செய்ய முயற்சித்து வருவது, காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வெளியேறினால், அடுத்தடுத்து பல கட்சிகள் கூட்டணியில் இருந்து வெளியேறி , கடந்த 2011 தேர்தலில் எதிர்க்கட்சி அந்தஸ்து கூட கிடைக்காத அளவுக்கு படு தோல்வியை அடைந்து விடுவோம் என்கிற அச்சம் திமுகவுக்கு இருந்து வருவதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

