சர்வதேச உலக நாடுகளுக்கு இடையிலான சிக்கலில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்தியா, வல்லரசு நாடுகளான அமெரிக்கா – ரஷ்யா இடையிலான அரசியல் மற்றும் பொருளாதார சம நிலையை உருவாக்கும் முக்கிய சக்தியாக தன்னை நிலை நிறுத்தி இருக்கிறது . கடந்த 2026 பிப்ரவரி மாதம் இந்தியாவுக்கான வரியை 50 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக அமெரிக்க அதிபர் ட்ரம் குறைத்தார்.
அது மட்டுமன்றி ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் இந்தியா வாங்குவதற்கு விதிக்கப்பட்ட 25% வரியை மொத்தமாக அமெரிக்க அதிபர் டிரம்ப் நீக்கி இருக்கிறார். மேலும் இந்தியாவுக்கான சுங்க வரிகள் 18 சதவீதமாக குறைக்கப்பட்டதும் மட்டுமில்லாமல் பல்துறை எரிசக்தி இறக்குமதி பற்றிய உறுதிமொழிகளும் சமீபத்தில் இந்தியா அமெரிக்கா இடையிலான இடைக்கால வர்த்தக ஒப்பந்த மூலம் இடம் பெற்றது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் இந்த நடவடிக்கையின் மூலம் உலக அளவில் இந்தியாவின் வர்த்தக நம்பகத்தன்மை தற்பொழுது உயர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது. சர்வதேச நெருக்கடிகளை இந்தியா வேடிக்கை மட்டும் பார்த்து இருக்காமல் அமெரிக்கா ரஷ்யா இரு நாடுகளுக்கு இடையே சமரசம் செய்து சம நிலையை ஏற்படுத்தும் ஒரு பாலமாக இந்தியா செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
ரஷ்யா மற்றும் அமெரிக்கா இடையிலான சமரச பேச்சுவார்த்தையில் இந்தியா முக்கிய பங்காற்றியுள்ளது குறிப்பிட்டத்தக்கது.QUAD கூட்டணி மற்றும் BRICS விரிவாக்க முயற்சிகளில் ஒரே நேரத்தில் ஈடுபட்டு வரும் இந்தியா, எந்த ஒரு பக்கத்தையும் தேர்வு செய்யாமல், இரு தரப்புகளுடனும் உறவை பேணும் “சமநிலை சக்தி” என்ற நிலையை பின்பற்றி வருகிறது.
மேலும் SWIFT மாற்று கட்டண அமைப்புகள் குறித்து BRICS நாடுகள் ஆராயும் நிலையில் கூட, டாலர் அடிப்படையிலான பரிவர்த்தனைகளுடன் நடைமுறை அணுகுமுறையை இந்தியா தொடர்ந்து வருவது குறிப்பிடதக்கது.பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இடையேயான 2026 பிப்ரவரி கலந்துரையாடலுக்குப் பிறகு, மருந்து மற்றும் ரத்தின கற்கள் போன்ற துறைகளில் கூடுதல் வர்த்தக தளர்வுகள் வழங்கப்படலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
மேலும் அடுத்த ஐந்து ஆண்டுகளில் அமெரிக்காவிலிருந்து பெருமளவு கொள்முதல் செய்ய இந்தியா முன்வந்துள்ளது. உக்ரைன்–ரஷ்யா மோதல் சூழலிலும், இரு தரப்புகளுடனும் சமரசம் செய்து பேச்சுவார்த்தை நடத்தும் இடத்தில் இந்தியா உள்ளது. அந்த வகையில் உலக வல்லரசு நாடுகளுக்கு இடையில் ஒரு பிரச்சனை என்றாலும் கூட அதை தீர்த்து வைக்கும் இடத்தில் இந்தியா இன்று இருந்து வருகிறது.
தூதரக நம்பிக்கை, பொருளாதார நெகிழ்வு, மற்றும் பல்துறை கூட்டாண்மை — இந்த மூன்றையும் இணைக்கும் அணுகுமுறையின் மூலம், உலக அரசியல் உரையாடல்களில் இந்தியா மைய இடத்தைப் இருந்து வருகிறது என்பதே உலக நிபுணர்கள் கருத்தாக அமைந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் உலக நாடுகளுக்கு இடையிலான பிரச்சனையை தீர்வு செய்வதில் முதன்மை வகிக்கும் இந்தியா.

