திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள கார்த்திகை தீப தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பான பிரச்சனை மிக பெரிய அளவில் விஸவரூபம் எடுத்து இருக்கும் நிலையில், நீதிமன்ற உத்தரவை மதித்து மலை உச்சியில் உள்ள கார்த்திகை தீப தூணில் தீபம் ஏற்றாமல் 144 தடை உத்தரவு போட்ட மதுரை மாவட்ட ஆட்சியர் தரப்பு நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டிருக்கிறது, அந்த வகையில் அடுத்தடுத்து மலை உச்சியில் உள்ள கார்த்திகை தீப தூணில் தீபம் ஏற்றுவதற்கான சாதகமான ஒரு சூழல் உருவாகி வருவதை பார்க்க முடிகிறது.
இந்த பரபரப்புக்கு மத்தியில் திருப்பரங்குன்றம் காத்திகை தீப தூண் விவகாரத்தில் இன்றளவும் அந்த பகுதி மக்கள் மத்தியில் அதே எழுச்சியுடன் உயிரோட்டமாக வைத்து வருகின்றவர் மதுரை மேற்கு மாவட்ட பாஜக மாவட்ட தலைவர் சிவலிங்கம், அந்த வகையில் சிவலிங்கம் கடந்த வருடம் சிவராத்திரி அன்று செய்த ஒரு செயல், இந்த வருடம் சிவராத்திரி தினத்தில் மதுரை திருப்பரங்குன்றம் மலையில் மிக பெரிய மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது.

கடந்த வருடம் சிவராத்திரிக்கு முன்பே திருப்பரங்குன்றம் மலை தொடர்பான பிரச்சனை விஸ்வரூபம் எடுக்க தொடங்கியது, அந்த வகையில் கடந்த வருடம் சிவராத்திரி அன்று இரவு உச்சியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலுக்கு பழனியாண்டவர் கோவில் வழியாக சென்று சிவனை வழிபட சென்ற போது மலை மீது ஏறவிடாமல் சிவலிங்கம் தடுத்து நிறுத்தப்பட்டார்.
பாரம்பரியமாக மலை உச்சிக்கு செல்லும் பழனியாண்டவர் கோவில் பாதை வழியாக செல்ல அனுமதிக்க முடியாது, மழைக்கு பின்புறம் உள்ள பாதை வழியாக சொல்லுங்க என போலீசார் தெரிவிக்க, அன்று இரவு முழுவதும், கடந்த வருடம் சிவராத்திரி தினமான அன்று விடிய விடிய பழனியாண்டவர் கோவில் முன்பு தர்ணா போராட்டம் நடத்தினார் சிவலிங்கம், இதனை தொடர்ந்து அதிகாலை 6 மணிக்கு மலை மீது ஏற பாஜக மாவட்ட தலைவர் சிவலிங்கம் அனுமதிக்கப்பட்டார்.
இதன் பின்பு மலை மீது உள்ள காசி விஸ்வநாதர் கோவிலுக்கு சென்று வழிபட்ட சிவலிங்கம், இந்த வருடம் சிவராத்திரிக்கு முன்னெச்சரிக்கையாக பழனியாண்டவர் கோவில் பாதை வழியாக சென்று பக்தர்கள் வழிபட அனுமதிக்க வேண்டும், மேலும் இரவில் பக்தர் இரவில் மலையில் இருவதற்கு வசதியாக மின் விளக்கு வசதி செய்து கொடுக்க வேண்டும் என சம்பந்த பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்த பாஜக மாவட்ட தலைவர் சிவலிங்கம், அதற்கான முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார்.
இதனை தொடர்ந்து தற்பொழுது மலை உச்சியில் உள்ள காசிவிஸ்வநாதர் கோவிலுக்கு சிவராத்திரி அன்று இரவு சென்று பக்தர்கள் வழிபட வசதியாக பழனியாண்டவர் கோவில் வழியாக மின் விளக்கு வசதி செய்யப்பட்டு இருக்கிறது, இதனை தொடர்ந்து மலை உச்சியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலுக்கு சென்று பக்தர்கள் சிவராத்திரி அன்று தற்பொழுது வழிபட செல்வது ஒரு வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வாக அமைத்துள்ளது.
அந்த வகையில் கடந்த வருடம் சிவராத்திரி அன்று இரவு தொடங்கி விடிய விடிய சிவலிங்கம் நடத்திய போட்டதிற்கு, அதனை தொடர்ந்து கடந்த ஒரு வருடமாக அடுத்த சிவராத்திரி தினத்தில் மலை உச்சியில் உள்ள காசி விஸ்வந்தார் கோவிலுக்கு பக்தர்கள் சென்று வழிபட அவர் எடுத்து முயற்சிக்கு கிடைத்த வெற்றி என திருப்பரங்குன்றம் பகுதி பக்தர்கள் பாராட்டி வருவதை பார்க்கு முடிகிறது.
மேலும் திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள முருகன் கோவிலுக்கு சொந்தமான கல்லத்தி மரத்தில், தர்க்கா கொடி கட்டப்பட்டு இருந்த நிலையில் பாஜக மூத்த தலைவர் ஹெச் ராஜா உடன் சிவலிங்கம் சென்று அந்த கல்லத்தி மரத்தில் கொடியை அகற்ற எடுத்து முயற்சியிக்கு பலனாக கல்லத்தி மரத்தில் இருந்த கொடி அகற்றப்பட்டது குறிப்பிடதக்கது.




