அதிகாரத்தில் இருந்தாலும் இல்லை என்றாலும் தன்னுடைய சொந்த செலவில் மதுரை மக்களின் நலனுக்காக பலவேறு நன்மைகளை செய்து வருகிறவர் தான் அதிமுக மருத்துவ அணி மாநில இணை செயலாளர் டாக்டர் சரவணன். அவர் சார்த்த மருத்துவ துறை மூலம் மதுரை மக்களுக்கு உதவி செய்வது மட்டுமில்லாமல், ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம் என்கிற சொற்களுக்கு ஏற்ப மதுரையில் நடுத்தர மற்றும் ஏழை மக்களின் பசியை போக்கும் வகையில் ஒரு செயலை செய்து, மதுரை மக்களால் மக்கள் மருத்துவர் என்று அழைக்கப்படும் டாக்டர் சரவணன், அந்த மக்கள் மருத்துவர் பட்டத்துக்கு தகுதியான நபர் என்பதை நிரூபிக்கும் வகையில் அமித்துள்ளது டாக்டர் சரவணனின் சமீபத்திய செயல்பாடு.
மதுரையில் ஆட்டோ ஓட்டுநர், கட்டிட தொழிலாளிகள், துப்புரவு தொழிலாளிகள், என கூலி தொழிலாளிகள் முதல் நடுத்தர மக்கள் வரை பசிய போக்கும் வகையில் டாக்டர் சரவணனுக்கு சொந்தமான மதுரை சரவணா மருத்துவமனை மற்றும் சூர்யா டிரஸ்ட் இணைந்து “மதுரை சரவணா கிச்சன்” என்ற பெயரில் ஏழை மக்களுக்கான நடமாடும் மலிவு விலை உணவகத்தை தொடங்கி வைத்து வெற்றிகரமாக வழிநடத்தி வருகிறார் டாக்டர் சரவணன்.

நடமாடும் இந்த உணவகத்தின் மூலம் காலை 3 இட்லி மற்றும் 1 டீ வெறும் 10 ரூபாய்க்கு பொதுமக்களுக்கு வழங்கி வருகிறார் டாக்டர் சரவணன். மேலும் மதியம் நடமாடும் இந்த மதுரை சரவணா கிச்சன் மூலம் வெறும் 20ரூபாய்க்கு “சிக்கன் பிரியாணி மற்றும் முட்டை பிரியாணியை வழங்கி வருகிறார் மருத்துவர் சரவணன். மலிவு விலையில் காலை டிப்பன் , மதிய உணவு என ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களின் பசியை போக்கி வரும் டாக்டர் சரவணனின் இந்த செயல் மதுரையில் பலரின் பசியை போக்கி வருகிறது.
இதற்கு முன்பு சட்டமன்ற உறுப்பினராக இருந்த போது மக்களுக்காக என்ன பணியை ஒரு சட்டமன்ற உறுப்பினராக செய்தாரோ டாக்டர் சரவணன், தற்பொழுது சட்டமன்ற உறுப்பினராக இல்லை என்றாலும் கூட சட்டமன்ற உறுப்பினராக இருந்ததை விட அதிகமாகவே டாக்டர் சரவணன் மக்கள் பணி செய்து வருவது, ஐயோ இவரை கடந்த 2021 சட்டசபை தேர்தலில் மிஸ் செய்து விட்டமே என வருத்தப்படும் மதுரை வடக்கு தொகுதி மக்களின் பெரும்பாலானோரின் வரும் சட்டசபை தேர்தலின் ஒரே தேர்வாக டாக்டர் சரவணன் இருந்து வருவதை பார்க்க முடிகிறது.
குறிப்பாக மதுரை வடக்கு தொகுதி மக்கள் பெரும்பாலானோர் தங்கள் குறைகளை டாக்டர் சரவணனிடம் முறையிட்டால் சரி செய்து வைப்பார் என்கிற நம்பிக்கையில், அந்த தொகுதி சார்த்த அடிப்படை பிரட்சனை எதுவாக இருந்தாலும் டாக்டர் சரவனை நேரில் சந்தித்து முரையிட்டு வருகிறார்கள் மதுரை வடக்கு தொகுதி மக்கள், அதே போன்று மக்களின் குறைகளை கேட்டு அதற்கு தீர்வு காணும் நடவடிக்கைகளில் உடனே ஈடுபட்டு வருகிறார் மருத்துவர் சரவணன்.
இப்படி மக்கள் வாக்களித்து சட்டமன்ற உறுப்பினராக்கிய திமுக சிட்டிங் எம் எல் ஏ , மதுரை சுற்று பகுதியில் எங்கே குவாரி அமைத்து கனிம வளங்களை கொள்ளை அடிக்கலாம் என மும்மூரமாக இருக்க , மேலும் சமிபத்தில் மதுரை வடக்கு தொகுதி சிட்டிங் எம் எல் ஏ வுக்கு சொந்தமான ஒரு கல் குவாரிக்கு எதிராக அந்த பகுதி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட செய்தியும் வெளியானது.
அந்த வகையில் கனிம வளங்களை சுரண்டும் தன்னுடைய கல் குவாரியை எப்படி மக்கள் போராட்டத்தில் இருந்து காப்பாற்றுவது என ஒரு பக்கம் பிசியாக ஆளும் கட்சி சிட்டிங் எம் எல் ஏ ஓடிக்கொண்டிருக்க, மறுப்பக்கம் மதுரை வடக்கு தொகுதி மக்களின் குறைகளை அறிந்து தீர்த்து வைத்து மதுரை வடக்கு தொகுதி மக்களின் மனதில் ஆழமாக இடம் பிடித்த வருகிறார் டாக்டர் சரவணன்.

