களம் இறங்கிய சபரீசன்… கட்டம் கட்ட படும் கனிமொழி…உச்சக்கட்டத்தில் கோஷ்டி பூசல்…

0
Follow on Google News

டெல்லி அரசியலுக்கு குட் பை சொல்லிவிட்டு மாநில அரசியலில் தலையெடுக்க விரும்பிய கனிமொழி, முதல்வர் முக ஸ்டாலின் குடும்பத்திற்கு தன்னுடைய டெல்லி லாபியை பயன்படுத்தி பல்வேறு நெருக்கடி கொடுத்து, தென் மண்டல பொறுப்பாளர் பதவியை பெற்றார், குறிப்பாக கருணாநிதி உயிரோடு இருக்கும் போதே கனிமொழி அரசியல் வருகையை விரும்பாத முதல்வர் முக ஸ்டாலின் , அப்போதே ஓரம் கட்ட முயற்சி செய்தும் பலன் அளிக்கவில்லை.

இதனை தொடர்ந்து கருணாநிதி மறைவுக்கு பின்பு அரசியலில் என்ட்ரி கொடுத்த உதயநிதி ஸ்டாலினுக்கு போட்டியாக உருவெடுத்து வருகிறார் கனிமொழி என, முதல்வர் குடும்பம் கனிமொழி டெல்லி அரசியலை பார்த்துக்கொள்ளட்டும், மாநில அரசியலில் தலையிட வேண்டாம் என கனிமொழியை மெல்ல மெல்ல அரசியலில் இருந்து ஓரம் கட்டுவது மட்டுமின்றி, அவருடைய ஆதரவாளர்களுக்கு கட்சியில் முக்கியத்துவம் மறுக்கப்பட்டு ஓரம்கட்டும் படலம் அரங்கேறியது.

இப்படி ஒரு சூழலில் சாதுர்யமாக டெல்லி லாபியை பயன்படுத்தி கொண்டு முதல் குடும்பத்தையே டாஸ்மாக் அமலாக்க துறை ரைடு மூலம் லாக் செய்து கட்சியில் தன்னை நிலை நிறுத்தி கொண்டார் கனிமொழி, துணை பொதுச் செயலாளரான கனிமொழிக்கு அண்ணா அறிவாலயத்தில் தனி அறை ஒதுக்கப்பட்டது, மேலும் வரும் சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு கனிமொழி தென்மண்டல பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.

தற்போது தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த திமுகவினரை ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறார் கனிமொழி. குறிப்பாக தென் தமிழகத்தில் தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, ஆகிய மாவட்ட திமுகவை தன்னுடைய கட்டுக்குள் கொண்டு வரும் வகையில் கனிமொழியின் செயல்பாடுகள் இருந்து வரும் நிலையில், இதை முதல் குடும்பத்தினரானால் ஏற்று கொள்ள முடியவில்லை.

மேலும் வரும் சட்டசபை தேர்தலில் தூத்துக்குடி மாவட்டத்தில் எதாவது ஒரு தகுதியில் போட்டியிட்டு மாநிலத்தில் அடுத்து திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அமைச்சரவையில் இடம் பிடிக்கும் திட்டத்தில் கனிமொழி இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கனிமொழி நகர்வு அடுத்து உதயநிதிக்கு போட்டியாக உருவெடுத்து விடுவார் என்கிற அச்சம் முதல் குடும்பத்திற்கு ஏற்பட உடனே கனிமொழியின் ஆட்டத்தை தடுத்து நிறுத்தும் வேளையில் இறங்கி இருக்கிறது முதல் குடும்பம்.

அந்த வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மருமகனான சபரீசன் தற்போது தென் மண்டலங்களுக்கு திடீர் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கிறார். அவரும் தனியாக தொகுதி வாரியாக கூட்டங்கள் போட்டு நிர்வாகிகளை சந்தித்துப் பேசி வருகிறார். அதாவது  தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்கள் முழுவதும் சுற்றுப்பயணங்கள் மேற்கொண்டு கட்சி நிர்வாகிகளை தன்னுடைய ஆதரவாளர்களாக கனிமொழியின் முயற்சிக்கு முட்டுக்கட்டையாக அமைத்துள்ளது சபரீசனின் தென் மண்டல சுற்று பயணம்.

இந்நிலையில் தன்னுடைய கோட்டைக்குள் சபரீசன் தலையிடுவது கனிமொழிக்கு மிக பெரிய அளவில் அதிருப்தியை ஒரு பக்கம் ஏற்பட்டு இருக்கும் நிலையில், கனிமொழி ஆதரவாளர்கள் யார் என்று அடையாளம் காணப்பட்டு, அவர்களுக்கு தேர்தலில் போட்டியிட சீட் தப்பி தவறி கூட கொடுத்து விட கூடாது என்பதர்க்கவே சபரீசன் தென் மண்டலத்தில் சுற்று பயணம் மேற்கொண்டு வருவதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் சட்டசபை தேர்தலுக்கு நாட்கள் நெருங்கி கொண்டிருக்கையில் கனிமொழி ஏரியாவில் புகுந்து சபரீசன் ஆய்வு செய்வது திமுகவின் உட்கட்சி பூசல் உச்சகட்டத்தை எட்டி இருக்கிறது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.