பாஜகவின் நற்பெயரை கெடுக்கும் கல்யாணராமன்.! பாஜக முக்கிய தலைவர் மற்றும் வேலூர் இப்ராஹிம் கண்டனம்.!

0
Follow on Google News

தமிழகத்தில் பாஜகவுக்கு எதிராக திமுக மற்றும் அதன் கூட்டணி காட்சிகள், பாஜக சிறுபான்மை சமூகத்துக்கு எதிரான கட்சி, குறிப்பாக இஸ்லாமிய சமூகத்துக்கு எதிரான கட்சி என்றும், பாஜக தொடர்ந்து அவர்கள் ஆட்சி செய்தால் இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பு கிடையாது என்கிற ஒரு போலியான பிம்பத்தை உருவாக்கி வைத்துள்ள நிலையில், அந்த பிம்பத்தை தமிழக பாஜக மற்றும் சில சிறுபான்மை தலைவர் உடைக்க கடுமையாக உழைத்து வருகின்றனர், அதன் அடிப்படையில், ஏகத்துவ ஜமாத் தலைவர் வேலூர் இப்ராஹிம் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கும் நிலையில் கூட தமிழக முழுவதும் தான் சார்ந்த இஸ்லாமிய சமூகத்தினர் மத்தியில், பாஜக இஸ்லாமியர்களுக்கு எதிரான கட்சி கிடையாது என்பதை தீவிரமாக பிரசாரம் செய்து வருகின்றார்.

இந்நிலையில் வேலூர் இப்ராஹிம் போன்றவர்களின் கடும் முயற்சியால் இஸ்லாமிய சமூகத்தினர் மெல்ல பாஜகவின் உண்மை நிலைப்பாடு அறிந்து பாஜகவுக்கு ஆதரவு கொடுக்க தொடங்கியுள்ளனர், சமீபத்தில் நடக்கும் பாஜக கூட்டங்களில் கூட இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த பெண்கள், ஆண்கள் என கூட்டம் கூட்டமாக வர தொடங்கியுள்ளனர், ஆனால் பாஜகவை சேர்ந்த கல்யாணராமன் போன்றவர்கள், இஸ்லாமிய மதத்தினர் மனம் புண்படும்படி பேசுவது பாஜகவின் நற்பெயரை கெடுக்கும் வகையில் அமைந்துவிடும் என்கிற குற்றசாட்டு எழுந்துள்ளது.

கோவை மேட்டுப்பாளையத்தில் பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்குபெற கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் சென்ற வேலூர் இப்ராஹிம் இடையில் மறித்து போலீசார் கைது செய்தனர் இதனால் கண்டன ஆர்ப்பாட்டத்தில் வேலூர் இப்ராஹிம் பங்குபெற முடியவில்லை, ஆனால் மேட்டுப்பாளையத்தில் நடந்த கண்டன ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட பாஜகவை சேர்ந்த கல்யாணராமன் இஸ்லாமிய சமூகத்தினர் நம்பிக்கையாக இருக்கும் அவர்களின் இறை தூதர் நபிகள் நாயகம் பற்றி மிக கீழ்த்தரமாக விமர்சனம் செய்துள்ளது இஸ்லாமிய சமூகத்தினர் மத்தியில் பாஜகவின் நற்பெயரை கெடுக்கும் விதத்தில் அமைந்துள்ளது.

இது குறித்து வேலூர் இப்ராஹிம் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார், கல்யாணராமன் நபிகள் நாயகம் குறித்து இழிவாக பேசியது எந்த ஒரு சமூகத்தினரும் ஏற்று கொள்ளமாட்டார்கள், மேலும் தேர்தல் சமயத்தில் இது போன்ற நபர்களின் அநாகரீகமற்ற பேச்சுக்களால் பாஜகவுக்கு மிக பெரிய பின்னடைவை ஏற்படுத்த கூடிய விளைவுகளை ஏற்படுத்தும் என தெரிவித்த வேலூர் இப்ராஹிம், பாஜக தொண்டர்கள் முதல் தலைவர்கள் வரை இஸ்லாமிய சமூகத்தை அரவணைத்து செல்லும் நிலையில், கல்யாணராமன் பேசிய பேச்சுக்கள் பாஜகவின் நற்பெயரை கெடுக்கும் என்றும்.

மேலும் கல்யாணராமன் தனது அரசியல் லாபத்துக்காக இஸ்லாமிய சமூகத்தை இழிவாக பேசி வருவதாக தெரிவித்துள்ளார் வேலூர் இப்ராஹிம், மேலும் இந்த சர்ச்சை குறித்து பாஜக மாநில பொதுச்செயலாளர் பேராசிரியர் இராம ஸ்ரீநிவாசன் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார், அவர் கூறியதாவது, எந்த ஒரு மத நம்பிக்கையை இழிவாக பேசுவதை ஏற்று கொள்ள முடியாது, கோடிக்கணக்கில் வாழும் இஸ்லாமியர்கள் இறைத்தூதரை பற்றி இழிவாக பேசியது கண்டனத்துக்குரியது என தனது கடனத்தை பேராசிரியர் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது..