அனுமதியின்றி நுழைந்த ஊடகங்கள் விரட்டியடிப்பு.! பெருந்தன்மையுடன் நடந்து கொண்ட குஷ்பூ.! ஜெ.பி.நட்டா நிகழ்ச்சியில் நடந்தது என்ன.?

0
Follow on Google News

இரண்டு நாள் பயணமாக மதுரை வந்துள்ள பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா பல்வேறு நிகழ்ச்சியில் பங்குபெற்று வருகிறார். நேற்று மாலை மதுரையில் நடந்த பிரமாண்ட பொது கூட்டத்தில் பேசிய ஜெ.பி.நட்டா வருகின்ற சட்டசபை தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணியை உறுதி செய்த நிலையில், இன்று மதுரை வேலம்மாள் கெஸ்ட் ஹவுசில் தங்கி இருக்கும் ஜெ.பி.நட்டாவை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து பேசுகிறார்.

நேற்று நடந்த பொது கூட்டத்துக்கு முன்பு வேலம்மாள் மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள பிரமாண்ட ஆடிட்டோரியத்தில் நடந்த பல்வேறு நிகழ்ச்சியில் பங்குபெற்று பேசினார் ஜெ.பி.நட்டா, நேற்று காலை பாஜக சமூக ஊடக பிரிவு பிரிவு சார்பில் சமூக ஊடக ஆர்வலர்கள் சந்திப்பு நடைபெற்றது, இந்த நிகழ்ச்சியில் தமிழகம் முழுவதும் இருந்து, சுமார் இரண்டு ஆயிரத்துக்கு மேல் சமூக ஊடக ஆர்வலர்கள் பங்குபெற்றனர், மேலும் கட்சியின் மூத்த தலைவர்கள் அனைவரும் பங்கு பெற்றனர்.

நிகழ்ச்சி நடந்த மேடையில் அணைத்து தலைவர்களுக்கும் இருக்கை ஏற்பாடு செய்ய முடியாது என்பதால், பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா, பாஜக தமிழக பொறுப்பாளர் CT.ரவி, இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, பாஜக தமிழக தலைவர் எல்.முருகன், பாஜக ஐடி பிரிவு தலைவர் CTR நிர்மல் குமார் மற்றும் ஊடக பிரிவை சேர்ந்த முக்கிய தலைவர்கள் என பத்து இருக்கைகள் மட்டுமே மேடையில் ஏற்பாடு செய்யப்பட்டது, அதற்கு ஏற்றார் போல் தலைவர்கள் மேடையில் அமர்ந்து இருந்தனர்.

இந்நிலையில் நிகழ்ச்சியில் பங்கு பெற ஜெ.பி.நட்டா வருவதற்கு முன்பு நிகழ்ச்சி நடக்கும் மேடைக்கு வந்த முன்னால் எம்பி சசிகலா புஷ்பா சிறிது நேரம் பேசிவிட்டு, இந்த மேடை எனக்கான மேடை இல்லை என தெரிவித்துவிட்டு நான், கீழே அமர்ந்து பார்க்கிறேன் என பெருந்தன்மையுடன் பேசிவிட்டு கீழே பார்வையாளர்கள் முன் வரிசையில் அமர்ந்து நிகழ்ச்சியை பார்வையிட்டார், அவரை தொடர்ந்து பாஜக முக்கிய தலைவர்கள் பொன்.ராதா கிருஷ்ணன். எல்.கணேசன், பேராசிரியர் ஸ்ரீநிவாசன் மற்றும் சி.பி.ராதா கிருஷ்ணன் உட்பட அனைவரும் பார்வையாளர்கள் முன் வரிசையில் அமர்ந்தனர்.

இதனை தொடர்ந்து நிகழ்ச்சி நடக்கும் அரங்கிற்க்கு நடிகை குஷ்பூ வந்ததும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், மேடையில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் தான் இருக்கை உள்ளது, அதனால் பார்வையாளர் வரிசையில் அமர சொல்வதற்கு தயங்கிய நிலையில், பாஜக முக்கிய தலைவர்கள் பார்வையாளர் முன் வரிசையில் அமர்ந்திருப்பதை பார்த்து, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் பெருந்தன்மையுடன் நான் பார்வையாளர் வரிசையில் அமைர்ந்து நிகழ்ச்சியை பார்க்கிறேன் என தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து பாஜக முக்கிய தலைவர்கள் அமர்ந்திருந்த முன் வரிசையில் அமர்ந்து பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா பேசிய உரையை குஷ்பூ பார்வையிட்டார், இந்நிலையில் இந்த நிகழ்ச்சி கட்சி சார்ந்த நிகழ்ச்சி என்பதால் ஆட்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை, ஊடகங்கங்களுக்கு அழைப்பு விடுக்காத பட்சத்தில் அவர்களாக செய்தி சேகரிக்க அரங்கிற்குள் வந்ததை பார்த்த பாஜகவின் முக்கிய தலைவர் ஒருவர் மைக்கில் ஊடகங்களுக்கு அனுமதி கிடையாது என்றும், அதனால் வெளியே போக அறிவுறுத்தினார், ஆனால் அவர்கள் வெளியேறாமல் தொடர்ந்து அங்கேயே இருந்ததால், கட்சி முக்கிய நிர்வாகி ஒருவரை அழைத்து ஊடகத்தை சேர்ந்தவர்களை வெளியேற்ற உத்தரவிட்டு அதன் பின் ஊடகத்தை சேர்ந்த அனைவரும் வெளியேற்றிய பின் நிகழ்ச்சி தொடங்கியது குறிப்பிடத்தக்கது.மேலும் இது போன்ற செய்திகளை உங்கள் வாட்ஸாப் செயலில் பெற 8925154074 என்ற எண்ணிற்கு “ACT NEWS” என்று மெசேஜ் செய்யவும் .