பொய் செய்தியை பரப்பி சுய இன்பம் அடையும் காங்கிரஸ் எம்பி.! எதுக்கு சார் உங்களுக்கு இந்த மானங்கெட்ட பொழப்பு.!

0
Follow on Google News

விருதுநகர் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் அவ்வப்போது பாஜகவுக்கு எதிராக பொய்யான செய்திகளை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்தி சர்ச்சையில் சிக்குவது வழக்கம், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்ததால், திமுக மீது சவாரி செய்து விருதுநகர் தொகுதியில் வெற்றி பெற்றவர் மாணிக்கம் தாகூர், தேர்தல் முடிவுக்கு பின்பு தொகுதி பக்கமே பார்க்க முடியவில்லை என்கிற குற்றசாட்டு அந்த தொகுதி மக்களிடம் உள்ளது.

கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட போது, விருதுநகர் தொகுதி பட்டாசு தொழிலார்கள் உட்பட அனைவரும் பெரும் சிரமத்தில் இருந்த போது, தொகுதி மக்களை கண்டு கொள்ளாத மாணிக்கம் தாகூர், பின்பு கடும் சிரமத்தில் இருந்த பட்டாசு தொழிலார் குடும்பத்துக்கு விருதுநகர் பாஜக சார்பில் உதவி செய்யப்பட்ட செய்தி வெளியானதும், அந்த தொகுதி எம்பி மாணிக்கம் தாகூர் எங்கே என கேள்வி எழுந்தது, மேலும் அந்த தொகுதியை சேர்ந்த மக்கள், எங்கள் தொகுதி எம்பி மாணிக்கம் தாகூரை காணவில்லை என்று சமூக வளைத்தளத்தில் பிரச்சாரம் செய்த பின்பு தொகுதிக்கு சென்று குறிப்பிட்ட சிலருக்கு நிவாரணம் வழங்கி விளம்பரம் செய்து கொண்டார் மாணிக்கம் தாகூர்.

இந்நிலையில் தற்போது தெலுங்கானா மாநில காங்கிரஸ் கட்சிக்கு பொறுப்பாளராக மாணிக்கம் தாகூர் நியமிக்கப்பட்ட பின்பு தொகுதி பக்கமே காணோம் என புலம்பும் விருதுநகர் தொகுதி மக்கள், எங்க தொகுதிக்கு எம்பியாக வெற்றி பெற்று என்னத்த செஞ்சு கிழித்து விட்டார் என்று தெரியவில்லை, இந்த லட்சணத்தில் தெலுங்கானா மாநிலத்துக்கு சென்று கிழிக்க போகிறாரா.? என கடும் கொந்தளிப்பில் உள்ளனர் விருதுநகர் தொகுதி மக்கள்.

இந்நிலையில் நேற்று பாஜக சார்பில் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா பங்குபெற்ற மிக பிரமாண்ட பொதுக்கூட்டம் மதுரையில் நடைபெற்றது, மதுரை கருப்பாயூரணி அருகே நடந்த இந்த பொது கூட்டத்தில் சுமார் 15 ஆயிரம் வரை மக்கள் கலந்து கொண்டனர், மொத்தம் 12 ஆயிரம் இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில், அணைத்து இருக்கைகளும் நிரம்பி, மேலும் சுமார் 5 ஆயிரம் வரை மக்கள் நின்று கொண்டு பொது கூட்ட நிகழ்வை பார்த்தனர்.

இந்நிலையில் பொது கூட்டம் முடித்ததும் பொது கூட்டம் நடத்த இடத்தில் காலி இருக்கைகளை புகைப்படம் எடுத்து, பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா பங்கேற்ற மதுரை பொதுக்கூட்டம் என தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர், இதற்கு வலைதளவாசிகள், பொதுக்கூட்டம் நடத்த போது இருக்கைகள் நிரம்பி இருந்த புகைப்படத்தை பதிவு செய்து, எதுக்கு சார் உங்களுக்கு இந்த மானங்கெட்ட பொழப்பு என்றும், இது மாதிரி பொய்யான செய்திகளை பதிவு செய்து நீங்களே சுய இன்பம் அடைந்து கொள்ளுங்கள் என வலைதள வாசிகள் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூரை ரவுண்டு கட்டி வெளுத்து வருவது குறிப்படத்தக்கது.மேலும் இது போன்ற செய்திகளை உங்கள் வாட்ஸாப் செயலில் பெற 8925154074 என்ற எண்ணிற்கு “ACT NEWS” என்று மெசேஜ் செய்யவும் .