உடையும் திமுக-காங்கிரஸ் கூட்டணி.! உறுதியாகும் அதிமுக-பாஜக கூட்டணி.! மதுரையில் எடப்பாடி- ஜெ.பி.நட்டா நாளை சந்திப்பு.!

0
Follow on Google News

காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி குறுகிய நாட்களில் இரண்டுமுறை தமிழகம் வந்த போது திமுக சார்பில் யாரும் அவரை வரவேற்க கூட இல்லை, இந்த சுழலில் மதுரை வந்துள்ள பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டாவை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது, புதுசேரியில் திமுக-காங்கிரஸ் கூட்டணி உடைந்து தனித்து போட்டியிட திமுக தயராக இருந்து வரும் நிலையில், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி மூன்றாவது அணி அமைக்கும் வேலையில் இறங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் கடந்த 23-1-2021 அன்று நமது தினசேவல் இணையதளத்தில், இரண்டு நாள் பயணமாக மதுரை வருகிறார் ஜே.பி.நட்டா.! தமிழக முதல்வர் நேரில் சந்திப்பாரா.?கூட்டணி உறுதி செய்யப்படுமா.? என்ற தலைப்பில் அதிமுக-பாஜக கூட்டணியை உறுதி செய்யும் விதத்தில் ஜெ.பி.நட்டா- எடப்பாடி பழனிசாமி சந்திப்பு நடைபெறும் என்று செய்திகள் வெளியிட்டிருந்தோம், அந்த செய்தியை உறுதி படுத்தும் விதத்தில், நாளை ஜெ.பி.நட்டா- எடப்பாடி பழனிசாமி சந்திப்பு நடக்க இருக்கிறது.

சமீபத்தில் டெல்லி சென்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த முதல்வர் பழனிசாமி வரும் சட்டசபை தேர்தலுக்கான அதிமுக-பாஜக கூட்டணி பற்றி பேசி சுமுக முடிவை பெற்றுள்ளார், இதனை தொடர்ந்து இன்னும் சில தினங்களில் பாஜக தேசிய தலைவர் தமிழகம் வருகிறார், அவரை சந்தித்து கூட்டணியை உறுதி செய்யுங்கள் என அமித்ஷா தெரிவித்ததாக கூறப்பட்டது, இதனை தொடர்ந்து நேற்று மதுரை வந்த பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா இரண்டு நாள் பயணமாக பல்வேறு நிகழ்ச்சியில் பங்குபெற இருக்கிறார்.

இதனை தொடர்ந்து மதுரை திருமங்கலம் அருகே மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கோயில் திறப்பு விழாவுக்கு இன்று (30-12-2021) வருகை தரும் முதல்வர் பழனிசாமி நாளை (31-1-2021) மதுரையில் வேலம்மாள் மருத்துவமனை வளாகத்தில் உள்ள கெஸ்ட் ஹவுசில் தங்கியுள்ள ஜெ.பி.நட்டாவை சந்தித்து அதிமுக-பாஜக கூட்டணியை உறுதி செய்கிறார், தொகுதி எண்ணிக்கை குறித்து டெல்லியில் அமித்ஷா சந்திப்பின் போதே எடப்பாடி பழனிசாமி உறுதி செய்துவிட்டு தான் சென்னை வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று மதுரை வந்த ஜெ.பி. நட்ட இரவு தான் தங்கியிருந்த கெஸ்ட் ஹவுசில் தமிழக பாஜக முக்கிய தலைவர்களை சந்தித்து எந்தத்த தொகுதியில் பாஜக போட்டியிடவிரும்புகிறது என்பதை இறுதி செய்து அதற்கான பட்டியலையும் உறுதி செய்துள்ளார், எடப்பாடி பழனிசாமி சந்திப்பின் போது எந்த பட்டியலை அவரிடம் ஜெ.பி.நட்டா வழங்குவார் என்றும், இந்த சந்திப்புக்கு பின் கூட்டணி குறித்த சர்ச்சைக்கு முற்று புள்ளி வைத்துவிட்டு அதிமுக- பாஜக இரண்டு கட்சிகளுக்கும் இணைந்து தேர்தல் பணியில் கவனம் செலுத்துவார்கள் என எதிர்பார்க்கபடுகிறது. மேலும் இது போன்ற செய்திகளை உங்கள் வாட்ஸாப் செயலில் பெற 8925154074 என்ற எண்ணிற்கு “ACT NEWS” என்று மெசேஜ் செய்யவும் .