ரங்கராஜ் பாண்டே – பாஜக இடையே காரசார விவாதம்.! மாணவி மரணத்தை வைத்து அண்ணாமலை அரசியல் செய்கிறாரா.?

0
Follow on Google News

லாவண்யா மரணம் குறித்து சாணக்யா தொலைக்கட்சியில் நடந்த நேர்காணல் ஒன்றில் நெறியாளர் ரங்கராஜ் பாண்டே மற்றும் பாஜக மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் இராம ஸ்ரீநிவாசன் இடையே கடும் வாக்குவாதம் நடைபெற்றது. லாவண்யா மரணத்தை காரணம் காட்டி மதமாற்றம் தடைச்சட்டம் வேண்டும் என பாஜக வலியுறுத்துவது ஒரு சந்தர்ப்பவாதமாக பார்க்கப்படுகிறது இல்லையா.? ரங்கராஜ் பாண்டே கேள்வி எழுப்பினார்.

இதற்கு பேராசிரியர், வேறு எதை வைத்து கேள்வி எழுப்ப முடியும், அனிதாவின் மரணத்தை வைத்து தானே, நீட் தேர்வு வேண்டாம் என்று திமுக முன்னெடுத்தது, அப்படியானால் அது நியாயமா.? அனிதா மரணத்தில் அப்போது இருந்த ஆளும் கட்சி அதிமுக அமைச்சர்கள் யாரும் முந்திரிக்கொட்டை முந்திக்கொண்டு எந்த ஒரு அறிக்கையும் வெளியிடவில்லை. ஆனால் தற்போது கல்வி துறை அமைச்சராக இருக்கும் அன்பில் மகேஷ், இதில் எந்தவிதமான மதமாற்ற பின்புலமும் இல்லை என்று அவர் எதற்காக அறிவிக்க வேண்டும்.

வீடியோ ஆதாரங்கள் இருக்கின்றது அதை நீதிமன்றம் நிரூபிக்கட்டும், புலனாய்வு செய்ய வேண்டிய காவல்துறை அதிகாரி எதற்காக இது குறித்து கருத்து தெரிவிக்க வேண்டும் என பேராசிரியர் பேச அதற்கு பாண்டே, பாஜக தலைவர் அண்ணாமலை ஒரு கருத்து சொல்ல உரிமை இருக்கும் பொழுது, அமைச்சர் அன்பில் மகேஷ் கருத்தே சொல்லக் கூடாதா.? என கேள்வி எழுப்பினர்

இதற்கு பேராசிரியர், கல்வித்துறை அமைச்சர் அவர் சார்ந்த துறையில் ஒரு பிரச்சனை என்றால் கமிட்டி அமைத்து விசாரணை நடத்தி கமிட்டி சொல்லவேண்டிய பதிலை முன்கூட்டியே இவர் எப்படி சொல்லலாம். தற்போது சிபிஐ மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் சுதந்திரமாக செயல்படக்கூடிய ஒரு அமைப்பு, உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ளது என்பதால் , அமித்ஷா இது குறித்து, லாவண்யா வழக்கு சிபிஐ விசாரணைக்கு வந்துள்ளது, அந்த மாணவி மதமாற்ற பிரச்சனையால் தான் தற்கொலை செய்து கொண்டார் என்று பேசலாமா.? அப்படிப் பேசினால் திமுகவினர் ஏற்றுக்கொள்வார்களா.?

அன்பில் மகேஷ் அரசியல்வாதியாக பேசுகின்றார் என்று நீங்கள் தெரிவித்தால், அப்படியானால் எங்கள் தலைவர் அண்ணாமலை அவர்களும் அரசியல்வாதியாக பேசுகிறார் என்று ஏற்றுக் கொள்ளுங்கள். அண்ணாமலை மட்டும் ஐபிஎஸ் அதிகாரியாக பேச வேண்டும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பெறுப்புடன் பேச மாட்டாரா.? எங்களுடைய வாதத்தை பாண்டே ஏற்றுக் கொள்கிறாரா .?இல்லையா.? என்பது பிரச்சினை அல்ல,

நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது இல்லைய.? நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளதால் தான் இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது. சிபிஐ வழக்கு முழுமையான விசாரணைக்கு பின்பு லாவண்யா மரணம் குறித்த பின்னணி வெளியே வரும், அதன் பிறகுதான் இது பேசுபொருளாக மாறும் என பேராசிரியர் தெரிவித்தார்.