யோக்கியன் மாதிரி படம் எடுக்கும் சங்கரின் நிஜ வாழ்க்கையின் அயோக்கிய தனம் பற்றி உங்களுக்கு தெரியுமா?

0
Follow on Google News

தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குனர் என பெயர் பெற்றவர் இயக்குனர் சங்கர், சமூகம் மற்றும் தேசன் நலன் சார்ந்து படங்களை இயக்க கூடியவர் சங்கர்.இவர் இயக்கத்தில் வெளியான ஜெட்டில் மேன் திரைப்படம் ஏழை மாணவர்களுக்கான கல்வி சார்ந்த படமாக இருந்தது, அதே போன்றும் லஞ்சம் நாட்டின் ஒரு புற்று நோய் என லஞ்சம் வாங்கும் அதிகாரிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட படம் இந்தியன், ஒரு மாநிலத்துக்கு எப்படி பட்ட முதல்வர் இருக்க வேண்டும் என்பதற்காக முதல்வன்.

இதே போன்று அந்நியன் மற்றும் சிவாஜி போன்ற சங்கர் இயக்கிய படங்கள் பெரும்பாலும் தேச நலன் சார்ந்தும் சமூக அக்கறையுடன் எடுக்கப்பட்ட படமாக அமைந்தது. ஊழல், லஞ்சம் என ஊழல் செய்பவர்களை, லஞ்சம் வாங்குபவர்களை கொலை செய்ய வேண்டும் என தனது கோபத்தை திரைப்படம் மூலம் வெளிப்படுத்தி இருப்பார் இயக்குனர் சங்கர். ஆனால் அவர் நிஜ வாழ்க்கையில் அவரின் உண்மை முகம் என்ன என்பது பலருக்கும் தெரியாது.

இயக்குனர் சங்கர் இயக்கத்தில் வெளியான படங்கள் மிக பிரமாண்டம் என பேசப்பட்டாலும், அவருடைய படத்தில் இடம் பெரும் பாடல் காட்சிகள் மற்றும் சண்டை காட்சிகளுக்கு மட்டும் தான் அதிக செலவு செய்து பிரமாண்டமாக காட்சிகள் வடிவமைக்கப்படும், மற்ற படி படத்தின் காட்சிகள் மற்ற படங்கள் போன்று சராசரியாக தான் இருக்கும், ஆனால் சங்கர் படத்தில் பாடல் மற்றும் சண்டை காட்சிகள் ஏன் அதிக செலவு செய்து எடுக்கப்படுகிறது என்கிற பின்னனி வெளியாகி உள்ளது.

சங்கர் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் எந்திரன் 2.0 இந்த படம் தோல்வியை சந்தித்து படத்தை தயாரித்த லைக்கா நிறுவனத்துக்கு மிக பெரிய நஷ்டம் ஏற்பட்டது. மேலும் தற்போது லைக்கா நிறுவனம் தயாரிப்பில் இந்தியன் 2 படத்தை இயக்கிவருகிறார் சங்கர். இந்நிலையில் லைக்கா நிறுவனத்துக்கு இயக்குனர் சங்கருக்கு இடையே பிரச்சனை உருவாகியுள்ளதாக கூறப்படும் நிலையில் சில திலலங்கடி வேலையை சங்கர் பார்த்துள்ளது தெரியவந்துள்ளது.

அதாவது படத்துக்காக பலகோடி செலவில் போடப்படும் பிரமாண்ட செட்களுக்கு தயாரிப்பு நிறுவனத்துக்கு தெரியாமல் கமிஷன் வாங்குவது, அதே போன்று சங்கர் படத்தில் இடம் பெரும் பாடல் காட்சிகளில் பொதுவாக பின்னால் ஆட கூடியவர்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பார்கள், இதற்கு காரணம் ஜுனியர் ஆர்டிஸ் சம்பளத்தில் குறிப்பிட்ட சதவிகிதம் கமிஷன் வாங்கி வந்துள்ளார் சங்கர் என கூறப்படுகிறது. இந்த விவகாரம் தயாரிப்பு நிறுவனத்துக்கு தெரியவந்துள்ளது.

இதனை தொடர்ந்து குறைந்த செலவில் எடுக்க வேண்டிய காட்சிகளை, கமிஷனுக்கு ஆசை பட்டு அதிக செலவு செய்து படம் எடுத்து, தன்னை நம்பி படம் எடுத்த தயாரிப்பு நிறுவனத்தை நஷ்டம் அடைய செய்து நம்பிக்கை துரோகம் செய்து விட்டார் இயக்குனர் சங்கர், யோக்கியன் மாதிரி லஞ்சம், ஊழலுக்கு எதிராக படம் எடுப்பது ஆனால் நிஜவாழ்க்கையில் அயோக்கிய தனம் செய்வது, இதெல்லாம் ஒரு பொழப்பு என சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வரும் நிலையில். இந்நிலையில் இனி சங்கரை வைத்து படம் தயாரிப்பதில் பல தயாரிப்பு நிறுவனம் முன் வர மாட்டார்கள் என கூறப்படுவது குறிப்பிட்டத்தக்கது.

வேதனையில் கண்ணீர் விட்டு அழுத நடிகர் ரஜினிகாந்த்..! யாருக்கும் இந்த நிலைமை வரக்கூடாது…. நீ யாருடனும் கும்மாளம் போடு….. ப்ளீஸ் என்னை ஏற்று கொள்..கதறும் ஐஸ்வர்யா..! தனுஷ் சொன்ன பதில் என்ன தெரியுமா.?