ஜெயலலிதா பார்முலா தான் சரி… வியூகத்தை மாற்றிய அமித்ஷா… 2026 பாஜக வேட்பாளர் பட்டியல் ரெடி…

0
Follow on Google News

2026 சட்டசபை தேர்தலுக்கு இன்னும் பத்து மாதங்களே இருக்கும் நிலையில், தமிழகத்தில் மட்டுமில்லை தேசிய அளவில் பாஜகவுக்கு மிக பெரிய தலைவலியாக இருக்க கூடிய திமுகவை வீழ்த்தியே ஆக வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் அமித்ஷா, தன்னுடைய முழு கவனத்தையும் தமிழகம் பக்கம் திருப்பியுள்ளார். அந்த வகையில் தமிழகத்தில் திமுகவை வீழ்த்தி, தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறுவதற்காக வியூகங்கள் வகுத்து வருகிறார் அமித்ஷா.

இந்நிலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் கருணாநிதி இருவரும் மறைவுக்கு பின்பு, மக்கள் பாஜகவை நோக்கி திரும்பினாலும், மாவட்ட அரசியலில் நடக்கும் சில குளறுபடியால் பாஜகவை ஆதரிக்கும் மக்களின் வாக்குகளை முழுமையாக பாஜக அறுவடை செய்ய முடியாமல் கடந்த காலங்களில் தத்தளித்தது பாஜக, ஆனால் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் இருந்து அந்த நிலை மாறி தமிழகத்தில் பாஜவுக்கான வாக்கு வங்கி அதிகரிக்க தொடங்கியிருக்கிறது.

அந்த வகையில் தற்பொழுது மேலும் பாஜக வாக்கு வங்கி அதிகரிக்க , அல்லது பழைய நிலைக்கு பாஜக செல்வது எல்லாம் வரும் 2026 சட்டசபை தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட களம் இறங்க இருக்கும் வேட்பாளரை பொறுத்து தான் உள்ளது. கடந்த 2021 சட்டசபை தேர்தலில் 20 தொகுதியில் பாஜக போட்டியிட்டு 4 தொகுதியில் வெற்றி பெற்றது.

அந்த 4 தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர்கள் அனைவருமே அந்தந்த தொகுதியில் பெரும்பான்மையாக இருக்க கூடிய சமூகத்தை சேர்ந்தவர்களை பாஜக அந்த தொகுதியில் வேட்பாளராக தேர்வு செய்தது தான், பாஜக கடந்த 2021 சட்டசபை தேர்தலில் 4 சட்டமன்ற உறுப்பினர்களை பெறுவதற்கு முக்கிய காரணம். அதன் படி தற்பொழுது தான் தமிழக அரசியல் கள நிலவரம் என்ன என்பது பாஜக டெல்லி தலைமைக்கு முழுமையாக புரிந்து இருக்கிறது என கூறப்படுகிறது.

கடந்த காலங்களில் டெல்லி பாஜக தலைமைக்கு தமிழகத்தில் இருந்து ஒரு சிலர் கொடுத்த தவறான ஆலோசனையின் காரணமாக வேட்பாளர் தேர்வு, கட்சியில் அங்கீகாரமிக்க பதவிகளை வழங்குவது என சில விசயங்களில் கோட்டை விட்ட பாஜக தற்பொழுது ஜெயலலிதா பார்முலாவை கையில் எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அந்த வகையில் அந்தந்த மாவட்டத்தில் பெரும்பானமையாக இருக்க கூடிய சமூகத்தை சேர்ந்தவர்கள் அந்த மாவட்டத்தில் ஆதிக்கம் செலுத்தும் வகையில் முக்கிய பொறுப்புகள் கொடுப்பது, குறிப்பாக வேட்பாளர் தேர்வில் அந்தந்த தொகுதியில் பெரும்பான்மையாக இருக்க கூடிய சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு வரும் 2021 சட்டசபை தேர்தலில் போட்டியிட வாய்ப்புகளை வழங்குவது என்பதில் டெல்லி பாஜக தலைமை உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது.

இதில் மொழி வழி சிறுபான்மையாக இருக்க கூடியவர்களுக்கு, மாநில எல்லையை ஒட்டிய தேனி, கிருஷ்ணகிரி, ஓசூர், மற்றும் சென்னை மற்றும் அவர்களை அதிகம் உள்ள பகுதிகளில் தேர்தலில் போட்டியிட வாய்ப்புகளை கொடுக்க பாஜக தலைமை முடிவு செய்துள்ளதாகவும், மற்றபடி வடமாவட்டம், கொங்கு மண்டலம், தென் மாவட்டம், டெல்டா பகுதிகளில் அந்தந்த தொகுதிகளில் இருக்கும் பெருபான்மை சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு சீட் வழங்குவதில் உறுதியா இருக்கிறது பாஜக தலைமை.

மேலும் ஒரு பெரும்பான்மை சமூகம் இருக்கும் தொகுதியில் 1 சதவிகிதம் கூட இல்லாத ஒரு சமூகத்தை சேர்ந்தவருக்கு சீட் கொடுக்கும் போது, அந்த தொகுதியில் இருக்கும் பெரும்பான்மை சமூகத்தினர் தங்கள் சமூகத்தை குறிப்பிட்ட கட்சிகள் புறக்கணிக்கிறது, எங்கள் சமூகத்தை சேர்ந்தவர்களை போஸ்டர் ஒட்டவும், வாழ்க கோஷம் போட மட்டும் பயன்படுத்தி கொண்டு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்காமல் புறக்கணிக்கபடுகிறோம் என்கிற குற்றசாட்டுகள் இனி வர கூடாது என்பதில் பாஜக டெல்லி தலைமை உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது.