வரும் 2026ம் ஆண்டில் நடைபெற உள்ள தமிழக சட்டசபை தேர்தலில் முதல்வரின் நாற்காலியை பிடித்தே தீருவது என்ற லட்சியத்தில் நடிகர் விஜய் இருந்து வருகிறார். அதற்காக தமிழ்நாடு முழுவதும் மாவட்டம் வாரியாக பூத் கமிட்டி ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. சமீபத்தில் கோவையில் நடந்த பூத் கமிட்டி கூட்டத்திலும் நடிகர் விஜய் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
அரசியல் களத்துக்கு வந்துள்ள நடிகர் விஜய் குறித்தும் அவரது சொந்த வாழ்க்கை குறித்து பல விதமான கடும் விமர்சனங்கள் இருந்து வருகின்றன. குறிப்பாக விஜயின் மனைவி சங்கீதா மற்றும் அவரது பிள்ளைகள் விஜயுடன் இல்லை என்று கூறப்படுகிறது. விஜய் சென்னை நீலாங்கரையில் உள்ள தனது பங்களாவில் தனிமையில் தான் வசித்து வருகிறார் என்றும் கூறப்படுகிறது.

சில ஆண்டுகளுக்கு முன்பே விஜயை விட்டு பிரிந்துச் சென்ற அவரது மனைவி சங்கீதா லண்டனில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். அவருடன் தான் விஜயின் மகளும் இருந்து வருகிறார் என்கின்றனர். நடிகர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இப்போது தெலுங்கு நடிகர் சந்தீப் கிஷன் நடிக்கும் ஒரு படத்தை டைரக்ட் செய்து வருகிறார். அவரும் தந்தை விஜயுடன் இருப்பதாக தெரியவில்லை.
இப்படி மனைவி மகன் மகள் என யாரும் தன்னுடன் இல்லாத நிலையில், தன் பெற்றோரையும் விஜய் தன்னுடன் வைத்துக்கொள்ளவில்லை. இதற்கிடையே கடந்த பல ஆண்டுகளாக நடிகை திரிஷாவுடன் நடிகர் விஜய் நெருக்கமாக இருந்து வருகிறார் என்ற தகவல் தமிழ் சினிமா வட்டாரத்தில் இருந்து வருகிறது. அதனால் ஏற்பட்ட கோபத்தில் தான் விஜயை விட்டு பிரிந்து சங்கீதா லண்டனுக்கு புறப்பட்டு சென்று விட்டார் என்றும் கூறப்படுகிறது.
அதே போல் நடிகை திரிஷாவுடன் நடிக்க கூடாது என்று பலமுறை விஜய்க்கும் சங்கீதாவுக்கும் சண்டை ஏற்பட்டதாகவும், ஒருமுறை திரிஷா வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய போது ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள வைர நெக்லஸ் இருந்ததாகவும் அப்போது அதிகாரிகள் நடத்திய விசாரணையில், நடிகை திரிஷா அந்த வைரல் நெக்லஸ் நடிகர் விஜய் எனக்கு பரிசாக அளித்தது என்றும் கூறியிருந்ததாக மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சூழ்நிலையில் கடந்த டிசம்பரில் கோவாவில் நடந்த நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணத்துக்கு தனி விமானத்தில் நடிகர் விஜய் திரிஷா ஒன்றாக சென்று வந்த வீடியோவும் இணையத்தில் தீயாக பரவியது. இந்நிலையில் நடிகர் விஜய் தனது 51வது பிறந்த நாளை கொண்டாடினார். அப்போது அவரின் நண்பர் சஞ்சய் மற்றும் அவரது குடும்பம் திரிஷா ஆகியோருடன் அவர் பிறந்த நாளை கொண்டாடி இருக்கிறார்.
விஜய், திரிஷாவுடன் அமர்ந்து சோபாவில் திரிஷாவின் செல்ல நாய்குட்டியை கொஞ்சும் புகைப்படத்தை திரிஷாவே வெளியிட்டிருக்கிறார். நடிகர் விஜயின் வீட்டின் முன்பு அவரது ஏராளமான ரசிகர்கள் விஜய்க்கு நேரில் வாழ்த்து சொல்ல வந்திருக்கிறார்கள். ஆனால் விஜய் அவர்களை எல்லாம் சந்திக்கவில்லை. ஆனால் விஜய், திரிஷாவுடன் பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை சந்திக்க முடியாத விஜய், திரிஷாவுடன் மட்டும் நேரம் செலவழிக்கிறார் என பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

