கடந்த காலங்களில் மாறன் குடுமபத்துக்கு கருணாநிதி குடுமபத்துக்கு இடையில் நடந்த சண்டையில் மதுரை தினகரன் பத்திரிகை அலுவலகம் தீயிட்டு கொழுத்த பட்ட வரலாறு உண்டு. ஆனால் தற்பொழுது மாறன் குடுமப்த்திற்குள் வெடித்துள்ள மோதல் சந்தி சிரித்து வருகிறது. நான்கு முறை எம்பியா வெற்றி பெற்ற தயாநிதி மாறனுக்கு டெல்லியில் பாஜக – காங்கிரஸ் என அணைத்து தரப்பிலும் நெருங்கிய தொடர்பு உண்டு என்கிறது டெல்லி வட்டாரங்கள்.
இந்நிலையில் சன் டிவியின் 12 லட்சம் பங்குகளை ஒரேநாள் இரவில் முறைகேடாக தனது பெயருக்கு மாற்றி கருணாநிதி மற்றும் மாறன் குடும்பத்தாருக்கு நம்பிக்கை துரோகம் செய்துவிட்டதாக சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறன் என அவருக்கு எதிராக அவரது தம்பியும், திமுக எம்.பி.யுமான தயாநிதி மாறன் இரண்டாவது முறையாக வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியுள்ள சம்பவம் மிக பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தயாநிதி மாறன் அவருடைய அண்ணன் கலாநிதிக்கு அனுப்பிய நோட்டீஸில், கடந்த செப்.15 2003 வரை கலாநிதி மாறனுக்கு சன் டிவி நிறுவனத்தில் எந்தவொரு பங்கும் இல்லை. 2003-ல் தந்தை முரசொலி மாறன் இறந்த நிலையில், அந்த ஆண்டு செப்.15 ஒரே நாள் இரவில் சன் டிவி நிறுவனத்தின் 60 சதவீத பங்குகளை கலாநிதி மாறன் தனது பெயருக்கு மாற்றியுள்ளதாக தெரிவித்துள்ள தயாநிதி மாறன்.
மேலும் ரூ.3,000 வரையுள்ள ஒரு பங்கை ரூ.10 முகமதிப்பில் தனக்குத்தானே ஒதுக்கி மற்ற பங்குதாரர்களுக்கும் நம்பிக்கை துரோகத்தையும், நிதி மோசடியையும் செய்துள்ளார் கலாநிதி மாறன் என்றும், பின்னாளில் அந்த பங்கு மதிப்பு ரூ. 3,500 கோடியாக உயர்ந்துள்ள நிலையில், கலாநிதிமாறன் ரூ.1.20 கோடி மட்டுமே செலுத்தி, ரூ.3,498.80 கோடி மோசடி செய்துள்ளார்.
இந்த துரோகத்தால் 50 சதவீதமாக இருந்த குடும்ப உறுப்பினர்களின் பங்கு 20 சதவீதமாக குறைந்து விட்டது. அண்ணன் அனைத்தையும் பார்த்துக்கொள்வார் என்ற நம்பிக்கை வீண்போய் விட்டது என்றும், எனவே சன் தொடர்புடைய அனைத்து நிறுவனங்களிலும் கடந்த 2003 செப்.15-ம் தேதி நிலவரப்படி நிலைமையை மீண்டும் கட்டமைத்து தயாளு அம்மாள் மற்றும் மாறன் குடும்பத்தாரின் சட்டப்பூர்வ வாரிசுதாரர்களுக்கு சேர வேண்டிய பங்குகள், பணப்பலன்கள், சொத்துக்கள், வருமானத்தை திருப்பியளிக்க வேண்டும் என தெரிவித்துள்ள தயாநிதி மாறன்.
தவறும்பட்சத்தில் கலாநிதி மாறன் மற்றும் அவரது மனைவி உள்ளிட்டோர் மீ்து சிவில் குற்றவியல் ரீதியாக வழக்கு தொடரப்படும். அத்துடன் சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தின் கீழும், குற்றவியல் சட்டங்களின் கீழும் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க அமலாக்கத் துறை, ரிசர்வ் வங்கி, மும்பை பங்குச்சந்தை, தேசிய பங்குச்சந்தை, செபி, ஆர்ஓசி உள்ளிட்ட அமைப்புகளுக்கும் மத்திய அரசுக்கும் புகார் அளிக்கப்படும் தயாநிதி மாறன் தன்னுடைய நோட்டீஸில் தெரிவித்து இருக்கிறார்.
இந்நிலையில் கலாநிதி மாறனுக்கு அவருடைய தம்பி தயாநிதி மாறன் அனுப்பிய நோட்டீஸில் சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தின் கீழும், குற்றவியல் சட்டங்களின் கீழும் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க அமலாக்கத் துறை, ரிசர்வ் வங்கி, மும்பை பங்குச்சந்தை, தேசிய பங்குச்சந்தை, செபி, ஆர்ஓசி உள்ளிட்ட அமைப்புகளுக்கும் மத்திய அரசுக்கும் புகார் அளிக்கப்படும் என தெரிவித்துள்ளதின் பின்னனியில் பாஜக ஆதரவு தயாநிதி மாறனுக்கு உள்ளது என்று விமர்சனம் எழுந்துள்ளது.
அந்த வகையில் பாஜக ஆதரவில் தான் தன்னுடைய அண்ணனை அமலாக்க துறை, மத்திய அரசு பெயர்களை குறிப்பிட்டு எச்சரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படும் நிலையில், தற்பொழுது தயாநிதி மாறன் பகிரங்கமாக தன்னுடை அண்ணன் மீது மிக பெரிய மோசடி குற்றசாட்டுகளை வைத்துள்ள நிலையில், இந்த விவகாரத்தில் அமலாக்க துறை உள்ளே வருவதற்கு அதிக வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.

