அமலாக்கதுறைக்கு கூடுதல் அதிகாரம்… மத்திய அரசு அதிரடி… உதயநிதிக்கு மிக பெரிய சிக்கல்…

0
Follow on Google News

டாஸ்மாக் மெகா ஊழலில் திமுகவைச் சேர்ந்த சில முக்கிய அமைச்சர்கள் அல்லது திமுக வில் பொறுப்பில் இருக்கக்கூடிய யாரோ ஒரு நபர் சிக்குவார்கள், அவர்களை தொடர்ந்து அடுத்து அடுத்த நடவடிக்கைகளில் முதல் குடும்பத்தை நோக்கி இந்த அமலாக்கத்துறை விசாரணை செல்லும் என்று எதிர்பார்த்த நிலையில், யாருமே எதிர்பாராத திருப்பமாக, ஆகாஷ் பாஸ்கர், ரத்தீஷ், விக்ரம் ஜூஜூ இவர்கள் மூவர்கள் அமலாக்கத்துறை விசாரணை வளையத்துக்குள் பிடிபட்டனர்.

இதில் விக்ரம் ஜுஜூ 250 கோடிக்கு வாட்ச் கலெக்ஷனும், ரத்தீஷ் சுமார் 350 கோடி மதிப்பில் ஈசிஆரில் உல்லாச வீடும் கட்டி வந்ததும், ஆகாஷ் பாஸ்கர் சுமார் 1000 கோடி ரூபாய் சினிமாவில் முதலீடு செய்ய இருந்ததும் வெளியானது. அந்த வகையில் இவர்கள் மூவருக்கும் இவ்வளவு கோடி பணம் எங்கிருந்து வந்தது என்கின்ற பரபரப்பு நிலவி, அது அதன் பின்பு தான் இவர்கள் குறித்த திடுக்கிடும் பின்னணிகள் ஒவ்வொன்றாக வெளியானது.

இந்த நிலையில் டாஸ்மாக் உயர் அதிகாரி விசாகன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டு விட்டது என்கின்ற தகவல் ரத்தீசுக்கு தெரிந்த உடனே, அவர் வீட்டை கூட பூட்டாமல் அவசர அவசரமாக தப்பி வெளிநாடு தப்பி சென்று விட்டார் . ரத்தீஷை அமலாக்கத்துறை வலையில் சிக்க விடாமல் தற்காலிகமாக இந்தியாவிலிருந்து காப்பாற்றி வெளிநாட்டிற்கு தப்ப வைத்தது பிரபல கட்டுமான தொழிலதிபர் தான் என்று கூறப்படுகிறது.

பொதுவாகவே பல கட்டுமான தொழில் நிறுவனங்கள் மீது அமலாக்கத்துறை பலமுறை சோதனை நடத்தினாலும் இந்த ஒரு குறிப்பிட்ட நிறுவனம் மீது இதுவரை சோதனை நடைபெறவில்லை என்றும் இவர்களுக்கு மத்திய அரசில் நெருங்கிய தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த கட்டுமான தொழிலதிபர் தான் ஆகாஷ் பாஸ்கரை வெளிநாட்டில் மிக பாதுகாப்பாக வைத்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் ஆகாஷ் பாஸ்கர் மற்றும் விக்ரம் ஜூஜூ ஆகியோர் மீது நடத்தப்பட்ட சோதனை குறித்து நீதிமன்றம் எழுப்பிய கேள்விக்கு பதில் மனு தாக்கல் செய்ய இருக்கிறது அமலாக்கத்துறை. இந்த பரபரப்புக்கு மத்தியில் உதயநிதி ஸ்டாலினை குறிவைத்து அமலாக்கத்துறை காய் நகற்றி வரும் நிலையில், உதயநிதி ஸ்டாலினை காப்பாற்ற சமீபத்தில் முதல்வர் மு க ஸ்டாலின் டெல்லி சென்றார் என்று பரவலாக பேசப்பட்டது.

ஆனால் மத்திய அரசு சட்டம் கடமையை செய்யும் என்று கைவிரித்து விட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த விவகாரத்தில் சிபிஐ உள்ளே வந்தால் அது மேலும் திமுக அரசாங்கத்திற்கு தான் சிக்கலை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. ஆனால் சிபிஐ உள்ளே வருவதற்கான வாய்ப்பு இல்லை, அதே நேரத்தில் இனி அடுத்தடுத்து வரும் காலங்களில் அமலாக்கத்துறைக்கு கூடுதல் அதிகாரத்தை மத்திய பாஜக அரசு வழங்க இருப்பதாகவும், அதற்கான சட்ட மாற்றங்களை கொண்டு வர இருப்பதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

அப்படி அமலாக்கத்துறைக்கு கூடுதல் அதிகாரம் கொடுக்கும் வகையில் சட்ட மாற்றங்கள் கொண்டு வந்தால் டெல்லியில் எப்படி அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் தெலுங்கானாவில் சந்திரசேகர் மகள் கவிதா ஆகியோர் கைது செய்யப்பட்டார்களோ, அதே போன்ற ஒரு நிலை உதயநிதி ஸ்டாலினுக்கும் இந்த டாஸ்மாக் ஊழல் மூலம் அரங்கேறும் என்கிறது டெல்லி வட்டாரங்கள்.