சமீபத்தில் கங்கைகொண்ட சோழபுரம் அந்த பிரதமர் மோடி மோடியை தனியாக சந்திக்க எடப்பாடி பழனிச்சாமி நேரம் கேட்டும் ஒதுக்கவில்லை, விமான நிலையத்தில் பலரோடு பழராக, கூட்டத்தோடு கூட்டமாக எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் மோடியை சந்தித்து வரவேற்பு கொடுத்தார், இந்த நிலையில் தமிழக வந்த பிரதமர் மோடி, தனி மெஜாரிட்டியுடன் அதிமுக ஆட்சி அமைக்கும், முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்பார், அதற்கு பாஜக உறுதுணையாக இருக்கும் என்றெல்லாம் பேசுவார் என்று எடப்பாடி பழனிசாமி எதிர்பார்த்த நிலையில்,
பிரதமர் மோடி அது பற்றி எதுவுமே பேசாதது எடப்பாடிக்கு ஏமாற்றமே என்று கூறப்படுகிறது. இதற்கு காரணம் பிரதமர் மோடியும் அமித்ஷாவும் எடப்பாடி மீது கடும் அப்செட்டில் இருப்பதாக கூறப்படுகிறது, தமிழக முழுவதும் பரப்புரையில் ஈடுபட்டு வரும் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் பங்கு கொடுக்க நாங்க என்ன ஏமாளியா என்று பேசியது டெல்லியில் கடும் கோபத்தை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் தேர்தல் ஆணையத்தில் அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்தது செல்லாது என்கின்ற பிரச்சனை நிலுவையில் இருக்கும் நிலையில், வரும் 2026 சட்டசபை தேர்தலில் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டால், வேறு ஒரு சின்னத்திலும் தன்னுடைய தலைமையில் களம் இறங்குவதற்கு ஏதுவாக தன்னை முன்னிலைப்படுத்தவே தற்பொழுது தமிழ்நாடு முழுவதும் எடப்பாடி பழனிச்சாமி பரப்புரையை மேற்கொண்டு வருவதாக உளவுத்துறை மூலம் டெல்லி தலைமைக்கு ரிப்போர்ட் சென்று இருக்கிறது என கூறப்படுகிறது.
மேலும் அதிமுக பாஜக கூட்டணியை உறுதி செய்த மத்திய அமைச்சர் அமித்ஷா, திமுக கூட்டணியை உடைக்கும் வேலையை ஒரு பக்கம் செய்து கொண்டு இருந்தாலும், பாஜக அதிமுக கூட்டணியை வலுப்படுத்தும் வகையில் இருக்கின்ற கட்சியை தக்க வைக்கவும், மேலும் வெளியிலிருந்து பல கட்சிகளை உள்ளே கொண்டு வருவதற்கான திட்டமும் அமித்சாவால் வகுக்கப்பட்டது.
ஆனால் தற்பொழுது திமுக கூட்டணியில் எந்த ஒரு சலசலப்பும் பெரிதாக இல்லை, அதே நேரத்தில் அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிக திமுகவை பக்கம் சாய்ந்து கொண்டிருக்கிறது. மேலும் ஓ பன்னீர்செல்வம் இந்த கூட்டணியில் இருந்து வெளிவருவதாக வெளிப்படையாகவே தெரிவித்துவிட்டு முதல்வர் மு க ஸ்டாலினை சந்தித்திருக்கிறார்.
அந்த வகையில் எடப்பாடி பழனிச்சாமி இந்த பாஜக கூட்டணியை தன்னுடைய சுயலாபத்திற்காக பயன்படுத்தி ஓ பன்னீர்செல்வத்தை ஓரங்கட்டி விட்டார் என்கின்ற எடப்பாடி பழனிச்சாமி குறித்து பல உளவுத்துறை ரிப்போர்ட் டெல்லி தலைமைக்கு சென்று இருக்கிறது. அந்த வகையில் எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டது செல்லாது என்கின்ற வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று நீதிமன்றத்தில் எடப்பாடி தரப்பு தொடுத்த வழக்கு நிராகரிக்கப்பட்டு, இதை தேர்தல் ஆணையம் முடிவு செய்யும் என்று தெரிவித்துவிட்டது.
ஆனால் தேர்தல் ஆணையம் தற்பொழுது பீகார் தேர்தல் காரணமாக பிஸியாக இருப்பதால், இப்போதைக்கு உடனே அதிமுக தொடர்பான விசாரணையை எடுக்க முடியாது என்று கைவிரித்து விட்டது. அந்த வகையில் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஒரு பக்கம் செக் வைக்கும் வகையில் தேர்தல் ஆணையம் மூலம் பாஜக பின்நின்று பல வேலைகளை செய்து வருவதாக கூறப்படும் நிலையில், கூட்டணியில் இருந்து வெளியே சென்றவர்களை மீண்டும் உள்ளே கொண்டு வருவதற்கான வேலையும் அமித்ஷா செய்து வருவதாக கூறப்படுகிறது.

