எடப்பாடிக்கு பாஜக செக்… முக ஸ்டாலின் மாஸ்டர் பிளான்… ஓபிஎஸ் விலகல் பின்னணி இது தான்…

0
Follow on Google News

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்த முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்து, தமிழக முதல்வர் மு க ஸ்டாலினை நேரில் சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஓ பன்னீர்செல்வம் திமுக பக்கம் சாய்ந்து விட்டார் என்கின்ற விவாதமும் அனல் பறந்து வருகிறது.

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வத்தை படிப்படியாக கட்சியிலிருந்து ஓரம் கட்டி, முற்றிலும் அரசியலிலிருந்து துடைத்து எறிய வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. அந்த வகையில் அதிமுகவில் இருந்து ஓ பன்னீர்செல்வம் வெளியேற்றப்பட்டாலும் கூட, தேசிய ஜனநாயக கூட்டணியில் கூட அவர் இடம் பெற்று விடக் கூடாது, பிரதமரை சந்திக்க வாய்ப்பு வழங்கக் கூடாது என்கின்ற பன்னீர்செல்வதற்கான எதிரான அரசியலை எடப்பாடி பழனிச்சாமி மிகத் தீவிரமாக செய்து வருவதற்கு காரணம்,

ஓ பன்னீர்செல்வம் மீண்டும் மெர்ஜ் ஆகி வந்து விட்டால், தொண்டர்கள் மத்தியில் செல்வாக்கை பெற்று விடுவார் என்கின்ற ஒரு அச்சம் தான் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் தொண்டர் மீட்பு குழு என்கின்ற பெயரில் ஓ பன்னீர்செல்வம் தொடுக்கப்பட்ட வழக்கு தேர்தல் ஆணையம் முடிவு செய்யும் என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இருந்தாலும் நான்கு வாரத்திற்குள் தேர்தல் ஆணையம் முடிவு செய்யணும் என்று எடப்பாடி தரப்பில் தெரிவிக்கப்பட்டாலும் கூட, தேர்தல் நெருங்கும் நேரத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்கின்ற முடிவில் தேர்தல் ஆணையம் இருக்கிறது. அந்த வகையில் ஏற்கனவே பாஜகவிடும் எடப்பாடி பழனிச்சாமி நடந்து கொண்ட நடவடிக்கைகளை மனதில் வைத்து தான் தேர்தல் ஆணையம் மூலம் பாஜக எடப்பாடி பழனிச்சாமிக்கு செக் வைத்திருக்கிறது என்று கூறப்படுகிறது.

ஒருவேளை இறுதியில் தேர்தல் ஆணையம் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக ஒரு முடிவை எடுத்தால் அதிமுக ஓ பன்னீர்செல்வம் கைக்கு செல்வதற்கு வாய்ப்பு இருக்கு, ஆனால் எடப்பாடி பழனிச்சாமியை மிரட்டுவதற்காகவே தேர்தல் ஆணையம் மூலம் பாஜக செக் வைத்திருக்கிறது என்பதை புரிந்து கொண்ட ஓ பன்னீர்செல்வம், இதனால் தமக்கு எந்த ஒரு லாபமும் இல்லை என்று புரிந்து கொண்டு தான் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறியதாக கூறப்படுகிறது.

அந்த வகையில் அரசியலில் நிரந்தர நண்பரும் இல்லை நிரந்தர எதிரியும் இல்லை என்று முதல்வர் மு க ஸ்டாலினை ஓ பன்னீர்செல்வம் சந்தித்திருக்கிறார், அதே நேரத்தில் திமுகவில் முக்குலத்தோர் சமுதாயத்தைச் சார்ந்தவர்களுக்கு முக்கிய அங்கீகாரம் கொடுத்தாலும் கூட, இதற்கு முன்பு ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது முழுமையாக முக்குலத்தோர் வாக்குகளை பெற்றது போன்று திமுகவால் தற்பொழுது பெற முடியவில்லை.

அந்த வகையில் ஓபிஎஸ் வருகை திமுகவுக்கு லாபம் என்கின்ற கணக்கில் ஓபிஎஸ்ஐ திமுக கூட்டணிக்குள் கொண்டு வருவதற்கு முதல்வர் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. தமிழகத்தில் மிகப் பிரதான வாக்கு வங்கிகளாக இருக்கக்கூடிய கொங்கு வெள்ளாளர் கவுண்டர் வாக்குகள், முக்குலத்தோர் வாக்குகள், வன்னியர் வாக்குகள் இந்த மூன்று வாக்குகளில் எந்தெந்த கட்சிக்கு எவ்வளவு கடந்த நாடாளுமன்ற தேர்தலில் சென்றது என்கின்ற ரிப்போட்டை நன்கு அறிந்த மு க ஸ்டாலின், தென் மாவட்டத்தில் முக்குலத்தோர் வாக்குகளை முழுமையாக வரும் 2026 சட்டசபையில் தேர்தலில் அறுவடை செய்ய வேண்டும் என்பதற்காகவே ஓபிஎஸ் திமுக உடன் கைகோர்ப்பதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.