சூர்யா – ஜோதிகா இடையில் விரிசல்… அடுத்த விவாகரத்து ரெடியாகும் நட்சத்திர தம்பதி…

0
Follow on Google News

தமிழ் சினிமாவில் கடந்த சில ஆண்டுகளாக விவாகரத்து சீசன் நடந்துக்கொண்டு இருக்கிறது. தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், ரவிமோகன் ஆர்த்தி, ஜீவி பிரகாஷ்குமார் சைந்தவி, ஏஆர் ரகுமான் சாயிரா பானு என இந்த பட்டியலில் நட்சத்திர தம்பதி பெயர்கள் அதிகமாகி கொண்டே வருகின்றன.

இதில் ஒரு சில நட்சத்திர தம்பதிகள் குடும்ப வாழ்க்கையில் பிரிந்தாலும் சட்டப்படி விவாகரத்து பெறாமல், அவரவர் தனித்த வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர். அதனால் அவர்களின் பிரிவு வாழ்க்கை வெளிச்சத்துக்கு வரவில்லை. இந்நிலையில் அடுத்ததாக இந்த விவாகரத்து லிஸ்ட்டில் சூர்யா, ஜோதிகா பெயர்களும் இடம்பெற அதிக வாய்ப்புள்ளதாக அதிர்ச்சிகரமான ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

அந்த அளவுக்கு இருவருக்கும் முட்டல் மோதல் அதிகமாகி பெரிய அளவில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன. இந்தியில் இருந்து தமிழுக்கு வந்தவர் நடிகை ஜோதிகா. அழகு நடிப்பு திறமை, நடனம் போன்றவற்றால் ஜோதிகா தமிழில் நல்ல வரவேற்பை பெற்றார். முன்னணி ஹீரோக்களுடன் பல படங்களில் நடித்தார். ஆனால் ஜோதிகாவுக்கு ஆரம்பத்தில் இருந்தே தமிழை விட பாலிவுட்டில் நடித்து பெரிய அளவில் புகழ் பெற வேண்டும் என்பதே ஆசை.

இதற்கிடையே தமிழ் சினிமாவின் சீனியர் நடிகர் சிவக்குமார் மகன் சூர்யாவுடன் பல படங்களில் ஜோதிகா நடித்த போது, அவர்களுக்குள் காதல் ஏற்பட்டது. அவர்கள் காதல் திருமணத்துக்கு நடிகர் சிவக்குமார் சம்மதிக்கவில்லை. எனினும் தந்தை பாசத்தால் ஒரு கட்டத்தில் ஓகே சொல்லிவிட்டார். ஆனால் மருமகள் ஜோதிகாவிடம் திருமணத்துக்கு பிறகு நடிக்க கூடாது என்ற உத்தரவும் போட்டார். அப்போதைக்கு ஓகே சொன்ன ஜோதிகா, திருமணமான சில ஆண்டுகளில் மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்க ஆரம்பித்து விட்டார்.

ஆனால் தமிழ் சினிமாவில் முதலில் கிடைத்த ஆதரவும் வரவேற்பும் திருமணத்துக்கு பிறகு நடிக்க வந்த ஜோதிகாவுக்கு கிடைக்கவில்லை. மேலும் நடிகர் சிவக்குமாரும் அவ்வப்போது ஜோதிகா நடிக்க கூடாது என்று சூர்யாவிடம் கூறியிருக்கிறார். இனி தமிழ்நாட்டில் இருந்தால் வேலைக்கு ஆகாது என முடிவு செய்த ஜோதிகா, தனது கணவர் பிள்ளைகளுடன் சில ஆண்டுகளுக்கு முன் மும்பைக்கு குடிபெயர்ந்தார்.

இந்தியில் ஜோதிகாவுக்கு சில படங்களில் நடிக்கவும் வாய்ப்பு அமைந்தது. சூர்யாவும் கர்ணன் என்ற இந்தி படத்தில் நடிக்க கமிட் ஆகி பிறகு அந்த படமே டிராப் ஆகி விட்டது. இந்தி சினிமாவை நம்பினால் இனி காணாமல் போய் விடுவோம் என்று தெரிந்துக்கொண்ட நடிகர் சூர்யா, மீண்டும் தமிழ் சினிமாவில் தனது முழு கவனத்தை செலுத்த ஆரம்பித்தார்.

அதனால் தமிழில் தொடர்ந்து நடிக்க வசதியாக நடிகர் சூர்யா, சென்னை ஈசிஆரில் புது வீடும் கட்டியுள்ளார். இது அவரது மனைவி ஜோதிகாவுக்கு பிடிக்கவில்லை. ஏற்கனவே இந்தி படங்களில் நடித்த போது தமிழ் சினிமாவை குறை சொல்லும் விதமான சில கருத்துகளை ஜோதிகா பேசியதால், தமிழில் ஜோதிகாவுக்கு வாய்ப்பு தரவே இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் யோசிக்கும் நிலையில், தமிழில் இனி தனக்கு அதிக வாய்ப்பில்லை என்ற சூழலில் ஜோதிகா இருந்து வருகிறார்.

இந்தியில் கவனம் செலுத்தினால் தமிழ் படங்களை இழந்து விடுவோம் என்ற நெருக்கடியில் சூர்யாவும் இருந்து வருகிறார். மேலும் இழந்த மார்க்கெட்டை எப்படியாவது மீண்டும் பிடித்துவிடுவது என்ற போராட்டத்தில் நடிகர் சூர்யா அடுத்தடுத்த தமிழ் படங்களில் நடிக்க கமிட் ஆகி வருகிறார். இந்தி சினிமாவில் நடிக்க வேண்டும் என்று ஜோதிகா அடம்பிடிக்கிறார்.

இந்த தமிழ், இந்தி படங்கள் விவகாரத்தில் இருவருக்கும் ஏற்பட்ட முட்டல் மோதல் சண்டை இப்போது பெரிய விரிசலை ஏற்படுத்தியுள்ளது. அதனால் விரைவில் இந்த நட்சத்திர தம்பதியும் தனுஷ் – ஐஸ்வர்யா மாதிரி அறிவிப்பு வெளியிட்டாலும் ஆச்சரியம் எதுவும் இல்லை என்று கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது.