7 ஆண்டுகள் சிறை…. வசமாகசிக்கிய மாதம்பட்டி ரங்கராஜ்… 2வது திருமணத்தில் நடந்த தில்லாலங்கடி….

0
Follow on Google News

சமையல் கலையில் பிரபலமானவர் கோவையை சேர்ந்த மாதம்பட்டி ரங்கராஜ். ஏற்கனவே ஸ்ருதி என்பவரை திருமணம் செய்திருக்கிறார். இந்த தம்பதிக்கு இரண்டு ஆண்பிள்ளைகள் உள்ளனர். கடந்த சில தினங்களாக மாதம்பட்டி ரங்கராஜின் 2வது திருமணம் பற்றிய விவகாரம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இப்போது அது பெரிய சட்ட சிக்கலாகவும் மாறியுள்ளது.

கருத்து வேறுபாடு காரணமாக தனது முதல் மனைவி ஸ்ருதியை பிரிந்து வாழும் மாதம்பட்டி ரங்கராஜ், அவரை முறைப்படி விவாகரத்து செய்யாமல் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிறிஸ்டிலா என்பவரை 2வது திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் வழக்கறிஞரான அவரது முதல் மனைவி ஸ்ருதி, தனது கணவர் மாதம்பட்டி ரங்கராஜ் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க தயாராகி வருவதாக கூறப்படுகிறது.

சில தினங்களுக்கு முன்பு மாதம்பட்டி ரங்கராஜின் 2வது மனைவி ஜாய் கிறிஸ்டிலா, பல மாதங்களுக்கு முன்பே தங்கள் இருவருக்கும் திருமணம் நடந்து விட்டதாகவும், நான் இப்போது 6 மாதம் கர்ப்பமாக இருக்கிறேன் என்றும் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு இணையத்தில் வேகமாக பரவியது. இதனால் மாதம்பட்டி ரங்கராஜ் மீது கடுமையான விமர்சனங்களும் எழுந்தன. இப்போது அவரது குடும்ப விவகாரம் ஒரு கிரிமினல் குற்றமாக மாறும் நிலைக்கு சென்றுள்ளது.

முதல் மனைவி ஸ்ருதியை சட்டப்படி விவாகரத்து செய்யாததால், இந்த 2வது திருமணத்தை மாதம்பட்டி ரங்கராஜ் ரகசியமாக வைத்திருக்க விரும்பியிருக்கிறார். ஆனால் ஜாய் கிறிஸ்டிலா இந்த விஷயத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்து விட்டார். இப்போது அதுதான் பெரிய சிக்கலாக மாறியுள்ளது. முதல் மனைவி ஸ்ருதி உயிரோடு இருக்கும்போது அவரை விவாகரத்து செய்யாமல், மாதம்பட்டி ரங்கராஜ் 2வது திருமணம் செய்து கொண்டது பெரிய விவகாரமாக மாறிவிட்டது.

மேலும் மாதம்பட்டி ரங்கராஜின் முதல் மனைவி ஸ்ருதி, ஒரு தொழில் முறை வழக்கறிஞராக இருக்கிறார். இவர்களுக்கு 2 ஆண் பிள்ளைகளும் உள்ளனர். கடந்த ஏப்ரல் மாதத்தில் ஸ்ருதி தனது வலைதள பக்கத்தில், மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் தனது பிள்ளைகளின் புகைப்படத்தை வெளியிட்டு எனது உலகம், எனது மூன்று குழந்தைகள் என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்து இருக்கிறார்.

இதன்மூலம் மாதம்பட்டி ரங்கராஜை, அவரது மனைவி ஸ்ருதி விவாகரத்து செய்ய விரும்பவில்லை. அவர் மனதளவில் தன் கணவரை பிரியவில்லை என கூறப்பட்டது. இந்நிலையில் அவரது 2வது திருமணம் ஸ்ருதிக்கு பெரிய அதிர்ச்சியை தந்துள்ளது. தன்னை விவாகரத்து செய்யாமலேயே மறுமணம் செய்து கொண்ட மாதம்பட்டி ரங்கராஜ் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க ஸ்ருதி தயாராகி வருவதாக கூறப்படுகிறது.

அவரே வழக்கறிஞர் என்பதால் இந்த வழக்கை அவரே தீவிரமாக நடத்தவும் வாய்ப்புள்ளது. மேலும் தனது கணவர் மாதம்பட்டி ரங்கராஜ் மீது, மனைவி ஸ்ருதி போலீசில் புகார் அளித்தால் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 494ல் வழக்குப் பதிவு செய்யப்பட்டு மாதம்பட்டி ரங்கராஜூக்கு 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கவும் வாய்ப்புள்ளது.

இந்த விவகாரம் இவ்வளவு பெரிய விவகாரமாக மாறியும் இதுகுறித்து மாதம்பட்டி ரங்கராஜ் தரப்பில் இருந்து இதுவரை எந்தவிதமான விளக்கமும் இல்லை. இந்த விவகாரத்தில் ஸ்ருதி எடுக்கும் அடுத்தகட்ட நடவடிக்கையை பொறுத்தே மாதம்பட்டி ரங்கராஜின் எதிர்கால வாழ்க்கை அமையும்.