அண்ணாமலையின் அரசியல் எதிர்க்கலாம் எப்படி இருக்கும் என பிரபல ஜோதிடர், ஆஸ்ட்ரோ ஸ்ரீநிவாசன் தெரிவித்துள்ளார். அதில் அண்ணாமலைக்கு சிம்மம் லக்கனம், ஆயில்ய நட்சத்திரம் கடக ராசி, மூன்றாம் இடத்தில் சனி, செவ்வாய்,நான்காம் இடத்தில் கேது, 5ஆம் இடத்தில் குரு, 10ஆம் இடத்தில் ராகு, சூரியன், புதன், சுக்கிரன், 12-ஆம் இடத்தில் சந்திரன், இதுதான் அவர் ஜாதகத்தில் கிரகங்களின் இருப்பு நிலை..
அண்ணாமலை ஜாதகத்தின் முதல் சிறப்பு, லக்கின புள்ளி 17 டிகிரியில் அமைந்திருக்க அதே 17 டிகிரியில் தனுசில் குரு அமர்ந்து இலக்கண புள்ளி யுடன் நேரடி 9 ஆம் பார்வையில் இலக்கண புள்ளி விழுகிறது, அதனால் லக்னம் மிக வலுவாகிறது, லக்னாதிபதி சூரியன் சுக்கிரன் உடன் இணைந்து, மூணு டிகிரிக்குள் அஸ்தங்கம் செய்து, சுக்கிரன் வீட்டில், பத்தாம் இடத்தில் திக்பலத்துடன் அமர்ந்து உள்ளார்,

ராகுவுக்கும் சூரியனுக்கும் 8டிகிரி இடைவேளை இதனால் சூரியன் 90%வலுவாக உள்ளார், இதனால் லக்னம் லக்னாதிபதி வலுவாக அமைந்துள்ளது, அதிகாரம் மிக்க அமைப்புகளில் அமர வேண்டுமென்றால் சூரியன், சந்திரன் வலுவாகவும் தங்களுக்குள் கேந்திரமாகவும் இருக்க வேண்டும் இவர் ஜாதகத்தில் சூரியனுக்கு கேந்திரத்தில் சந்திரன் உள்ளது சிறப்பு.
அண்ணாமலை சுக்கிர திசை,சூரிய புத்தியில், காவல்துறை தேர்வில் வெற்றி பெற்று பனிரெண்டாம் அதிபதி வெளி மாநிலம் வெளிநாட்டை குறிக்கும் சந்திரப் புத்தியில் வெளி மாநிலத்தில் பணியில் சேர்ந்தார், சிம்ம லக்கினத்திற்கு ஆகாத சனி புத்தியில் பதவியில் விலகி சனி புத்தி முடியும் வரை எந்தவித அரசியல் பதவியும் இல்லாமல் இருந்தார்,
அடுத்து வந்த பத்தாம் இடத்தில் இருக்கும் புதன் புத்தியில் அரசியலில் அடி எடுத்து வைத்தார் அண்ணாமலை , கேது புத்தி எப்பொழுது வருகிறதோ அப்பொழுதெல்லாம் மாற்றம் தொடங்கும் இப்பொழுது அவருக்கு சுக்கிர திசையின் கடைசி புத்தியான கேது புத்தியில் அவருக்கு அரசியலில் இருக்கும் நிலையில் மாற்றம் வந்துள்ளது, சுக்கிர தசை கேது புத்தி 10.3.2026 புத்தி முடியும் வரை இந்த நிலை தொடரும்..!
மார்ச் மாதம் ஆரம்பிக்கும் அவரின் லக்னாதிபதி, சூரிய தசையில் இருந்து அரசியலில் அவரின் வெற்றி கணக்கு துவங்கும், சூரிய தசை 2027, 2028 ஆண்டு செவ்வாய்,ராகு புத்தியில் உச்ச பதவிக்கு போவார், சூரிய தசை முழுவதும் அவர் வருங்கால அரசியலுக்கு அடித்தளமாக அமையும், இடையில் சிம்ம லக்கினத்திற்கு ஆகாத சனி புத்தி வரும் பொழுது சிறு சறுக்கல் அவருக்கு ஏற்படும்.
2031 இறுதியில் பன்னிரெண்டாம் இடத்தில் இருந்து தசை நடத்தும் சந்திரன் புத்தி ஆரம்பம் ஆகும், இந்த சந்திர தசை அரசியலில் இவருக்கு ஏற்ற இறக்கங்களை கொடுக்கும் சில வெற்றிகளையும் தோல்விகளையும்,இந்த சந்திர தசை முழுவதும் இவருக்கு அரசியலில் ஏற்ற இறக்கங்களை கொடுத்தாலும் தமிழ்நாட்டை தாண்டி இந்தியா முழுவதும் அரசியல் தலைவர் ஆகி, இந்திய அரசியலில் முத்திரை பதிப்பார் அண்ணாமலை.
2041 ஆண்டு ஆரம்பமாகும் செவ்வாய் தசை, இவருக்கு உடல் நிலையில் சில சில பிரச்சனைகளை கொடுத்தாலும் சிறையை சென்று வரும் அமைப்பு இருந்தாலும் இவை அனைத்தையும் வெற்றி பெற்று அந்த செவ்வாய் தசையில் அரசியலில் ஆளுமை மிக்க தலைவராக உருவெடுத்து இந்தியாவில் இருக்கும் முதல் 20 அரசியல் தலைவர்களில் ஒருவராக இருப்பார் அண்ணாமலை.
2048 ஆம், ஆண்டு பத்தாமிடத்தில் சுக்கிரன் புதன் சூரியனுடன் இணைந்து ராகு தசை ஆரம்பிப்பார், ராகு தசை முழுவதும் இவர் இந்திய அரசியலில் முதல் ஐந்து இடங்களில் இருக்கும் தலைவர்களில் ஒருவராக இருப்பார், ராகு தசை குரு புத்தி இந்தியாவின் உச்சபட்ச அதிகார அமைப்பில் அமர்வார், இந்த ராகு தசை முழுவதும் இந்திய அரசியலில் மிகப்பெரிய தாக்கத்தையும் வளர்ச்சியையும் ஏற்படுத்துவார், வருங்கால அண்ணாமலைக்கு அரசியலில் ஏறு முகம் தான் என பிரபல ஜோதிடர், ஆஸ்ட்ரோ ஸ்ரீநிவாசன் தெரிவித்துள்ளார்.

