சமையல் கலையில் மக்கள் மத்தியில் பிரபலமானவர் கோவை மாதம்பட்டியை சேர்ந்தவர் ரங்கராஜ். தமிழ் சினிமா நட்த்திரங்கள் அரசியல் தலைவர்கள் பிரபல தொழிலதிபர்கள் வீட்டு விசேஷங்கள் என்றாலே அங்கு கேட்டரிங் மாதம்பட்டி ரங்கராஜ் இருக்க வேண்டும் என்ற சூழல் இப்போது நிலவுகிறது. தங்களது இல்ல விசேஷங்களுக்கு மாதம்பட்டி ரங்கராஜ் கேட்டரிங் என்று சொல்வது கூட இப்போது பணக்காரர்களின் இமேஜ்களில் ஒன்றாக மாறிவிட்டது.
மாதம்பட்டி ரங்கராஜ் திருமணம் ஆகி ஸ்ருதி என்ற மனைவியும் 2 பிள்ளைகளும் இருக்கின்றனர். ஆனால் மாதம்பட்டி ரங்கராஜூக்கும் அவரது மனைவி ஸ்ருதிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் கடந்த சில ஆண்டுகளாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாக தெரிய வருகிறது. இந்த சூழ்நிலையில் திரைப்படங்களில் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றி வரும் ஜாய் கிறிஸ்டலா தனக்கும் மாதம்பட்டி ரங்கராஜூக்கும் திருமணமாகி விட்டதாக தனது சமூக வலைதள பக்கத்தில் அவருடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

கடந்த 2018ம் ஆண்டில் நடிகை ஜோதிகா நடிப்பில் வெளியான பொன்மகள் வந்தாள் என்ற படத்தை டைரக்ட் செய்த ஜே ஜே பிரட்ரிக் என்பவருடன் ஜாய் கிறிஸ்டலாவுக்கு திருமணம் நடந்து விவாகரத்தும் ஆகி விட்டது. இப்போது திடீரென மாதம்பட்டி ரங்கராஜனுடன் தனக்கு திருமணமாகி விட்டதாகவும் 6 மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும் அவர் அறிவித்திருப்பது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதில் விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவலாக பங்கேற்ற மாதம்பட்டி ரங்கராஜூக்கு ஆடை வடிவமைப்பாளராக ஜாய் கிறிஸ்டிலா இருந்துள்ளார். அப்போதும் இருவருக்கும் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் நெருங்கிய நட்பாக மாறி பிறகு இருவரும் திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இருவரும் திருமணம் செய்து கொண்ட விஷயத்தை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்று மாதம்பட்டி ரங்கராஜிடம் பலமுறை ஜாய் கிறிஸ்டலா கேட்டிருக்கிறார். ஆனால் அவருக்கு இதில் விருப்பம் இல்லை. சினிமா உலகில் இப்படி திருமணம் செய்து கொள்ளாமல் லிவிங் டு ரிலேஷன்ஷிப்பில் சேர்ந்து இருப்பது சகஜம் தானே? எதற்காக திருமணம் செய்து கொள்ள வேண்டுமா என்றும் அவர் கேட்டிருக்கிறார்.
இன்னும் எனக்கும் ஸ்ருதிக்கும் முறைப்படி விவாகரத்து நடக்கவில்லை. அதனால் இப்போது நாம் இருவரும் திருமணம் செய்து கொண்டோம் என்று அறிவித்தால் சட்ட ரீதியாக சிக்கல் வரும் என்றும் அவர் திருமணம் செய்த விஷயத்தை வெளியிடாமல் தவிர்த்து வந்திருக்கிறார். அதே நேரத்தில் கொஞ்சம் கொஞ்சமாக சாய் கிறிஸ்டலாவை விட்டு அவர் விலகியதாகவும் கூறப்படுகிறது.
இதை சற்றும் எதிர்பார்க்காத ஜாய் கிறிஸ்டிலா அவரை தொடர்பு கொள்ள முயன்ற போதும் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. அதனால் மாதம்பட்டி ரங்கராஜின் நெருங்கிய நட்பு வட்டாரத்தில் விசாரித்த போது, ரங்கராஜூக்கு இதுதான் வேலை. ஒரு பெண்ணுடன் சில காலம் நெருக்கமான பழகுவார். பிறகு அந்த பெண்ணை கழட்டி விட்டுவிட்டு வேற பெண்ணை தேடிப் போய் விடுவார் என்று கூறியிருக்கிறார்கள்.
இதனால் அதிர்ச்சியடைந்த ஜாய் கிறிஸ்டிலாவுக்கு, ரங்கராஜை விட்டு விலகிவிட மனமில்லை. மேலும் அவரது கருவை வயிற்றில் சுமந்து கொண்டிருப்பதால், நமக்கு நடந்து முடிந்த திருமணத்தை நாமே பொதுவெளியில் அறிவித்து விடலாம் என்ற முடிவெடுத்து அந்த பழைய புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் என கூறப்படுகிறது.

