கங்கைகொண்ட சோழபுரத்துக்கு வருகை தந்த பிரதமர் மோடி, சோழகங்கத்தில் இருந்து கங்கைகொண்ட சோழபுரம் வரை 3.8 கிமீ தூரம் பிரதமர் மோடி ரோடு ஷோ மேற்கொண்டார். இதனை தொடர்ந்து கங்கைகொண்ட சோழபுரம் கோவிலில் சாமி தரிசனம் செய்த பிரதமர் மோடி. வாரணாசியில் இருந்து கொண்டு வந்த கங்கை நீரை சோழீஸ்வரருக்கு அபிஷேகம் செய்ய கொடுத்தார்.
இதனை தொடர்ந்து ராஜராஜ சோழன் முப்பெரும் விழா இசைஞானி இளையராஜாவின் இசை நிகழ்ச்சியோடு தொடங்கியது. இசை நிகழ்ச்சி முடிந்த பிறகு பேசிய பிரதமர் மோடி, வணக்கம் சோழமண்டலம் என்று தமிழில் பேசி உரையை தொடங்கினார். தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி. நம்முடைய பாரம்பரியத்தின் மீது பெருமித உணர்வை முன்னெடுக்கும் வேளையில், இங்கு மேலும் ஒரு உறுதிப்பாட்டை நான் அளிக்கிறேன் என தெரிவித்த பிரதமர் மோடி.

வரவிருக்கும் கால கட்டத்திலே நம் தமிழ்நாட்டில் ராஜ ராஜ சோழனின் மைந்தன் மகத்தான ஆட்சியாளர் முதலாம் ராஜேந்திர சோழனுக்கு பிரம்மாண்டமான சிலையை அமைப்போம். இந்த உருவச்சிலைகள் நமது வரலாற்று விழிப்புணர்வின் நவீன கொடிமரங்கள் ஆகும் என தெரிவித்த பிரதமர் மோடி, மேலும் ஜனநாயகத்தின் தாய் சோழராட்சி என்றும், சைவ பாரம்பரியத்தில் தமிழகம் முக்கிய மையமாக திகழ சோழர்களே காரணம் என பிரதமர் மோடி தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் பிரதமர் மோடி தமிழ்நாட்டில் ராஜ ராஜ சோழனின் மைந்தன் மகத்தான ஆட்சியாளர் முதலாம் ராஜேந்திர சோழனுக்கு பிரம்மாண்டமான சிலையை அமைப்போம் என பிரதமர் மோடி கங்கைகொண்டான் சோழபுரத்தில் பேசியதற்கு சுமார் சில மணி நேரங்களுக்கு முன்பு பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை அளித்த பேட்டி ஒன்று தற்பொழுது வைரலாகி வருகிறது.
அதில் கங்கை கொண்ட சோழ புரத்தில் இருக்கும் கோவிலிலை சுற்றியுள்ள மதிசுவர் ஆங்கிலேயர்களால் இடிக்கப்பட்டது, இதை சரி செய்து கம்பீரமாக காட்சியளிக்கும் வகையில் இருக்க வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்ததாக தெரிவித்த அண்ணாமலை, மேலும் கங்கை கொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழனுக்கு மிக பிரமாண்ட சிலை அமைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்ததாக அண்ணாமலை தெரிவித்து இருந்தார்.
அதாவது பிரதமர் மோடி கங்கை கொண்ட சோழ புரம் வருவதற்கு சுமார் சில மணி நேரத்திற்கு முன்பு கங்கை கொண்ட சோழ புரத்தில் ராஜேந்திரன் சோழனுக்கு மிக பிரமாண்ட சிலை அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளதாக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்து இருந்த நிலையில், அடுத்த சில மணி நேரத்தில் கங்கை கொண்ட சோழபுரம் வந்த பிரதமர் மோடி,
தமிழ்நாட்டில் ராஜ ராஜ சோழனின் மைந்தன் மகத்தான ஆட்சியாளர் முதலாம் ராஜேந்திர சோழனுக்கு பிரம்மாண்டமான சிலையை அமைப்போம். இந்த உருவச்சிலைகள் நமது வரலாற்று விழிப்புணர்வின் நவீன கொடிமரங்கள் ஆகும் என தெரிவித்து இருந்தது தமிழர்களுக்கு எதிர்ப்பாராத மகிழ்ச்சியை கொடுக்கும் ட்விஸ்ட்டாக அமைந்து இருந்தது.
குறிப்பாக தமிழ்நாடு என்றால், இது பகுத்தறிவு மண் என்றெல்லாம் இரு பின்பம் இருக்கும் நிலையில், சைவ பாரம்பரியத்தில் தமிழகம் முக்கிய மையமாக திகழ சோழர்களே காரணம் என பிரதமர் மோடி தெரிவித்து இது சைவம் பாரம்பரிய மண் என்பதை உணர்த்தியது மட்டுமில்லாமல், தமிழகத்தின் அடையாளமாக இருக்கும் வகையில் ராஜேந்திர சோழனுக்கு பிரமாண்ட சிலை அமைப்போம் என பிரதமர் உறுதி யளித்தது குறிப்பிடதக்கது.

