கேரளாவைச் சேர்ந்த நடிகை நித்யா மேனன் மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிறகு கதாநாயகியாக மாறியவர். திருச்சிற்றம்பலம் படத்தில் நடிகர் தனுஷூக்கு ஜோடியாக நடித்த போது அவருக்கு மிகப்பெரிய வரவேற்பு தமிழ் சினிமா ரசிகர்களிடம் கிடைத்தது. இந்நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற நடிகை நித்யா மேனன் , மூன்று மாத குழந்தையாக இருந்த போது எனது பாட்டியிடம் விட்டுவிட்டு என்னுடைய அம்மா வேலைக்கு சென்று விடுவார் என தெரிவித்த நித்யா மேனன்.
மேலும், அம்மாவின் இடத்தை எனக்கு பாட்டி தான் நிரப்பினார். நான் மற்றவர்களை விடவும் கொஞ்சம் வித்தியாசமாக தான் இருப்பேன். எனக்கு நண்பர்கள் இருக்கிறார்கள். ஆனாலும் நான் தனியாகத்தான் இருப்பேன். காதல் அனுபவம் எனக்கு இல்லை. எத்தனை முறை காதலில் விழுந்தேனோ அத்தனை முறையும் என் இதயம் தான் உடைந்து போனது. எனக்கு ஒரு துணை வேண்டும். அவர்களுடன் அழகான வாழ்க்கை ஒன்றை வாழ வேண்டும் என்றெல்லாம் எனக்கும் கனவுகள் இருந்தன.

ஆனால் அப்படிப்பட்ட ஒருவர் எனக்கு கிடைக்கவே இல்லை. அனைத்து உணர்வுகளிலிருந்தும் இப்போது நான் வெளியே வந்து விட்டேன். வாழ்நாள் முழுவதும் திருமணமே செய்து கொள்ள மாட்டேன் என்றெல்லாம் நான் சொல்லவில்லை. எனக்கு பொருத்தமான நல்ல துணை கிடைத்தால் நாளைக்கே கூட நான் திருமணம் செய்து கொள்வேன். இப்போது எனக்கு இருக்கும் தனிமை தான் மகிழ்ச்சி தருகிறது. ரத்தன் டாடாவும் திருமணம் செய்து கொள்ளவில்லை.
அதுபோல் நான் தனிமையை ரசிக்கிறேன். திருமணம் நடந்தாலும் மகிழ்ச்சிதான், நடக்கவில்லை என்றாலும் மகிழ்ச்சி தான். ஆன்மீகப் பாதையை இப்போது நான் பின்பற்றுகிறேன் என்று நடிகை நித்யாமேனன் அந்த நேர்காணலில் வெளிப்படையாக கூறியிருக்கிறார். வழக்கமாக மலையாள சினிமாவில் இருந்து வரும் நடிகைகள் என்றாலே தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து விடுகிறது. அது அம்பிகா ராதா ரேவதி ஊர்வசி காலத்தில் இருந்து இப்போது மீரா ஜாஸ்மின் நயன்தாரா கீர்த்தி சுரேஷ் நித்யா மேனன் வரை தொடர்கதையாகவே நீடிக்கிறது.
ஆனால் பெரும்பாலான சினிமா நடிகைகளுக்கு திருமண வாழ்க்கை என்பதுதான் அவர்களது வாழ்க்கையில் நிராசையாக மாறி விடுகிறது. மலையாளம் மற்றும் தமிழில் ஒரு நல்ல நடிகையாக ரசிகா்களிடம் பெற்ற நடிகை நித்யா மேனனுக்கு இப்போது 37 வயதாகிறது. கடந்த 1988ம் ஆண்டில் பிறந்தவர். ஏற்கனவே 40 வயதுகளை கடந்த நடிகைகள் திரிஷா அனுஷ்கா ஷெட்டி பூணம் பஜ்வாலா கிரண் ரத்தோர் கௌசல்யா சித்தாரா என பலரும் முரட்டு சிங்கிளாக தான் வலம் வருகின்றனர்.
அந்த வரிசையில் இப்போது நடிகை நித்யா மேனனும் இணைந்திருக்கிறார். திருமணத்துக்கு பிறகு நடிப்பு வேண்டாம், கணவர் பிள்ளைகள் குடும்பம் என வாழ முடிவு செய்தால் எந்த நடிகைக்கும் திருமண வாழ்க்கை சிறப்பாக அமையும். குடும்ப வாழ்க்கைக்கு பிறகும் சினிமாவில் நடிக்க விரும்பினால், அது எக்குத்தப்பாகி விவாகரத்தில் தான் முடியும். நடிகை நித்யா மேனன் திருமண ஆசை கைகூடாமல் போவதற்கு அதுவும் கூட ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம்.

