அடி மேல் அடி வாங்கும் சூர்யா – ஜோதிகா… மூட்டை முடுச்சுகளை கட்டிட்டு குடும்பத்துடன் வெளியேற்றம்.

0
Follow on Google News

நடிகர் சூர்யாவின் மனைவி நடிகை ஜோதிகா வாய் திறந்து பேசினாலே ஏதேனும் வம்பில் அதை போய் முடிந்து விடுகிறது. கோவில்களுக்கு ஒதுக்கப்படும் பணத்தை, கோவில்களை புனரமைக்க செலவிடப்படும் தொகையை ஸ்கூல், ஹாஸ்பிடல் ஆகியவற்றுக்கு கொடுத்து உதவுங்கள் என்று சில ஆண்டுகளுக்கு முன் நடிகை ஜோதிகா பேசியது பெரிய அளவில் சர்ச்சையானது.

அதற்குப் பிறகு நடிகை ஜோதிகா என்ன பேசினாலும் அது பெரிய விவகாரமாக மாறி கடைசியில் அது பஞ்சாயத்தில்தான் முடிகிறது. ஆனால் ஜோதிகா என்ன செய்தாலும் என்ன பேசினாலும் என்னென்ன வம்புகளை இழுத்து விட்டாலும் அதை எல்லாம் கடித்து கண்ட்ரோல் செய்யாமல் அப்படியே விட்டு விடுவதும் மட்டுமில்லை மனைவி பேசியதில் தவறில்லை என மனைவி ஜோதிகாவுக்கு முட்டு கொடுப்பதை நடிகர் சூர்யாவின் வழக்கமாக இருந்து வருகிறது.

இந்நிலையில் சென்னையில் மாமனார், நடிகர் சிவக்குமார் குடும்பத்துடன் வாழ்ந்து வந்த நடிகை ஜோதிகா, இந்தி படங்களில் நடிக்க வாய்ப்பு தேடி குடும்பத்துடன் சில ஆண்டுகளுக்கு முன் மும்பையில் குடியேறினார். மும்பைக்கு சென்று குடியேறிய பிறகு தமிழ் சினிமாவை அவ்வப்போது மோசமாக விமர்சித்து பேசுவது ஜோதிகாவின் வழக்கமாக இருந்து வந்தது.

தமிழ் சினிமாவில் பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் கேரக்டர்கள் இல்லை, ஆணாதிக்கம் தான் அதிகமாக இருக்கிறது. ஹீரோக்கள் தங்கள் படங்களில் புகை பிடிப்பது மது குடிப்பது போன்ற காட்சிகளில் சாதாரணமாக நடிக்கின்றனர். அதேபோல் கதாநாயகிகளை தமிழ் படங்களில் ஐட்டம் பாடல்களுக்கு குத்தாட்டம் போட வைக்கிறார்கள் என்றும் ஒரு முறை ஜோதிகா கூறியிருந்தார்.

இந்நிலையில் நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்துள்ள கருப்பு படத்தின் டீசர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஆகியவை அடுத்தடுத்து வெளியானது. இதில் நடிகர் சூர்யா வாயில் சுருட்டு வைத்தபடி போஸ் கொடுத்திருந்தார். இந்நிலையில் உங்கள் கணவர் படத்திலேயே புகை பிடிக்கும் காட்சி உள்ளது, இது குறித்து பேச மாட்டீங்களா என ஜோதிகாவை வறுத்து எடுத்து வருகிறார்கள் ரசிகர்கள்.

அதேபோல் தமிழ் சினிமாவை தூக்கி எறிந்துவிட்டு மும்பைக்கு போன சூர்யா ஜோதிகா ஜோடி, அங்கு வாய்ப்பு இல்லாததால் மறுபடியும் சென்னைக்கு வந்துருகிறார்கள், இந்நிலையில் சென்னை ஈசிஆரில் நடிகர் சூர்யா பிரமாண்டமாக ஒரு பங்களாவை கட்டி வருகிறார். ஏற்கனவே தங்களுக்கு சென்னையில் வீடு இருந்தும் அங்கு தந்தை சிவக்குமார், தம்பி கார்த்தி வசித்து வரும் நிலையில் அங்கு செல்லாமல் சென்னை வரும்போதெல்லாம் சூர்யாவும் ஜோதிகாவும் நட்சத்திர ஓட்டலில்தான் தங்கினர்.

இப்போது ஈசிஆரில் புதிய பங்களா ஒன்றை கட்டி வருவதால், கணவரை ஷாருக்கான் , சல்மான் காண ரேஞ்சுக்கு பாலிவூட் ஸ்டாராக்க போகிறேன் என மும்பைக்கு அழைத்து சென்ற ஜோதிகா அங்கே பலத்த அடி வாங்கி மீண்டும் தமிழுக்கு திரும்ப முடிவு செய்து தான் சென்னை ஈசிஆரில் பிரமாண்ட பங்களாவை கட்டி வருவதாக கூறப்படுகிறது.

எது எப்படியோ நடிகை ஜோதிகா மைக்கை பிடித்தாலே அது கணவர் நடிகர் சூர்யாவுக்கு தான் ஆப்பாக முடிகிறது. போகிற போக்கை பார்த்தால் சூர்யாவை காலி பண்ணாமல் அண்ணி ஜோதிகா விடமாட்டாங்க, ஓயவே மாட்டாங்க போலிருக்கே என ஒரு தரப்பு கருத்து தெரிவித்தாலும், இனி காலி செய்ய என்ன இருக்கு, அதான் சூர்யா சினிமா வாழ்க்கையையே முடிவுக்கு கொண்டு வந்து விட்டாரே ஜோதிகா என்கிறது மாற்றோரு தரப்பு.