மாப்பு… வெச்சுட்டாங்களேஆப்பு…. திரையரங்கை விட்டு தெறித்து ஓடும் ரசிகர்கள்…வடிவேலு மாரீசன் படத்தின் முழு விமர்சனம் இதோ..

0
Follow on Google News

மாமன்னன் படத்திற்கு பிறகு மீண்டும் வடிவேலு, பகத் பாசில் காம்போவில் மாரீசன் படம் வெளியாகி இருக்கிறது. மாரீசன் படத்தின் கதைக்களம் இதுதான்… பாளையங்கோட்டை ஜெயிலிலிருந்து வெளியே வரும் பகத் பாசில், மீண்டும் தனது திருட்டு தொழிலை ஆரம்பிக்கிறார். இதில் பகத் பாசில் கேரக்டர் பெயர் தயாளன். வடிவேலு வீட்டில் திருட வரும்போது, கையில் விலங்குடன் அவர் கட்டப்பட்டு இருப்பதைப் பார்த்து பகத் பாசில் ஆச்சரியப்படுகிறார்.

எனக்கு அல்சைமர் என்ற மறதி நோய் இருக்குப்பா. அதனால் என் மகன் இப்படி என்னை கட்டிப்போட்டு வச்சிட்டு போயிட்டான் என்கிறார். என்னோட பேங்க் அக்கவுண்ட்ல நிறைய பணம் இருக்கு. நீ என்னை வெளியே கூட்டிட்டு போனால் உனக்கு கொஞ்சம் பணம் தருகிறேன் என்றதும் வடிவேலுவிடம் இருக்கும் மொத்த பணத்தையும் அபகரிக்க பகத் பாசில் திட்டம் போடுகிறார்.

பைக்கில் பின்னால் அவரை அமர வைத்து அழைத்துச் செல்கிறார். உண்மையில் வடிவேலு யார், பகத் பாசில் யார் என்ற டிவிஸ்ட்டுகளுடன் ஆரம்பிக்கும் இந்த படம் இரண்டாம் பாதியில் தான் சூடு பிடிக்கிறது. ஆரம்பத்தில் காமெடியில் கலக்கியவர் வடிவேலு. அவரது காமெடிக்காகவே பேசப்பட்ட படங்கள் நிறைய உண்டு. ஆனால் 10 ஆண்டுகள் சினிமாவில் விலகி இருந்த அவர் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்த பிறகு அவரால் பழைய வடிவேலுவாக ரசிகர்களிடம் வரவேற்பை பெற முடியவில்லை.

கத்தி சண்டை , நாய் சேகர் ரிட்டர்ன்ஸ், சந்திரமுகி 2, எலி என எந்த படத்திலும் வடிவேலு எதிர்பார்த்தது போல, அவரது காமெடியை ரசிகர்கள் ரசிக்கவில்லை. மாமன்னன் படத்துக்கு பிறகு தொடர்ந்து சில படங்களில் காமெடி கேரக்டரில் நடித்த வடிவேலுவுக்கு எந்த படமும் கம்பேக் தரவில்லை. இந்நிலையில் வடிவேலு படம் முழுக்க வரும் மாரீசன் படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த அளவுக்கு சுவாரசியமான ஒரு படமாக இது ரசிகர்களை வெகுவாக கவரவில்லை.

மாரீசன் படத்தில் திருடன் கேரக்டரில்தான் பகத் பாசில் நடித்திருக்கிறார். இதற்கு முன்பு ரஜினியுடன் வேட்டையன் படத்திலும் இதே கேரக்டரில்தான் அவர் நடித்திருந்தர். மாரீசன் படத்தில் மற்றொரு கொடுமை என்னவென்றால் வடிவேலுவின் மனைவியாக சித்தாரா நடித்திருக்கிறார். கோவை சரளா பிஎல் தேனப்பன் போன்றவர்கள் இந்த படத்தில் நடித்திருந்தாலும் அவர்கள் குறைந்தபட்ச நேரமே திரையில் வருவது ரசிகர்களுக்கு பலத்த ஏமாற்றம் அளிக்கிறது.

நடிகர் வடிவேலுக்கு செய்யப்பட்ட மேக்கப் பல இடங்களில் சொதப்பலாக இருக்கிறது. இன்னும் கொஞ்சம் மேக்கப்பில் அதிக கவனம் செலுத்தி இருக்கலாம். இன்வெஸ்டிகேஷன் கதையாக உள்ள மாரீசன் படத்தில் பல இடங்களில் சொதப்பல் வெளிப்படையாகவே தெரிகிறது. படத்தின் பல காட்சிகள் நீளமாக இழுத்துக்கொண்டே போவது ரசிகர்களுக்கு கொட்டாவியாக வருகிறது.

மாரீசன் படம் நடிகர் வடிவேலுவுக்கு கம்பேக் தரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதற்கெல்லாம் வாய்ப்பே இல்ல ராஜா, ரசிகர்களின் பொறுமை என்னவென்று பார்க்கும் ஒரு சோதனையான படம் தான் இது என்றும் விமர்சனம் எழுந்துள்ளது. மாப்பு வெச்சிட்டாங்களே ஆப்பு என்று சொதப்பல் படங்களை பார்த்துவிட்டு தியேட்டரை விட்டு வெளியே வரும் ரசிகர்கள் பேசும் டயலாக்கை, இன்று வெளியான மாரீசன் படத்திற்கும் அவர்கள் சத்தமாகவே பேசிவிடலாம் என்ற நிலையில்தான், மாரீசன் படம் ரசிகர்களை கதற வைத்திருக்கிறது.