வெளிநாடு தப்பி ஓட திட்டம்… செந்தில் பாலாஜி போட்ட மாஸ்டர் பிளான்…. சுற்றி லாக் செய்த அமலாக்க துறை…

0
Follow on Google News

அமைச்சர் செந்தில் பாலாஜி மீது இரண்டு குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ளது, ஒன்று டாஸ்மாக் ஊழல் மற்றொன்று அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக, சுமார் 2000-க்கும் மேற்பட்டவர்கள் இடம் 30,000 முதல் 10 லட்சம் வரை சுமார் ஆயிரம் கோடிக்கு மேல் ஊழல் செய்ததாக வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்த குற்றச்சாட்டில் லஞ்ச ஒழிப்பு துறையால் முதல் குற்றவாளியாக செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் 2021 திமுக ஆட்சிக்கு வந்த பின்பு இந்த வழக்கில் தப்பிப்பதற்காக, வேலை வாங்கித் தருவதாக பணம் பெற்றவர்களிடம் பணத்தை திருப்பி கொடுத்து விட்டோம் என்று இந்த வழக்கில் இருந்து செந்தில் பாலாஜி தப்பித்தார்.

ஆனால் அந்த தீர்ப்பை எதிர்த்து மேலும் பாதிக்கப்பட்ட ஒருவர் தொடர்ந்த வழக்கு செந்தில் பாலாஜிக்கு எதிராக திரும்பியது. இந்த நிலையில் அடுத்தடுத்து அமலாக்கத்துறை காட்டிய தீவிரத்தில் செந்தில் பாலாஜி சிறையில் அடைக்கப்பட்டார். அவருடைய தம்பி அசோக் தலைமறைவானார். இந்த நிலையில் செந்தில் பாலாஜி பெயில் ரத்து செய்ய வேண்டும் என தொடர்ந்த வழக்கில் செந்தில் பாலாஜி தம்பி அசோக் தொடர்ந்து தலைமறைவாக இருந்தது அவருக்கு எதிராக இருந்தது.

இதனை தொடர்ந்து நீதிமன்றம் கிறுக்கு பிடி த்த நிலையில் 14 மாதங்கள் தலைமறைவாக இருந்த செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் நீதிமன்றத்தில் ஆஜரானார். இந்த நிலையில் செந்தில் பாலாஜி மீதும் அவருடைய தம்பி மீதும் உள்ள வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில் தற்போது செந்தில் பாலாஜி தம்பியை வெளிநாட்டிற்கு கடத்தி விட்டால், தன்னுடைய தம்பி வரும் வரை தற்போது நிலுவையில் இருக்கும் வழக்குகளை இன்னும் தாமதப்படுத்தலாம்.

அசோக்குமார் வந்ததும் இந்த வழக்கை விசாரணை நடத்தலாம் என்று காலதாமதம் செய்யலாம் என செந்தில் பாலாஜி போட்ட மாஸ்டர் பிளான் தற்பொழுது அமலாக்க துறையால் சுக்கு நூறாக உடைக்கப்பட்டிருக்கிறது. இதய சிகிச்சை மேற்கொள்ள அமெரிக்கா செல்ல அனுமதி கோரி செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் தாக்கல் செய்த மனுவை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது.

இதனை எதிர்த்து அசோக்குமார் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மனு விசாரணைக்கு வந்த போது அமலாக்கத் துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், விசாரணைக்கு ஆஜராகுமாறு 9 முறை அசோக்குமாருக்கு சம்மன் அனுப்பப்பட்டதாகவும், ஆனால் அவர் ஒருமுறை கூட ஆஜராகி ஒத்துழைக்கவில்லை எனவும், மேலும், அசோக்குமார் அமெரிக்காவில் மேற்கொள்ளப்போகும் சிகிச்சையை இந்தியாவிலேயே மேற்கொள்ளலாம் என அமலாக்க துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, அமெரிக்காவில் சிகிச்சை மேற்கொள்ளும் மருத்துவமனையின் பெயர், விமான டிக்கெட், தங்குமிடம் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த தகவல்களின் உண்மை தன்மை குறித்து அமலாக்கத் துறை ஆய்வு செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை ஜூலை 29-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்


இந்நிலையில் எந்த விதத்தில் செந்தில் பாலாஜி தம்பி வெளிநாடு சென்று விட கூடாது என்பதில் மும்முரமாக இருந்து வருகிறது அமலாக்க துறை. அந்த வகையில் அசோக் எதிராக பல ஆதாரங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும் வகையில் அமலாக்க துறை கைவசம் உள்ளதாக கூறப்படுகிறது.