நாமக்கல் பகுதியில் அப்பாவி தொழிலாளர்களின் வறுமையை பயன்படுத்தி அவர்களிடம் கிட்னி திருடி விற்பதாக எழுந்துள்ள புகார் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்காக அந்தப் பகுதியில் புரோக்கர்கள் இயங்கி மிகப்பெரிய நெட்வொர்க்காக செயல்படுவதாகவும் தகவல் வெளியாகியது. இந்த அதிர்ச்சி வழக்கு குறித்து தினசரி பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியாகி கொண்டிருக்கிறது.
சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாகவே அந்தப் பகுதியில் கிட்னி திருட்டு அரங்கேறி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தொழிலாளர்களை மூளைச் சலவை செய்து, கிட்னியை பெற்று அவற்றை சட்டவிரோதமாக பல லட்ச ரூபாய்க்கு விற்று வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொழிலாளர்களிடம் ஒரு கிட்னி சராசரியாக ரூ.6 லட்சம் என்று சொல்லி வெளியில் அதை பல மடங்கு அதிக விலை வைத்து விற்று வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குநர் தலைமையில் 4 பேர் கொண்ட சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டு தற்போது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தீவிரமாக நடைபெற்று வரும் இந்த விசாரணையில் நாளுக்கு நாள் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி வருகிறது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியு்ளது,
போதுவாக கிட்னி மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றால், தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட அங்கீகார குழுவிடம் அனுமதிபெற வேண்டும். ஆனால் இந்த கிட்னி திருட்டு விவாகரத்தில் போலி சான்றிதழ் கொடுத்து அரசை ஏமாற்றியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது, இதனை தொடர்ந்து தனியாக ஒரு குழு அமைத்து இந்த விவகாரம் குறித்து விசாரணை செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில் சிறுநீரக திருட்டு புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட குழுவின் முதற்கட்ட அறிக்கையின் அடிப்படையில், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள தனலட்சுமி சீனிவாசன் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதேபோல் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள திருச்சி சிதார் மருத்துவமனைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தனலெட்சுமி சீனிவாசன் மருத்துவமனை திமுகவின் மண்ணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கதிரவனுக்கு சொந்தமானது. திருச்சி தில்லைநகரில் உள்ள சிதார் மருத்துவமனை, திமுக அமைச்சர் கே.என்.நேருவுக்கு நெருக்கமான டாக்டர் .ராஜமாணிக்கம் நடத்தும் மருத்துவமனையாகும். இந்நிலையில் ஏற்கனவே திமுக ஆட்சியின் மீது தொடர்ந்து பல்வேறு குற்றசாட்டுகள் மக்கள் மத்தியில் எதிர்ப்பு அலையாக உருவெடுத்து வருகிறது.
தற்பொழுது கிட்னி திருட்டு விவகாரத்தில் திமுக மண்ணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கதிரவனுக்கு சொந்தமான தனலெட்சுமி சீனிவாசன் மருத்துவமனை மற்றும், திமுக அமைச்சர் கே.என்.நேருவுக்கு நெருக்கமான டாக்டர் .ராஜமாணிக்கம் நடத்தும் திருச்சி தில்லைநகரில் உள்ள சிதார் மருத்துவமனை ஆகிய இரண்டு மருத்துவமனைக்கும், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள தடை விதித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
அந்த வகையில் சமீபத்தில் மட்டும் மதுரை மாநகராட்சியில் 200கோடி முறைகேடு, அதனை தொடர்ந்து மதுரை திருப்புவனம் லாக் அப் டெத், தற்பொழுது கிட்னி திருட்டு, என திமுக ஆட்சியின் மீது மக்களுக்கு மேலும் வெறுப்பை ஏற்படுத்தும் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருவது குறிப்பிடதக்கது.

