ஒரே ரூமில் வடிவேலு – கோவை சரளா… நீண்ட நேரம் கதவு திறக்கவில்லை… அட கடவுளே…

0
Follow on Google News

நடிகர் வடிவேலு மார்க்கெட் இழந்து கடந்த சில ஆண்டுகளாக குறைவான படங்களில் நடித்து வந்தாலும், முந்தைய காலகட்டத்தில் வருடத்திற்கு 10 படம் 15 படம் என்று பிசியாக நடித்துக் கொண்டிருந்தார். கவுண்டமணி செந்தில் என்ற இரு காமெடி ஜாம்பவான்களின் காலத்திற்குப் பிறகு தமிழ் சினிமாவில் கோலோச்சி நின்றவர் வடிவேலு. இப்படி தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் எல்லா படங்களிலும் ரவுண்ட் கட்டி நடித்து வந்த வடிவேலு.

ஒரு கட்டத்தில் எப்படி மிக குறுகிய காலத்தில் மிக பெரிய உச்சத்திற்கு வடிவேலு சென்றாரோ, அதே போன்று ஒரே அடியாக கீழே விழுந்த வடிவேலுவை வைத்து படம் எடுக்க எந்த ஒரு இயக்குனரும், தயாரிப்பாளரும் முன் வரவில்லை, இதனால் சுமார் பத்து வருடங்களுக்கு மேலாக பட வாய்ப்பு சரியாக அமையாமல், இழந்த மார்க்கெட்டை மீட்டெடுக்கு முயற்சியில் இறங்கிய வடிவேலுக்கு கை கொடுக்கவில்லை, இந்நிலையில் சமீப காலமாக கடுமையான விமர்சனங்களுக்கு ஆளாகி வருகிறார் வடிவேலு.

இவை அனைத்திற்கும் காரணம் வடிவேலுவின் தலைக்கனம், சக நடிகர்களை அவர் நடத்தும் விதமும் தான். ஆம்,நடிகர் வடிவேலு என்னதான் சினிமாவில் கொடி கட்டி பறந்தாலும் சக மனிதரிடம் நடந்து கொள்ளும் விதம் என்பது மோசமானதாகத்தான் இருந்திருக்கிறது. வடிவேலுவின் நடவடிக்கைகள் குறித்து அவருடன் நடித்த சக நடிகர்களே பல இடங்களில் புகார் அளித்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமாவில் தன்னுடைய நகைச்சுவையான பாடி லாங்குவேஜின் மூலம் உயந்த பல நடிகர்கள் உள்ளனர். அப்படி திறமை மிக்க காமெடி நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் சிங்கமுத்து. இவரும் வடிவேலும் பல திரைப்படங்களில் இணைந்து நடித்திருக்கின்றனர். சிங்கமுத்து வடிவேலுவை பற்றி இதற்கு முன்பு ஒரு நேர்காணலில் பேசியதில், “வடிவேலு செய்ததெல்லாம் எனக்கு மட்டும்தான் தெரியும். அவரெல்லாம் துபாய் பக்கம் சென்றால் கல்லை விட்டு அடிப்பார்கள். அந்த அளவிற்கு அட்டகாசம் செய்துள்ளார் என சிங்கமுத்து தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் நீண்ட இடைவேளைக்கு பின்பு இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி இருக்கும் நடிகர் வடிவேலு குறித்து இயக்குநர் வி.சேகர் தெரிவித்துள்ள விஷயம் மிக பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதில் “நான் இயக்கிய ஒரு படத்தில் வடிவேலுவுடன் கோவை சரளாவை ஜோடியாக வைத்து கமிட் செய்தேன் என தெரிவித்த இயக்குனர் வி சேகர்.

மேலும் அந்த ஷூட்டிங்கின்போது என்னிடம் வந்த வடிவேலு, எதற்காக எனக்கும் சரளாவுக்கும் தனித்தனி மேக்கப் ரூம் போட வேண்டும். ஒரே ரூமாக போடுங்கள். உங்களுக்கு செலவு மிச்சமாகும். பட்ஜெட்டும் கட்டுக்குள் இருக்கும் என வடிவேலு தன்னிடம் தெரிவித்ததாக கூறிய வி சேகர். மேலும் உடனே நமக்கு எவ்வளவு நல்லது செய்கிறார் என்று நினைத்து , வடிவேலு – கோவை சரளா இருவருக்கும் ஒரே ரூம் போட்டிருக்கிறார் இயக்குனர் வி சேகர்.

இதனை தொடர்ந்து வடிவேலு – கோவை சரளா இருவரும், ஒரே ரூமுக்குள் போனதும் கதவை சாத்திக்கொண்டு திறக்கவே இல்லை என்றும், உதவி இயக்குநர் ஒருவர் வந்து, ‘சார் அவர்கள் கதவையே திறக்கமாட்டேன் என்கிறார்கள். நீண்ட நேரம் தட்டி பார்த்துவிட்டேன் என தன்னிடம் கூறியதாகவும், உடனே டென்ஷன் ஆகி இந்தப் படத்தில் சரளாவுக்கு ஜோடியாக நடிக்க தேவையில்லை என்று சொல்லி துரத்திவிட்டேன்” என இயக்குனர் வி சேகர் தெரிவித்துள்ளார்.